Thursday 26 January 2017

2.7 அபராத் தாற்றாமை

துச்சிலை விரும்பித் துயர்கொளும் கொடியேன்
துட்டனேன் தூய்மை ஒன் றில்லா
எச்சிலை அனையேன் பாவியேன் என்னை
என் செய்தால் தீருமோ அறியேன்
பச்சிலை இடுவார் பக்கமே மருவும்
பரமனே எம்பசு பதியே
அச்சிலை விரும்பும் அவருளத் தமுதே
ஐயனே ஒற்றியூர் அரைசே

மனிதன் தீய குணங்களால் கெட்டு சீரழிந்து போகிறான்.
உடலும் மனமும் தூய்மையிலாது போகிறான். குப்பைத்
தொட்டியில் போடும் எச்சில் போல் ஆகிவிடுகிறான்.
பாவம் செய்து செய்து பாவியாகி விடுகிறான்.

யாவர்க்குமாம் இறைவர்க் கொரு பச்சிலை இறைவனுக்கு
பால்பழம் சித்திரான்னங்கள் ஆடம்பர பூசை ஒன்றும் வேண்டாம்
ஒரு பச்சிலையை எடுத்து உள்ளன்போடு அவனை நினைத்து
அவன் திருவடியில் சமர்பித்தாலும் போதுமே! பக்தி செய்தால்
கிட்டும் குருவடி! மேலும் போகலாம்அரனடி! திருவடி! எம்பசுபதியே
எம்பசு என்றால் சீவன்! பசுபதியே என்றால் என் சீவனுக்கு
சீவனானவனே! சீவனுக்குள் சிவனானவன்! ஜோதியுள் ஜோதி!
நமக்கு அச்சாணியாக விளங்குபவன். நம் உடலாகிய தேர்
ஓட அச்சாணியாக அச்சிலாக இருப்பவன் ஒளியாகிய இறைவன்.

கண்மணி சக்கரத்தின் அச்சாணியாக இருப்பவன் ஒளியாகிய
இறைவனல்லவா? கண்மணியில் ஒற்றியிருக்கும் ஒளி!
அச்சாணி இல்லாத தேரை பாடையில் ஏற்றவேண்டியது தான்!
உயிராகிய ஒளியாகிய அச்சாணி கழன்று விட்டால் இறந்தவனாகிறான்.
அவனை - சிவமற்ற சவத்தை தேர்ப்பாடை கட்டி எட்டுகாலில்
நாலுபேர் சுமந்து சுடுகாட்டிலே போடுவார்!?

சிவம்இருக்கும் போது எட்டுகாலில் - எட்டாகிய இறைவன் இருக்கும்
திருவடியில் போகத்தெரியாதவனை சிவம் போன பின்பு சுடு காட்டில்
எட்டுகாலில் - நாலுபேர் சுமந்து போவார்! உயிராகிய சிவம் இருக்கும்
போது அந்த ஒளியை அடையாத உன்னை சவமான பின்  பெருந்தீ
மூட்டி உடலை போட்டுவிடுவர். செத்த பிறகாவது உன் உடல் ஒளியாகட்டுமே
என்ற அற்ப சந்தோசம் உன் உறவினர்களுக்கு!! மனிதனாக பிறந்தால்

வினையற்று திருவடியை சரணாகி உடலை ஒளியாக்கி பேரின்பம்
பெறனும் ! இதுவே மிக மிக உயர்ந்தநிலை!! நாம் ஒளியாகனும்!
இல்லையேல் ஒளியிலே வைத்துவிடுவர்!

உரப்படும் அன்பர் உள் ஒளி விளக்கே - பாடல் 3 

தவம் செய்து செய்து உறுதிப்பட்ட உள்ளத்தில் கண்மணி உள்ளில்
விளங்கும் ஒளிவிளக்கு!

கண்ணிலே விளங்கும் அரும்பெறல் மணியே - பாடல்5

நம் கண்ணிலே விளங்கக் கூடிய மணியே நாம் அருமையாக
செய்த தவத்தால் பெற்ற பயனாகும்.

ஐந்தாம் பூதமே ஒழியாப் புனிதமே புதுமணப்பூவே பாதமே
சரணம் சரணம் - பாடல் 10

பஞ்சபூதங்களும் ஒன்றான என்றும் புனிதமான ஒளியே! 
என்றும் மனமுள்ள கரும் - பூவே - கண்மணி பூவே. கருப்பு
பூ  கண்மலர் பூ ஒன்றே கருப்பு -பூ -  கரும்புஎன்றானது . 
ஒப்புயர்வுற்ற இந்த திருவடியே  சரணம் சரணம் என்றிருப்பவரே
உய்வர்! மரணமிலா பெருவாழ்வு பெறுவார்!

Wednesday 25 January 2017

2.6. அச்சத் திரங்கல்


துறையிடும் கங்கைச் செழுஞ்சடைக் கனியே
     சுயம்பிர காசமே அமுதில்
கரையிடும் கண்டத் தொருபெருங் கருணைக்
     கடவுளே கண்ணுதற் கரும்பே
குறையிடும் குணத்தால் கொடியனேன் எனினும்
     கொடுந்துய ரால்அலைந் தையா
முறையிடு கின்றேன் அருள்தரா தென்னை
     மூடன்என் நிகழ்வது முறையோ

         நீர் நிறைந்த இடத்தில் சிவந்த ஒளி கலைகளை கொண்டு தன்னில்தானே
தோன்றி ஒளிர்கின்ற ஒளிகொண்ட கண்ணே - சிவமே! நீயே சுயம் ஜோதி!
நம் கண் மணி மத்தியில் உள்ள துவாரத்தில் உள்ளது இரு வினையாகிய
மறைப்பு அதுவே விஷம் எனப்பட்டது! நாம் பிறரை குறை கூறாது இறைவனிடம் நம்மைப் பற்றி முறையிடுவதே சிறப்பு! ஏன் பிறரை குறைகூறக் கூடாது எனில்,எல்லாவரும் வினை வழியே ஆட்டி வைக்கப்படும் பொம்மைகள்! அறியாமையில் உழலும் மனிதன் குறியுள்ளவனே! அறியாமை நீங்க அறிவு பெருக - துலங்க 'அ ' விலுள்ள ஆண்டவனை - ஒளியை - மெய்ப்பொருளை பற்றுங்கள்!    ஞானம் பேரறிவு கிட்டும்!

பொருள் எலாம் புணர்க்கும் புண்ணியபொருளே - பாடல் 3
 

        இந்த பிரபஞ்சத்திலுள்ள எல்லா பொருட்களிலும் உள்ளிலும் இருப்பவன்
புண்ணிய பொருளான மெய்ப்பொருளான ஒளியே - இறைவன் . அணுவிற்கும்
அணுவானவன்! தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்! அவன் இல்லாத  இடமே இல்லை!

ஆண்டவநின் கருணைக் கடலிடை ஒருசிற் றணுத்துணைத் திவலையே
வேண்டினும் வேண்டாவிடினும் ஆங்களிக்கும் விமலனே - பாடல் 4
      

நாமெல்லாம் , இறைவனாகிய பெருங்கருணை ஒளிக்கடலின் ஒரு சிறு
அணு அளவு ஒளியிலும் ஒரு திவலையே! நம் எல்லோர் உள்ளிலும் ஒளியாக
துலங்கும் அந்த அருட்பெருஞ்சோதியே , வேண்டினவர் வேண்டாதவர் எல்லோருக்கும்

அருள் கொடுக்கின்றது . விருப்பு வெறுப்பு அற்றவன் அல்லவா இறைவன்! நாத்திகம் பேசும் மடையர்களுக்கும் அருள்பவனே கருணைக் கடலான இறைவன். ஏனெனில் எல்லா உயிர்களும் அவன்படைப்பல்லவா? எல்லோரும் அவன் பிள்ளையல்லவா? எவ்வளவுதான் அயோக்கியனானாலும் உலகிலே பெற்றதாய் பிள்ளையை
வெறுக்கமாட்டாள். உலகத்தையே பெற்ற தாயான கடவுளா வெறுப்பார்?! மூடனுக்கும் பஞ்சமா பாதகம் புரிபவனுக்கும் அருள் கொடுத்து வாழவைப்பவனே அருட்பெருஞ்ஜோதியான ஆண்டவன். மூடன்- கவி காளிதாசன் ஆனான்! வேடன் - கண்ணப்பன்ஆனான்! காடன் - வால்
மீகி ஆனான்! நாடன் - அருணகிரிநாதர் ஆனான்! இன்னும் எத்தனையோ பேர் ஏற்றம் பெற்றனரே! எந்தை அருட்பெருஞ்சோதி அருளினாலே!

கருமையிற் பொலியும் விடநிகர்துன்பக் களைகளைந்  தெனை விளைத்தருளே - பாடல் 5

       கருமையிற் பொலியும் - கருமையத்தில் பொலிவுடன் இருக்கும்
- நம் கண்மணி மையத்தினுள் பொலிவுடன் துலங்கும் ஒளி! விடநிகர்
துன்பகளை களைந்து - விஷம் என நம்மிடம் இருப்பது!. நம்கண்மணி
துவாரத்தை அடைத்துகொண்டிருக்கும் வினையாகிய களைகளை
அகற்றவேண்டும்! களை பறித்தால் தானே பயிர் செழித்து வளரும்!
நம் வினையாகிய களை பறிப்பதே நாம் செய்யும் கண்மணி ஒளி
தவமாகும். ஒளிதவம் ஓங்க ஒங்க ஞானபயிர் வளரும். முக்தியடையலாம.



ஞானசற்குரு சிவசெல்வராஜ்
திருஅருட்பாமாலை

Sunday 15 January 2017

2.5 கலி முறையிடு


பொய்விடு  கின்றிலன்  என்றெம்  புண்ணியா
கைவிடு கின்றியோ கடைய  னேன்தனைப்
பைவிடம்  உடையவெம்  பாம்பும் ஏற்றநீ
பெய்விடம் அனையஎன்  பிழைபொ  றுக்கவே

       பொய்விட்டு மெய் கொண்டு  -  மெய்ப்பொருள் தனை உணர்ந்து
தவம் செய்தாலே உய்யலாம் ! அன்றி நாம் செய்வதெலாம் சொல்வதெலாம்
விஷம் போன்று மற்றவர்களுக்கு வேதனை தருமானால் இறையருள் எங்ஙனம் கிட்டும் ?

பைவிடம் உடைய வெம்பாம்பும் ஏற்ற நீ கண்மணி பையுள் விஷம்
நிறைந்த நம்பாவ கர்மவினையை சுமந்து தானே உள்ளே சிவமாகிய ஒளி
உள்ளது ?! பஞ்சமா பாதங்களில் ஒன்று "பொய் " சொல்லுதல்! பொய் சொல்லாமல் சத்தியமாக - உண்மை பேசியே வாழ்ந்த "ஹரிச்சந்திரன் " கதை நாமறிவோமல்லவா ?

ஒருவன் சத்தியம் பேசி வாழ்வானானால் அவனிடம் எல்லா நற்குணங்களும்
வந்து மேன்மையடைவான் ! ஒரு பொய் சொன்னால் அதை மறைக்க இன்னொரு பொய் என அவன் வாழ்க்கையும் பொய்யாகிவிடும் .

       நமது வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் ஆரம்பித்த தர்மச்சாலைக்கு
சத்திய தர்மச்சாலை எனப்பெயரிட்டார் . ஞான சபைக்கு சத்திய ஞான சபை
என பெயரிட்டார். " சத்திய மேவ ஜெயதே"

        கடவுள்தான் சத்தியம! சத்தியம் தான் கடவுள்! சத்தியமே ஜெய்க்கும்.

2.4 சிறு விண்ணப்பம்


பண்ணால் உன் அருட்புகழைப் பாடு கின்றார்
பணிகின்றார் நின்அழகைப்  பார்த்துப்  பார்த்துக்
கண்ணார உளங்குளிர்க் களித்தா நந்தக்
கண்ணீர்கொண் டாடுகிறார் கருணை வாழ்வை
எண்ணாநின் றுனை எந்தாய் எந்தாய் எந்தாய்
என்கிறார் நின்அன்பர் எல்லாம் என்றன்
அண்ணாநான் ஒருபாவி வஞ்ச நெஞ்சத்தால்
அலைகிறேன் என் செய்கேன் அந்தோ அந்தோ

இறைவன் அருள்பெற்ற அடியார்கள் திரு அருட்பாக்களை
பாடி ஆடி பணிகின்றனர்! இறைவன் கண்மணியில் ஒளியாக
துலங்கும் அழகை பார்த்து பார்த்து தவம் செய்து கண்ணீர்
அருவியென கொட்ட பேரானந்த பரவசத்தோடு கண்குளிர
காண்கிறார் சிலர்! இறைவா என் கண் மணியிலே ஒளியாக
கருணையோடு கலந்து அருள் புரிகின்றதை உணராமல்
அறியாமல் வெறுமனே எந்தாயே எந்தந்தையே இறைவா என
கதறுகின்றனரே! நம் பாவ வினையால் ஆன நெஞ்சம்
அலையாமல் கண்மணி ஒளியிலே எண்ணியிருக்கச்
செய்வதே உத்தமம்.

நையா நின்றுலைக்கின்ற மனத்தால் - பாடல் 5

நம் மனமே  வினைகளின் இருப்பிடம்! வினைகளை செயலாற்றுவதே
மனதின் வேலை! இந்த பொல்லா மனம் துன்பம் அறியாவிட்டால்
உலக மாயையில் சிக்கி சுகபோகத்தில் உழன்று மேலும் மேலும்
பாவத்தை சேர்க்கும். இந்த மனதை அடி அடி என அடித்து நொறுக்கினால்
- நைய புடைத்தால் தான் புத்தி வரும்! துன்பம் தான் - நாம் செய்த பாவம்
தீர்ந்தால் தான் பேரின்பம் - இறைவனை அடைய பாதை திறக்கும்!
மகாபாரதத்தில் குந்தி தேவி கண்ணனிடம் கேட்ட வரம் "எனக்கு
எப்போதும் துன்பத்தையே கொடு " என்று தானே! அப்போது தானே
சதா காலமும் நாம் கண்ணனை நினைப்போம். அப்போது தானே கருணை
கிட்டும். 


பெண்மையுறும் மனத்தாலே திகைத்தேன் நின்சீர்
பேசுகிலேன் கூசுகிலேன் பேதை - பாடல் 8

நம் மனம் பெண்மை தன்மையுடையது. பேதமை என்பது பெண்ணிற்கணிகலம் ஆதலால் பேதை என்பர். பேதை மனமானது இறைவனின் புருஷோத்தமனின் சீர் ஆகிய கண்மணி ஒளியை அறியாது - உணராது திகைத்து வெட்கப்பட்டு செயல்படாது போகிறது.
ஆத்மாக்களாகிய நாம் பெண்! ஆண்டவனாகிய அருட்பெருஞ்ஜோதியே  ஆண் ! ஆத்மா பரமாத்மா சேர்வதே பேரின்பம்.

Saturday 14 January 2017

2.3 பெரு விண்ணப்பம்



இருள்ஆர் மனத்தேன் இழுக்குடையேன்
எளியேன் நின்னை ஏத்தாதே
மருள்ஆர் நெஞ்சப் புலையரிடம்
வாய்ந்து வருந்தி மாழ்கிறேன்
அருள்ஆர் அமுதப் பெருக்கே என்
அரசே அதுநீ அறிந்தன்றோ
தெருள்ஆர் அன்பர் திருச்சபையில்
சேர்க்கா தலைக்கும் திறம்அந்தோ


நம் கண்மணியில் அருள்தரும் அமுதமாக, நம் தலைவனான
ஒளிக்கடவுள் இருப்பதை அறிந்து உணர்ந்து தவம் செய்யும்
மெய்யடியார் திருச்சபையில் என்னை சேர்ப்பாய் என சரணடைவோம்
திருவடியில்! இல்லையெனில் எல்லா துர்க்குணங்களும் கொண்டு
வினையால் அழுந்தி துன்மார்க்கிகளுடன் சேர்ந்து கெட்டுப் போக
நேரிடும்.

கண்ணார் நுதற் செங் கரும்பேமுக்
கனியே கருணைக் கடலே - பாடல் 5

கண்ணில் இருப்பவனே செங்கரும்பே - தவத்தால் சிவக்கும்
வெள்ளை விழி. இனிமையானவனே மூன்று கண்ணே முக்கண் -
காயாக இருக்கும் நம் மூன்று கண்ணும் கனியாக வேண்டும்
காய் கனிய வேண்டுமானால் ஊத்தம் போடுவார்களல்லவா?
நாமும் நம் கண்மணி ஒளியை பெருக்கினால் காயான கண்
கனியாகும். அதன் பின் கருணைகடல்  அருள் மாரிபொழியும்.

ஞான சற்குரு சிவ செல்வராஜ்

2.2 பிரார்த்தனைப் பதிகம்



அப்பார் மலர்ச்சடை ஆரமு
தேஎன் அருட்டுணையே
துப்பார் பவள மணிக்குன்றே
மேசிற்  சுகக்கடலே
வெப்பார் தருதுய  ரால்மெலி
கின்றனன் வெற்றடியேன்
இப்பார் தனில் என்னை அப்பா அஞ்
சேல் என ஏன்று கொள்ளே


கண்மணி மலரின் உள்ளே அப்பால் ஒளிக் கலைகளை உடைய
ஆரமுதே! எந்தன் அருள் துணையே ! அதில் தோய்வார்க்கு கண்மணி
ஒளியிலே நின்றால் பவளம் போல் சிவந்த கண்ணாகி மணியாகும்
அதுவும் சுகமான அனுபவமே! அங்ஙனம் தவம் செய்யும் போது
ஏற்படும் வெப்பம் சுத்த உஷ்ணம். அதைக்கண்டு அஞ்ச வேண்டாம்
உள்ளிருக்கும் ஒளியே காத்து அருளும்.

மெய்யகத் தேநின்றொளிர் தரும் ஞான விரிசுடரே - பாடல் 7

நம் மெய்யாகிய உடலின் உள் நின்று நம் கண்மணி ஒளியாக
ஒளிரும் இறைவன் உள்ளே பரந்துவிரிந்து பேரொளியாக ஒளிரும்
ஞானச்சுடர்!

எண்டோள் மணிமிடற் றெந்தாய்
கருணை இருங்கடலே - பாடல் 9


எட்டுத்தொள் மணி - எட்டு என்பது தமிழில் அ. அதில் தானே -
கண்ணில் தானே மணி உள்ளது? கண்மணியில் இருக்கும் என்
தாயே கருணை பொழியும் இருக்கடலே - இருகண்ணே!

Friday 13 January 2017

2.1 கருணை விண்ணப்பம்


நல்லார்க் கெல்லாம் நல்லவன் நீ
ஒருவன் யாண்டும் நாயடியேன்
பொல்லார்க் கெல்லாம் பொல்லவன் நான்
ஒருவன் இந்த புணர்ப்பதால்
எல்லாம் உடையாய் நினக்கெதிரென்
றேண்ணேல் உறவென் றெண்ணுக ஈ
தல்லால் வழக்கென் இருமைக்கும்
பொதுமை அன்றோ அருளிடமே
 
இறைவா உன்னை நாடிடும் நல்லவர்கள் எல்லோர்க்கும்
நல்லவன் நீ ஒருவனே! நாயினும் கடையாய கீழ் குணங்களை  பெற்ற
பொல்லாதவர்களே! இந்தப் புணர்ப்பதணால் – நம் கண்மணி ஒளியை
நாம் சேரும் நிலையே! இறைவா உன்னை கலந்தே உறவாட எண்ணும்
இப்பாவியின் வினைகளை நீக்கி அருள்வாயாக! நான் உனக்கு உறவே!
அடியேன் உந்தன் பாத மலரில் சரணமே!

 நினை அன்றி வேற்றுத்தெய்வம் நயவேற்க்குத் திடமே அருள் – பாடல் 2

இறைவா! அருட்பெருஞ்சோதி ஆண்டவா! உன்னை யன்றி – என் கண்மணி
ஒளியாக துலங்குபவனே! நாடியே நின்ற – நிற்கின்ற எனக்கு வேறு தெய்வம்
இல்லை! எல்லாம் வல்ல ஏக இறைவனே நீ என உணர்ந்து திடமாக நிற்க
அருள்வாயாக!

ஞான சற்குரு சிவசெல்வராஜ்
திருவருட்பா மாலை

Saturday 7 January 2017

52 தனித்திருத்தொடை



என்னிரு கண்ணின் மேவும்
இலங்கொளி மணியே போற்றி

பன்னிரு படைகொண் டோங்கும்
பன்னிரு கரத்தோய் போற்றி
மின்னிரு நங்கை மாருள்

மேவிய மணாளா போற்றி
நின்னிரு பாதம் போற்றி
நீள்வடி வேல போற்றி

என் இரு கண்களில் இலங்கும் மணி ஒளியே போற்றி!
பன்னிரு கரத்தோய் பன்னிரு கலையுடைய சூரிய கலையே!
வலதும் இடதும் இரு நங்கை வலது கண் இடது கண் உள்
மேவிய முருகா சண்முகா! உன் இருபதாம் திருவடி நீண்ட
வேல்கொண்ட முக்கட்குகனே! மூவிரு முகத்தோனே போற்றி!

செக்கச் சிவந்தே திகழ் ஒருபால் பச்சையதாய் - பாடல் 5
வலப்பக்க ஒளி செக்கச் சிவந்த சிவஒளி. இடப்பக்க ஒளி பச்சை நிற
சக்தி ஒளி.

தாதாதா தாதாதா தாக்குறைக் கென் செய்குதும்யாம்
ஓதாதவமே யழநெஞ்சே - மீதாத்
தாதிதி யென மயிலிற் றானாடி நாளும்
திதிதி தருந் தணிகை தே

தாதாதா தாதாதா தா - ஏழு - தா - எழுதா குறைக்கு என்
செய்வேன். அடியேன் பிறக்கும் போது! வினையால் இறைவனை
அறியாமல் உணராமல் உழலும் நெஞ்சினை உடையவனானேன்!
ஆனால் அருள் கடலான ஒளியான இறைவன் அதிதி போன்று
பலவர்ண ஒளியோடு என் முன் தோன்றினான். அருள் பாலித்தான்!
நமக்கு திதிதி - மூன்று தி   தரும் இறைவன் நம் தணிகையான
கண்மணி ஒளியானவனேயாகும்.

- ஒன்றாம் திருமுறை பூரணம்

ஞான சற்குரு சிவசெல்வராஜ்.
திருஅருட்பாமாலை

Friday 6 January 2017

51 சண்முகர் வருகை


வாரும் வாரும் தெய்வ வடிவேல் முருகரே
வள்ளி மணாளரே வாரும்
புள்ளி மயிலோரே வாரும்.


வருக வருக தெய்வ வடிவேல் - முச்சுடரும் ஒன்றாக்கி தவம் செய்தால்
வரும் ஒளியே முருகர். அவர் வள்ளியாகிய குறமங்கையாகிய நம்
மணாளர் ஆவர். ஆத்மா வள்ளி இறைவன் - முருகர். அவர் ஒளிக் கடவுள்
பல நிற புள்ளி மயிலில் வருவார் வருக வருக.

கண்நுதல் சேயரே வாரும் - பாடல் 4கண்நுதல் - சிவம் - சேயர் - மகன் முருகன் சிவ சண்முகன்.

என் குரு நாதரே வாரும் - பாடல் 5
 என் இரு கண்மணி ஒளியே, சண்முகமே

50 சண்முகர் கொம்மி

குறவர் குடிசை நுழைந்தாண்டி - அந்த
கோமாட்டி எச்சில் விழைந்தாண்டி
துறவர் வணங்கும் புகழாண்டி - அவன்
தோற்றத்தை பாடி யடியுங்கடி 


புறத்தே யலையும் நம் மனதை குறவர் குடிசையுள் திருப்ப வேண்டும்.
குறவர் - சிவம் ஒளி என இங்கே பொருள்படும். சிவம் தங்கிய குடிசையினுள்
நாம் உள் புகுவது. அதாவது அகமுகமாக பயிற்சி செய்வது. கோமாட்டி
எச்சில் - கண் உள் புகுந்தால் - சக்தியாகிய இடது கண் உள்புகும் சக்தியாகிய
இடது கண் உள்புகும் போது மீதி 4 கலையை விரும்பினான் என ஞான
அனுபவம். துறவிகள் - மனதில் உள்ள பற்றுதலை துறந்தவர்! உள்ளத்தில்
கண்மணியுனுள் ஒளியை அறிந்து புகழ்ந்து பாடுவர் ஆடுவர், ஆனந்தம் கொள்வர்.

சீர்திகழ்தோகை மயில்மேலே - இளஞ்
செஞ்சுடர் தோன்றும் திறம்போல - பாடல் 5

நம் கண்மணியாகிய  சீரில் திகழ்கின்ற பலவர்ண மயிலான
ஒளி மேலே இளஞ் செஞ்சுடர் தோன்றும் அதுவே நம் ஆத்ம ஜோதி.

சச்சிதானந்த வுருவாண்டி - பர
தற்பரபோகம் தருவாண்டி - பாடல் 10

சத்து சித்து ஆனந்தம் தருபவன் கண்மணி ஒளி. கண்மணியின் ஒளியே
சத்து. அதை பிடித்தால் நமக்கு சித்துக்கள் கிடைக்கும். அதன் பின்னர்
பேரின்பமே பேரானந்தமே! நமக்கு சத்தாக இருந்து சித்தையும் ஆனந்தத்தையும் தருபவன் நம் கண்மணி ஒளி. சச்சிதானந்த உருவம் கண்மணியே. பரமாகிய இறைவனும்
தற்பரமாகிய நாமும் பரமாத்மா சீவாத்மா கூடினால் கிட்டும் ஆனந்தம்
பரமானந்தம் பேரின்பம் கிட்டும்! சிற்பரத்தில் கூடி மகிழலாம்.

இராப்பகல் இல்லா இடத்தாண்டி - பாடல் 14
இரவு இல்லா இடம் பரவெளிதானே. அந்த இடத்தில இருப்பவனே. நம்
கண்மணி ஒளியும் அது போலவே உள்ளது.

ஒன்றிண்டான உளவாண்டி - பாடல் 15
ஒன்றான அக்னி கலை இரண்டாக இரு கண்களிலும் சூரிய சந்திரனான
உள்ளது.




ஞான சற்குரு சிவசெல்வராஜ்
திருஅருட்பாமாலை

Thursday 5 January 2017

49 திருப்பள்ளித்தாமம் தாங்கல்


வெம்பு முயிருக் கோருறவாய்
வேளை நமனும் வருவானேல்
தம்பி தமையன் துணையாமே
தனையர் மனைவி வருவாரோ
உம்பர் பரவும் திருத்தணிகை
உயர்மா மலைமே யிருப்பவர்க்குத்
தும்பக் குடலை யெடுக்காமல்
துக்க வுடலை யெடுத்தேனே

நம் உயிர் பிரிகையில் நம் உடன்பிறப்புகள் பிள்ளைகள்
உறவினர்கள் மனைவி கூட வரமுடியுமா?
வரமாட்டார்கள்! வரமுடியாது! தேவர்கள் போற்றும் திருவாகிய
ஒளிக்கடவுள் தங்கி துலங்கும் தணிகைமலை - நம் கண்மணியில்
நினைவை நிறுத்தி வாழ்ந்தால் முக்தியுண்டு! அந்த தணிகேசனுக்கு
பூக்கூடை - குடலை கண்மலர் தாங்கிய உடலை எடுப்பது மேன்மை,
அது அறியாவிட்டால் துக்கவுட`லாகுமே!

தொல்லைக் குடுப்பத் துயரதனில்
தொலைத்தே னந்தோ காலமெலாம்
அல்ல லகற்றிப் பெரியோரை
யடுத்து மறியே னரும்பாவி
செல்வத் தணிகைத் திருமலைவாழ்
தேவா வுன்றன் சன்னிதிக்கு
வில்வக் குடலை யெடுக்காமல்
வீணுக் குடலை யெடுத்தேனே
என் வாழ்நாளெல்லாம் தொல்லை தரும் குடும்ப வாழ்வே கதி
என வீணாக கழித்துவிட்டேன்! சம்சார சாகரத்திலிருந்து மீள
வழிகாட்டும் பெரியோரை - நல்ல குருவை நாடி உபதேசம்
பெற்று உருப்பட வழியறியாது போய்விட்ட பாவியானேன்!
 எல்லா செல்வத்தையும் தருகின்ற, நம் குற்றம் தணியும்
இடமான கண் மணி ஒளியை அறிந்து, அந்த தணிகேசன்
சன்னிதிக்கு கண்மலராகிய வில்வகூடையை சுமக்காமல்
- அறியாமல் வீணுக்கு இந்த உடலை எடுத்தேனே என் செய்வேன்!

அவல வயிற்றை வளர்ப்பதற்கே
அல்லும் பகலும் அதனினைவாய்
கலவைப் படுவ தன்றிசிவ
கனியைச் சேர்க் கருத்திலென்
திவலை யொழிக்கும் திருத்தணிகைத்
திருமால் மருகன் திருத்தாட்குக்
குவளைக் குடலை யெடுக்காமல்
கொழுத்த வுடலை யெடுத்தேனே

நாம் நம் வயிறை வளர்பதற்கே இரவுபகலாய் பாடுபட்டு பணம்
சேர்த்து பாழாய் போகிறோம். வயிறு வளர்க்க சாப்பாடு சாப்பாடு
என கூப்பாடு போட்டுத் திரிகிறோம். அதாவது சா + பாடு = சாப்பாடு
- நாம் வாழ்வதற்காக சாப்பிடுகிறோமா என்றால் இல்லை! சாவுக்காக
பாடுபடுகிறோம். சா-பாடு எனத்தானே மனிதன் அலைகிறான். உயிர்வாழ
சிறிது உணவு உண்பவனே ஞானம் பெறுவான்! உடல் வாழ ருசித்து
ரசித்து சாப்பிட்டு சாவை வரவேற்பவரே அதிகம். சாப்பாட்டிலேயே
கவனம் சென்று விடுவதால் உலக வாழ்வே போராட்டமாகி விடுவதால்
மனிதன் அதற்காகவே கவலை படுகிறான். நம்மிடம் உள்ள சிவ கனியை
அறியாது போய் விடுகிறான். சிவமாகிய ஒளியின் கனி சண்முககனி.
கண்மணி ஒளி நம் எல்லா துன்பங்களையும் போக்கும் நம் தணிகாசல
மூர்த்தி திருவடியில் கண்மணியில் சரண் ஆனவன் தப்பித்து கொள்வான்.
இல்லாதவன் அந்த தணிகாசல மூர்த்தி அமர்ந்த குவளை மலரை
அறியாமல் கொழுத்த உடலை எண்ணியே மாழ்வான்.

Wednesday 4 January 2017

48 போற்றித் திருவிருத்தம்



கங்கையஞ் சடைசேர் முக்கட்
கரும்பருள் மணியே போற்றி
அங்கையங் கனியே போற்றி
பங்கையன் முதலோர் போற்றும்
பரம்பரஞ் சுடரே போற்றி
சங்கைதீர்த் தருளும் தெய்வச்
சரவண பவனே போற்றி


வற்றாத கங்கையென கண் நீர் பெருகிவரும் ஒளி கலையே
சடை என்பது. சூரிய சந்திர அக்னி என மூன்று கண் பெற்ற -
தோன்ற அருளும் கண்மணியே போற்றி. அ வாகிய கையின்
உள்ள கனி போன்றது கண்மணி ஒளி போற்றி. பங்கயம் என்றால்
தாமரை. தாமரை - தாள் மறை திருவடி மறைந்துள்ள ஒளியே
போற்றி. அந்த ஒளிக்குள் ஒளிரும் பரஞ்சுடரே போற்றி நம் எல்லா
ஐயங்களும் கண்மணி ஒளியால் தீரும்! ஒளியே கண்மணி ஒளியே
போற்றி.

விண்ணுறு சுடரே என்னுள்
விளங்கிய விளக்கே கண்ணுறு மணியே - பாடல் 6

விண்ணில் விளங்கும் சுடரே என்னுள் விளங்கும் ஒளிவிளக்கு
அது கண்ணில் உறும்மணியின் உள் ஒளியே.

துறையெலாம் விளங்கு ஞான சோதியே - பாடல் 7
நம் உள்புகும் வாசல் - நம் உடம்பின் உள் ஒளியை அடைய -
உள்ளே போக வாசல் துறைமுகம் - துறையில் விளங்கும் ஞான
சோதியே, அகத்தியர் "துறையறி விளக்கம்" என 100 பாடல் எழுதி
கண்மணி திறத்தை விளக்கியுள்ளார். வள்ளல் பெருமானும் எல்லா
துறையிலும் விளங்கும் ஞான ஜோதி என எல்லார் கண்ணிலும்
விளங்கும் ஜோதியை கூறியிருக்கிறார். கடலில் இருந்து கப்பல்
துறைமுகம் வந்து தானே நாட்டுக்குள் போக முடியும். அதுபோல்
சம்சார கடலில் தத்தளித்த நாம் துறைமுகம் அறிந்து அங்கே
நங்கூரம் பாய்ச்சி கப்பலை நிறுத்தி பின் நாட்டுக்குள் - கண்மணி
வீட்டுக்குள் புக வேண்டும்.

ஆதி நின்றாள்கள் போற்றி
அனாதி நின்னடிகள் போற்றி

ஆதியும் அனாதியுமான தாள்கள் நம் கண்மணி. இறைவன் திருவடியே.
முதலும் முடிவானவன் அருட்பெருஞ்சோதி ஆண்டவனே



ஞான சற்குரு சிவசெல்வராஜ்
திருஅருட்பாமலை

Tuesday 3 January 2017

47 இங்கிதப்பத்து



சீர்வளர் குவளைத் தார்வளர் யுயனார் சிவனார்தம்
பேர்வளர் மகனார் கார்வளர் தணிகைப் பெருமானார்
ஏர்வளர் மயின்மே லூர்வளர் நீயமத் திடைவந்தால்
வார்வளர் முலையார் ஆர்வளர் கில்லார் மயலம்மா

குவளை மலர் சூடிய சிவனாரின் பேர் பெற்ற மகன் குகன்
கருமேகங்கள் சூழ்ந்த தணிகை மலையான் மேலோங்கி வளரும்
பலவர்ண ஒளியையுடைய செவ்வேள் மயில் மேல் ஊர்ந்து செல்லும் அழகை
கண்டால் வாரால் மறைக்கப்பட்ட, வினையால் திரையால் மூடப்பட்ட
கண்ணை கண்டால் யாருக்கு தான் ஆசை வராது. கச்சணிந்தமுலை
என்பது திரை மறைத்தகண் எனப்படும்.

தணிகேசர் தந்தாரென்பால் தந்தாரென்னைத் தந்தாரே -பாடல் 2

நான் என் மனம் தணிந்த கண் ஒளியை விழித்து நிலை நிறுத்தி
தியானம் செய்யும் போது தந்தார் என்னிடம் என்னையே! அதாவது
என்னையே நான் காண தந்தார் என் கண்மணி ஒளியான இறைவன்.

வந்தேன் னினிமேல் வாரேன் என்றார் மனமாழ்கி நொந்தேன்
முலைமீதவ்வரை என்றார் - பாடல் 5

நம் கண்மணி ஒளியில் வெளியில் வந்தேன். இனிமேல் வருகிறேன்
என்றார்.புரியாது மனம் பேதலித்தேன். முலைமீது அவ்வுரை என்றார்..
முலை என்றால் கண். கண்மணி மீது ஒளியாக வருகிறேன் என
பரிபாசையாக கூறியதாகும்

Monday 2 January 2017

46 தேவாசிரியம்



யாரது யும்கடு விழியினால் மயக்கும்
ஏந்திழை யவர்  வெந்நீர்த்
தாரை தன்னையும் விரும்பிவீழ்ந் தாழ்ந்தவென்
றனக்கரு ளுண்டாமோ
காரை முட்டியப் புறஞ்செலும் செஞ்சுடர்க்
கதிரவ னிவராழித்
தேரை யெட்டுறும்  பொழில்செறி தணிகையில்
தேவர்கள் தொழுந்தேவே

பெண் மயக்கத்தில் ஆழ்ந்து கெட்டுப் போகாதீர்கள். ஏட்டுறும்
பொழில் செறி தணிக்கையில் - எட்டு 'அ' வலது கண் - சூரியன்
உறுகின்றதில் நம் மனம் தணிந்து தவம் செய்தால் கிட்டும் ஞானம்.
சூரியனின் தேர் ஒரு சக்கரம் உடையது. வலது கண்மணி
1 சக்கரம். எட்டுகுதிரை பூட்டியது என்பது பரிபாஷை. எட்டுதிக்கும்
பாயும் ஒளி சூரியஒளி எவ்வளவு பெரிய ஞானம் வள்ளலார்
உரைத்துள்ளார் பாருங்கள்! அகவழிபாடே! அனைத்தும் ஞானமே!


ஞானசற்குரு சிவசெல்வராஜ்
திருஅருட்பாமாலை
www.vallalyaar.com