Friday 11 November 2016

34 அடியார் பணி அருள வேண்டல்

 எப்பா லவரும் இறைஞ்சும் தணிகை இருந்தருள் என்
அப்பாஉன்  பொன்னடிக் கென் நெஞ் சகம்இட மாக்கிமிக்க
வெப்பான நஞ்சன வஞ்சகர் பாற்செலும் வெந்துயர்நீத்து 
இப்பாரில் நின்னடி யார்க்கேவல் செய்ய வெனக்கருளே


எவ்வுலகில் உள்ள எவரும் வணங்கும் தனிகையான கண்மணி
ஒளியான என் அப்பா! உன் பொன்னடிக்கு என் நெஞ்சத்தில் இடங்கொடுத்து
அருள்புரிவாயாக! தீயவர்கள் பக்கம் நான் போகாமல் தடுத்து காத்து என்
வினையகற்றி உன் மெய்யடியார்க்கு தொண்டு செய்ய அருள் புரிவாயாக!

எய்யா தருள் தணிகாசலம் மேவிய என்னருமை ஐயா - பாடல் 2

நாம் தவம் - கண்மணி ஒளியை எண்ணி எண்ணி தவம் செய்யச் செய்ய
நம் உள்ளிருந்து நம் வினைகள் ஒவ்வொன்றாக நீங்கள் செய்து நம்மை
மேன்மையடைய செய்வான் நம் கண்மணி ஒளியானவான் ! அவன்
அருள் புரிவது கூட நாம் அறியமாட்டோம்.


ஞானசற்குரு சிவசெல்வராஜ்
திருவருட்பாமாலை

---தொடரும்  

33 கையடை முட்டற்க்கு இரங்கல்


 கார்பூத்த கண்டத் தொடுமேவு  முக்கட் கனி கனிந்து 
சீர்பூத் தொழுதுசெந் தேனே தணிகையில் தெள்ளமுதே 
பேர்பூத்த ஒற்றியில் நின்முன்ன ரேற்றிடப் பேதையேனேன் 
ஏர்பூத்த வோண்பளி தம்காண் கிலனதற் கென்செய்வேன்

கார்பூத்த கண்டத்தொரு மேவு முக்கட் கனி - கரிய நிற கண்மணி
மத்தியில் உள்ளே உள்ள மூன்று கண்கனிந்த ! சீர் பூத்து ஒழுகும்
செந்தேனே - பூ பூத்தால் அதில் தேன் இருப்பது போல இறைவன்
நமக்கு அருளிய சீர் - பூ - கண்மலரில் உள்ள ஒளி தவத்தால் இனிமையான
பேரானந்தத்தை கொடுப்பது! தணிகையின் தெள்ளமுதே கண்மணியின் உள்
ஒளியே அமுதமே! பேர் பூத்த ஒற்றியில் உன்முன்ஏற்றிட கற்பூரம்
கிடைக்கவில்லையே என்கிறார். ஒற்றி - திரு ஒற்றியூர்  வெண்பளிதம்
- கற்பூரம் திருவொற்றியூரில் கற்பூரம் கிடைக்கவில்லை என
திருதணிகையில் முறையிட்டரா? வள்ளலார்.  திருதணிகையும் ஊரல்ல!?
திருவெற்றியூரும் ஊரல்ல?! மனம் தணிந்த நிலையே தணிகின்ற கையே
கண்மணி. கண்மணியில் தானே நம் மனம் தணிந்து ஒடுங்கும்! திருவாகிய
இறைவன் ஒற்றியிருக்கும் இடம் நம் கண்மணி உள்ளேதான்- கண்மணி தான்
ஒற்றியூர் எனப்பட்டது!!  இவையெலாம்சங்கேதமொழி. ஞான நிலையை
கூறும் பரிபாசையாகும். ஏர்பூத்த வொண்பளிபாதம் காணவில்லையே
என வள்ளலார் கூறியது கண்மணி உள் ஒளியை - வெள்ளொளியை
- தூய ஒளியை - புகையில்லா ஒளியைத்தான் கிடைக்க வில்லையே
என வருந்தினார். அதாவது சாதனை செய்து செய்து பலகால்
ஆயிற்றே இன்னும் ஒளி தியானம் கிட்ட வில்லையே என அந்த ஒளியாகிய
இறைவனிடமே முறையிடுகிறார்.



கருமருந்தாய மணிகண்ட நாயகன் கண்மணியாம் 
அருமருந்தே தணிகாசலம் மேவுமென் ஆருயிரே - பாடல் 2

கருவிழியுனுள் கண்மணியினுள் நாயகன் ஒளி, இதுவே கருமருந்தாய
மணிகண்ட நாயகன் - கண்மணி இதுவே அருமையான மருந்து. நம் பிறவி
பிணி தீர்க்கும் மருந்து, அந்த மருந்தான ஒளி இருப்பது தணிகாசலத்தில் - என்
கண்மணியில் அதுவே என் ஆருயிர். இறைவன் எனக்கு கொடுத்த சீர் - என்
கண்மணி ஒளி, மாமருந்து





காலெடுத் தம்பலதாடும் பிரான் திருக்கண்மணியே - பாடல் 3 

அம்பலம் என்றால் எல்லோருக்கும் தெரிந்து விட்டது எனப்பொருள்.
சிவன் எல்லோருக்கும் தெரிந்த கண்மணி உள்ளில் ஆடிக்கொண்திருக்கிறான்.
ஒளியே சிவம் அவன் ஆடுவது கண்மணியே.



கண்ணப்பன்  என்னும் திருப்பெயரால் உலகம் புகழும் 
திண்ணப்பன் ஏத்தும் சிவனார் மகன் - பாடல்௪

கண்ணப்பன் - கண்ணை அப்பிய நாயனார் - கண்ணிலே அப்பி வைத்தது
போல் இருப்பவன் உள்ளே இருப்பவன் சிவன். அவன் சிவன் இருப்பது திண்ணமாக! உறுதியாக உள்ளே அப்பியிருக்கிறான். அதனால் சிவனே
நம் திண்ணப்பன். அதாவது நம்மில் இருக்கும் உயிர்  - ஆத்மா ஒவ்வொரு
ஆத்மாவும் திண்ணப்பன் , நாம் வணங்கும் இறைவன் அருட்பெருஞ்ஜோதியின் மகன் முருகன் நம் கண்மணியிலிருந்து வெளிப்படும் ஆறுமுகமான பொருள்! நம் கண்மணி!

ஞானசற்குரு சிவசெல்வராஜ்
திருவருட்பாமாலை

---தொடரும்  

Thursday 3 November 2016

32 எண்ண தேங்கல்


போதுகொண் டவனும் மாலும்நின் றேத்தும்
புண்ணிய நின்திரு அடிக்கே
யாது கொண் டடைகேன் யாதுமேற் செய்கேன்
யாது நின் திருவுளம் அறியேன்
தீது கொண் டவன்என் றெனக்கருள் சிறிதும்
செய்திடா திருப்பையோ சிறியோன்
ஏதிலன் செயலொன் ரிலையெனக் கருதி
ஈவவையோ தணிகை வாழ் இறையே

நான்முகனும்  திருமாலும் போற்றும் புண்ணியமே
இறைவா சுயம் ஜோதியே உன் திருவடிக்கே - என்
கண்மணியில் ஒளிர்பவனே உன்னை அடைய நான் என்ன
செய்வேன்? எதை தருவேன்? உன் திருவுளம் அறியேனே!
பாவிப் பிறவி என என்னை அருளாது விடிடாதே!
தகுதியில்லதவன் என்று என்னை தள்ளி விடாதே! இறைவா
என்ப்போற்றுகிறார் கதறுகிறார் வள்ளல் பெருமான்!

தணிகை வேற்பினுள் ஒளிரருள் விளக்கே - பாடல் 2

நம் மனம் தணியும் கண்மணி குகையுள் ஒளிர்ந்து அருள்புரியும்
விளக்கே அருட்பெருஞ்சோதி அற்புத கடவுளே என்கிறார்
வள்ளலார்!

உன் பொன்னான திருவடி நிழல் கிடைத்தாலே வாழ்வேன்!



ஞானசற்குரு சிவசெல்வராஜ்
திருவருட்பாமாலை

---தொடரும்  

31 உறுதி யுணர்த்தல்


மஞ்சேர் பிணிமிடி யாதியை நோக்கி வருந்துருமென்
னெஞ்சே  தணிகைய னாறெழுத் துண்டுவெண்  ணீறுண்டுநீ
எஞ்சே விரவும் பகலும் துதி செய் திடுதி கண்டால்
அஞ்சே லிதுசத் தியாமமென சொல்லை அறிந்துகொண்டே

தனிகையான ஆறேழுத்து உண்டு! வெண்ணீறு உண்டு! நீ இரவும்
பகலும் துதி செய் என்கிறார் வள்ளல் பெருமான். தணிகையான
கண்!  ஆறேழுத்தை சொல்லச்சொல்ல வில்லை ! உண்ணச் சொல்கிறார்!
ஆறேழுத்தகிய சரவணபவ - வில் உள்ள 'அ' வாகிய வலது கண் ஒளியை
சாப்பிட வேண்டும். எப்படி? சாப்பிட்டால் உள்ளே தானே போகும்!
கண் ஒளி உள்ளே போக வேண்டும் அதைதான் வள்ளலார் உண்ணவேண்டும்
என்றார்.  அதுபோலவே கண்மணி ஒளியை எண்ணி தவம் செய்யும்
போது ஊற்றெடுக்கும் நீர் தான் வெண்ணீறு என்பதாகும். ஒளி அதிகமாக
அதிகமாக அந்த நீரும் உள் ஒளியால் உறிஞ்சப்படும் அதுவே உண்ணுதல்!
இரவு பகலாக தவம் செய்தால் கண் ஒளி பெருகும். முதலில் முருகனும்
பின்னர் சிவனும் காட்சி தருவர் நம் வினையாவும் தீரும்.


ஞானசற்குரு சிவசெல்வராஜ்
திருவருட்பாமாலை

---தொடரும் 

Tuesday 1 November 2016

30 புண்ணிய நீற்று மான்மியம்


திவசங்கள் தொறும்கொண்டிரு தீமைப் பிணிதீரும்
பவசங்கடம் அறுமில்விக பரமும் புகழ்பரவும்
கவசங்கள் எனச்சூழ்ந்துறு கண்ணேறது தவிரும்
சிவசண்முக எனவே அருள் திருநீறணிந் திடிலே


நாம் நம் கண்மணி உள் ஒளியை - சிவ சண்முகனை நினைந்து தியானம் செய்தால் திருவிலிருந்து கண்மணி மத்தியிலிருந்து நீர் அருவியென கொட்டும்! அந்த திருநீர் எப்போதும் இருந்தால் நாள் தோறும் வரும் தீமைகள் ஆகாமியம் வராது. முற்பிறவி துன்பங்கள் பிராரப்தகர்மம், சஞ்சிதகர்மமும் அற்றுப்போகும். இப்படி கண்மணி ஒளியை பெருக்கி கர்மவினை அற்றுப்போகுமானால் உலகமெலாம் நம் புகழ் பரவும். நம்கண்மணி
ஒளி நம் உடலைச்சுற்றி பரவி நமக்கு கவசம் போல் நிற்கும். கண் - திரை - கண்ணில் ஏறி நிற்கும் திரைகள் தவிரும். நலம் பெறலாம். மேலும் கண்மணியில் இருந்து அருவியென பாயும்..திருநீர் அணிந்தவர்க்கு இவ்வுலகில் முக்தியின்பமும் எல்லா பெரும்பேரும் கிட்டும். எல்லா
துன்பமும் அகலும்.

பவணன் புனல் கனல் மண் வெளிபலவாகி 
பொருளாம் சிவசண்முக - பாடல் 3
நிலம் நீர் நெருப்பு  காற்று ஆகாயம் என்ற பஞ்சபூதங்களும் சேர்ந்த பொருளே
- நம் மெய்பொருள் -கண்மணி - அதுவே - சிவமாகிய பரஞ்சோதியின்
சண்முக - ஆறுமுக ஜோதி.  கண்மணி ஒளியே எல்லாமானது

குயிலேறிய பொழில் சூழ் திருக்குன்றேறி 
நடக்கும் மயிலேறிய மணியே - பாடல் 4

கண்மணி ஒளியை எண்ணி தவம்செய்யும் போது, திருக்குன்று
என்பது திரு-மலை திருவாகிய இறைவன் - ஒளி தாங்கியமலை
நம் கண்தான்!  அதன் ஒளிதான் மயில் போல பலவர்ண ஒளிக்கட்சியும்
குயில் போன்ற தசவித நாதமும் கேட்க ஒளியாகிய ஆறுமுகம்
காட்சிதரும்!