Friday 30 December 2016

45 செவியறிவுறுத்தல்



உலகியற் சுடுசுரத் துழன்று நாடொறும்
அலகில் வென் துயர்கிளைத் தழுங்கு நெஞ்சமே
இலகு சிற் பரகுக என்று நீறிடில்
கலகமி லின்பமாம் கதிகி டைக்குமே

நெஞ்சமே உலகியல் மாயையில் சிக்கி புற உஷ்ணம் ஏறி
உழன்று பலப்பல துன்பங்களில் வாடாது தப்ப வேண்டுமானால்
ஓயாது நம் சிற்பரமாம் நம் கண்மணி குகையில் உள்ள ஒளியை
எண்ணி எண்ணி நீர் பெருக தவம் செய்தால் பேரின்பம் கிடைக்கும்.

இவ்வினைச் சண்முக என்று நீறிடில் - பாடல் 3

சண்முகமான - ஆறுமுகமான நம் கண்கள் இரண்டிலும் நீர்
பெறுக, திருவை - ஒளியை நினைந்து தவம் செய்தால் நமக்கு
இல்லை வினையே, அருள் ஞான வாழ்வு கிட்டும். ஒப்பில்லா
சிவபதம் அடையலாம். அந்த=அச்சமே இல்லாத நிலை கிட்டும்.
எல்ல துன்பங்களும் நீங்கி பேரின்பம் கிட்டும்.


ஞான சற்குரு சிவசெல்வராஜ்
திருஅருட்பாமாலை
www.vallalyaar.com

43 திருவருட் பேற்று விழைவு


உலகம் பரவும் பரஞ்சோதி
யுருவாம் குருவே யும்பரிடைக்
கலகம் தருசூர்க் கிளை களைந்த
கதிர்வே லரசே கவின்தருசீர்த்
திலகம் தருவா ணுதற் பரையின்
செல்வப் புதல்வா திறதனால்
இலகுங் கலப மயிற் பரிமேல்
ஏறும் பரிசென் நியம்புகவே



உலக மெங்கெங்கினும் பரவி நிற்கும் பரம்ஜோதி யுருவான
குருவே, நம் மனத்தே வாழும் துருக்குணங்களாகிய அசுரர்களை
வேலால் அழிக்கும் சண்முக ஒளியே, அழகான திலகமென இரு
கண் உள் ஒளிர்ஒளியே நெற்றிக்கு உள்ளே விளங்கும் சோதியே!
சக்தியின் புதல்வனே! தவம் மேலோங்கிய நிலையில் முதலில்
ஊர்ந்து செல்லும் மயில் பின் குதிரை போல் வேகமாக உள்
ஓடிடும் திறத்தை என் சொல்வேன் என்கிறார் வள்ளலார்?

அடியார்க்கு கடிமையாக்குகவே - பாடல் 3
இறைவா உன் திருவடி அறிந்து உணர்ந்து தவம் செய்யும் மெய்யடியார்க்கு
நான் அடிமையாவது என் பெரும் பாக்கியமே! அருள்புரி தணிகை பெருமானே.

சடமான மலத்தால் வருந்தாப் பெருவாழ்வால் மகிழ்வேன். பாடல் 7
நமது உடலே மும்மலங்கலால் ஆனது. உண்டதெல்லாம் மலமே
இந்த மலமான உடலால் வருந்தாமல், என் கண்மணி ஒளியை
பெருக்கி மலத்தை அகற்றி இவ்வுடலை தூய ஒளியுடலாக்கி வாழ்வேன்
மகிழ்வேன் என்கிறார் வள்ளலார்!

சீறும் பிணியும் கொடுங்கோளும் தீயவினையும் செறியவே - பாடல் 10
கொடிய நோய்கள் நவகோள்களால் வரும் துன்பங்கள் நாம் செய்த வினையால் உறும் கஷ்டங்கள் யாவும், ஆறுமுகமான ஒளிக்கடவுளை - நம் கண்மணி ஒளியை  நாம் பற்றினால் இல்லாது  போதும்!

அதன் பின் பரந்த இவ்வுலகில்  எருமைவாகன எமன் அதிகாரம் செல்லாது
போய்விடும்! மரணம் மரணமடைந்து விடும்.

44 செல்வச் சீர்த்தி மாலை


அடியார்க் கெளியர் எனும்முக்கன்
ஐயர் தமக்கும் உலகீன்ற
அம்மை தனக்கும் திருவாய்முத்
தளித்துக் களிக்கும் அருமருந்தே
கடியார் கடப்ப மலர்மலர்ந்த
கருணைப் பொருப்பே கற்பகமே
கண்ணுள் மணியே அன்பர்மனக்
கமலம் விரிக்கும் கதிரொளியே
படியார் வளிவான் தீமுதல்ஐம்
பகுதி யாய பரம்பொருளே
பகர்தற் கரிய மெய்ஞ்ஞானப்
பாகே அசுரப் படைமுழுதும்
தடிவாய் என்னச் சுரர்வேண்டத்
தடிந்த வேற்கைத் தனிமுதலே
தணிகா சலமாம் தலத்தமர்ந்த
சைவ மணியே சண்முகனே.


சைவத்துக்கும் சக்திக்கும் பிறந்த அருமருந்தே! வலது கண்ணாகிய
சிவமும் இடது கண்ணாகிய சக்தியும் சேர்ந்தால் நமக்கு முன்
ஆறுமுக ஒளிக்கடவுள் - நம் இருகண்ணும் தோன்றும்! கண்மலர்
மலர்வதால் கருணை பிறக்கும். கண்ணுள் மணியே சாதனை செய்பவர்
கண்மறைப்பை விரித்து இல்லாதாக்கும் உள் ஒளியே! ஐம்பூதங்களாலான
பரம்பொருளே! சொல்ல முடியாத அளவு பேரின்பம் தரும் மெய்ஞ்ஞானப்பாகே!  நம் உள்ளத்தில் குடி கொண்டிருக்கும் அசுரர் அனைவரையும் வேலால்  முக்கண் ஒளியால் கொன்ற தணிகை யமர்ந்த மனதுக்கு இசைந்த நிலையில் அருள்பவனே ஆறுமுக ஒளிக்கடவுளே.

ஓயாதுயிருக்குள் ளொளித் தெவையும் உணர்த்தி தெய்வப்பதியே
முதற்கதியே திருச்செந்தூரிற் றிகழ்மதியே - பாடல் 2


எப்போதும் உயிருள் ஒளியாய் ஒளிர்ந்து எல்லாவற்றையும் நமக்கு
உணர்த்துபவனே நம் கண்மணி ஒளியாகும்! தெய்வப்பதியே - நம்
கண்மணி அதுவே முதற்கதி. நாம் அனுபவத்தில் காண்பது. திருச்செந்தூரில்
திகழ் மதியே - திருவாகிய ஒளிக் கண்கள் சிவந்து ஒளிரும் போது திகழும்.
அதுவே செந்தூர் என்றது. மதியே - சந்திரக்கலை.

 சத்தவுலக சராசரமும் தாளிலொடுக்கும் தனிப்பொருளே - பாடல் 4

ஏழு உலகமும் இந்த பிரபஞ்சமெலாம் திருவடியில் - தாளில் ஒடுங்கி நிற்கின்ற தனிப் பெரும்பொருளே கண்மணியே. ஏழு உலகம் - நம் உடலில் உள்ள ஏழு ஆதாரங்களும் - நம் உடலிலுள்ள 72000 நாடி நரம்புகளும் நம் கண்மணி ஒளியில் அடக்கம். கண்மணி ஒளியே அனைத்துக்கும் ஆதாரம்.

சாதல் பிறத்தல் தவிர்த்தருளும் சரணாம்புயனே சத்தியனே தணிகாசலமாம் - பாடல் 5


நம் கண்மணி ஒளியை - சத்தியமான நித்திய வஸ்துவை நம் மனம் தணிந்த நிலையில் அமர்ந்து சரணடைந்தால், அங்கேயே நிலை நின்றால் சாதல் பிறத்தல் கிடையாது.பிறப்பு இறப்பு எனும் சூழலில் இருந்து நம்மை மீட்பது திருவடியில் சரணடையும் நிலை ஒன்றே! தேனும் பாலும் பருகினால் தானே இனிக்கும். பருகாமலே உள்ளத்தில் இனிப்பது திருவடி.

ஞான சர்குரு சிவசெல்வராஜ்
திருவருட்பாமாலை
www.vallalyaar.com

Wednesday 28 December 2016

42 திருவருள் விலாசப்பத்து


ஆறுமுகப் பெருங்கருணை கடலே தெய்வ
யானைமகிழ் மணிக்குன்றே அரசே முக்கட்
பேறுமுகப் பெருஞ்சுடர்க்குட் சுடரே செவ்வேல்
பிடித்தருளும் பெருந்தகையே பிரம ஞானம்
வீறுமுகப் பெருங்குணத்தோர் இதயத் தோங்கும்
விளக்கமே ஆனந்த வெள்ள மேமுன்
தேறுமுகப் பெரியவருட் குருவா யென்னைச்
சிறுகாலை யாட்கொண்ட தேவ தேவே


ஆறுமுகங் கொண்ட கருணைக்க கடலே  தெய்வயானை மகிழும்
கண்மணியே, அரசே, மூன்று கண் உடைய பெருஞ்சுடர்க்குள் ஒளிரும்
சுடரே, வேல்கொண்ட முருகனே, பிரம்மஞான கொண்டோர் இதயத்தில்
- இரு உதயத்தில் ஓங்கும் ஒளியே, ஆனந்தத்தை தருபவனே. என் சிறு
வயதிலே என்னை ஆட்கொண்ட தேவர் தேவனே என வள்ளலார் பாடுகிறார்.

நின்னிருதாள் துணை பிடித்தே வாழ்கிறேன் - பாடல் 3

இறைவா உன் இருதிருவடியே துணை என - அதன் ஒளியை பிடித்தே
வாழ்கிறேன்,

கல்வியெலாங் கற்பித்தாய் நின்பால் நேயம் காண வைத்தாய்
இவ்வுலகம் கானல் - பாடல் 3

இறைவா உன் திருவடிகளை பற்றியதால் நீ எனக்கு எல்லா கல்வியும்
கற்பித்தாய்! உன்மேல் அன்பு கொள்ள வைத்தாய்! இவ்வுலக வாழ்க்கை
கானல் நீர் போன்றது என அறியவைத்தாய்!

கற்றறிந்த மெய்யுணர்ச்சி யுடையோ ருள்ளக் கமலத்தே யோங்கு
பெருங் கடவுளே - பாடல் 7

சாகாக்கல்வி கற்ற - குருமூலம் உபதேசம் பெற்றவர் மெய்யுணர்வு
பெறுவர். அவர்கள் உள்ளமாகிய இருதய கமலத்தில் ஓங்கி ஒளிரும் பெருங்கடவுளே!

என்னிரு கண்மணியே எந்தாய் என்னை ஈன்றானே - பாடல் 10
என் இரு கண்மணி ஒளியே - கண்மணியில் ஒளியாக உயிராக இருப்பதால் -
உயிர்கொடுப்பதால் தாய்! என்னை பெற்றதால் ஈன்றவன் தந்தை! எனக்கு உயிர் கொடுத்து தாய் ஆனவன் பெற்றதால் தந்தையுமானான்! இறைவனே அம்மை அப்பன்! உலகில் நமக்கு உடலைத் தந்தது தாய் தந்தை என இருவர்! உயிர் தந்தது தாயுமானவன்!  இறைவன்!

Monday 26 December 2016

41 பவனிச் செருக்கு


பூவுண்டவெள் விடையேறிய புனிதன்தரு மகனார்
பாவுண்டதோ ரமுதன்னவர் பசுமாமயில் மேல்வந்
தாவுண்டன ரெனதின்னலம் அறியாரென விருந்தால்
நாவுண்டவர் திருமுன்பிது  நலமன்றுக் கெனவே
பூ- உண்ட கண்மலர் உள் உள்ள சிவம் வெள்ளை ஒளியாகிய
நம் தீயின் மேலேறி வரும் செந்தீயே! செந்தீயின் சிவனின்
மகன் ஆறுமுகன் நம் கண்மணி ஒளி! நாம் தவம் செய்து கிட்டும்
அமுதம் அகத்தே கொண்ட பச்சை ஒளியின் மேலமர் செவ்வேள் -
செம்மை ஒளி. நாம் தவம் செய்து - கண்மணி ஒளியை நினைந்து
கண் திறந்த நிலையில் உணர்ந்து நெகிழ்ந்தால் இவ்வனுபவம்
காணலாம்!

பசுமயில் மேல் நின்றார் - அது கண்டேன் கலை நில்லாது
கழன்றது - பாடல் 2

பச்சை நிற ஒளிமேல் செவ்வேள் சிவந்த ஒளியான முருகனை
கண்டதும் கண் ஒளி கலை பிரிந்து உள் சென்றது! அதாவது
முருகனை கண்கொட்டாது பார்த்து கொண்டே இருந்தால்
இங்ஙனம் ஒவ்வொரு கலையாக ஒளி பிரிந்து அடுத்த
கலையுடன் சேர்ந்து முடிவில் அக்னி கலையுடன் சேரும்.
மூன்று கலையும் சேர்வதே முழுமையாக சேர்ந்தால்
காணலாம் வேலை! முக்கண்ணை! முச்சுடரை! இதுவே
ஞான நிலை!

மயிலின் மிசை நின்றாரது கண்டேன் நீரார் விழி யிமைநீங்கின
-பாடல் 3


பச்சை மயில் ஏறிவந்த முருகனை கண்டதும் நீர் செரிந்தபடி
இருந்த என் கண்கள் நிலைத்து இமையாமல் நின்று விட்டது.

ஒன்றோடி ரண்டெனும் கண்ணினர் திருமகனார் என்றோடி - பாடல் 4

நாம் கண்மணி ஒளியை நினைந்து உணர்ந்து தவம் செய்யும் போது
இடது கண்ணில் ஆரம்பித்து அங்கிருந்து வலது கண் சூரியனில் வந்து நிற்கும்.

மேல்கலை நீங்கின முலைவீங்கின களிஓங்கின  - பாடல் 5

கண்மணி ஒளியை, கண்ணை திறந்து இருந்து தவம் செய்யும் போது
இடது கண் சந்திரனில் இருந்து சூரிய கலைகள்  சூரிய கலைகள்  - வலது
கண்ணிலுள்ளது அனைத்தும் வந்த பின் அதற்கு மேல் உள்ள கலைகள்
- ஒலிக்கலைகள் நீங்கி அக்னிகலையை சென்றடையும்.

சக்தியாம் சந்திரனை செங்கதிரோன் ஊடுருவில்
முக்திக்கு மூலம் அது - அவ்வைக்குறள்

அப்போது முலை வீங்கியது. இங்கு முலை எனச் சொன்னது பெண்ணின்
மார்பை அல்ல! கண்ணைத்தான் பெண் மார்பு போல கண் இருப்பதால்
கண்ணைத்தான் முலை என்றனர்! அதாவது நாம் தொடர்ந்து கண்ணை
திறந்து தவம் செய்து செய்தால் உள் ஒளி பெருகி உள் ஓடும். ஒளி
உணர்வால் பெருகுவதால் சற்று வீங்கும் கண்! இது தியான அனுபவம்!
அந்த நிலை மிகவும் ஆனந்த பரவசமான நிலையே! இதைத்தான் வள்ளலார்
சொன்னார்.

Saturday 24 December 2016

40 ஏத்தாப் பிறவி யிழிவு



கல்லை யொத்தவன் நெஞ்சினை யுருக்கேன்
கடவுனின்னடி கண்டிட விழையேன்
அல்லை யொத்தகோ தையர்க்குளங் குழைவேன்
அன்பி லாரொடு மமர்ந்தவ முலழ்வேன்
தில்லை யப்பனென் றுலகெடுத் தேத்தும்
சிவபி ரான்றரும் செல்வ நின் றணிகை
எல்லை யுற்றுனை யேத்திநின் றாடேன்
என் செய் வான்பிறந் தேன் எளியனே


நெஞ்சக் கனகல்லும் நெகிழ்த்துருக என அப்பர் சுவாமிகள் பாடுகிறார்.
வள்ளல்ப்பெருமானும் கல்லான நம் நெஞ்சம் உருக வேண்டும் என்கிறார்!
இறைவன் திருவடி காண முயற்சி செய்ய வேண்டும்! அன்பிலாதவர்கள்
இருள்நெறி சேர்க்கும் மாய வலையில் தள்ளுபவரோடு சேரகக்கூடாது.
தில்லையப்பன் சிவன் மகன் தணிகை சென்று அறிந்து உணர்ந்தால்
- கண்மணி ஒளியை சரணடைந்தால் கிட்டும் வீடுபேறு!



 

39 நாள் எண்ணி வருந்தல்


இன்னும் எத்தனை நாள்செலும் ஏழையேன்
இடர்க்கடல் விடுத்தேற
மின்னும் வேற்படை மிளிர்தரும் கைத்தல
வித்தக பெருமானே
துன்னு நற்றணி காசலத் தமர்ந்தருள்
தோன்றலே மயிலேறி
மன்னு முத்தம வள்ளலே  நின்றிரு
மனக்கருத் தறியேனே

கைத்தல வித்தக பெருமானே - என் கைத்தலம் கண்மணி
அதனுள் இருக்கும் வித்தக பெருமான் ஒளியான ஆறுமுகம்.
இந்த கைத்தலம் பற்றினால் தான் முக்கண்ணும் முக்கலையும்
சேரும் வேல் கிடைக்கும். ஒளிக்கடவுளே இன்னும் எத்தனை
நாள் இவ்வுலக மாயையில் சிக்கித்துன்புற வேண்டுமோ!
என் மனம் தணிந்த நிலையில் விளங்கும் இடம் அமர்ந்த முருகா!
பலவர்ண ஒளியாக வந்து காட்சி தருபவனே காத்தருள்வாய்!

தணிகை வாழ் சுத்த சின்மயத்தேவே - பாடல் 2

கண்மணி ஒளி வெளிப்படுவது நம் வினை தீர்ந்து சுத்தமாகும்போது
சின்மயமான கண்மணியில் இருக்கும் தெய்வமே.

ஊழை நீக்கி நல்லருள் தருந்தெய்வமே -பாடல் 3

நமது ஊழ்வினைகள் நீங்க வேண்டுமாயின் தணிகையில் அமர்ந்த
ஜோதிஸ்வரூபமான சண்முகனை தரிசிக்க வேண்டும்.அக்கண்மணி
அருளால் வினை தீரும்.

என் ஆவியே எனை யாள் குருவடிவமே - பாடல் 5

நம் ஆவியே கண்மணி ஒளியாக நம்மை ஆட்டுவிக்கும் நம்
குருவும் தணிகை தெய்வமே!

Thursday 22 December 2016

38 தரிசன வேட்கை


வேல்கொளும் கமலக் கையனை எனையாள்
மெய்யனை ஐயனை யுலக
மால்கொளும் மனத்தர்  அறிவுரு மருந்தை
மாணிக்க மணியினை மயில்மேல்
கால்கொளும் குகனை எந்தையை யெனது
கருத்தனை அயனரி யரியாச்
சால்கொளும் கடவுள் தனியருள் மகனைத்
தணிகையில் கண்டிறைஞ் சுவனே


என்னை ஆண்டு கொண்டிருக்கும் மெய்ப்பொருளே, தாமரை
கையில் வேல் ஏந்தியவனே தலைவனே, உன்னை உலக
மாயையில்  சிக்கிய மனமுடையார் அறியமாட்டார். உலக
மாயை மயக்கம் தீர ஒரே மருந்து உன் திருவடியை பற்றி
நிற்பது தான்! மாணிக்கம் போல் ஒளிவிடும் கண்மணியில்
பலவர்ண ஒளிக்கு மேலாக ஒளிர்பவனே! கண்மணி குகையில்
உள்ளவனே என் தந்தையே என் கருத்தாக இருப்பவனே
பிரம்மாவும் விஷ்ணுவும் அடிமுடி தேடியும் அறிய முடியாத
சிவ மைந்தனே என் குறை தணியும் கண்மணியில் உனை
கண்டு வாழத்துவேன்!

 தண்ணனை யெனது கண்ணனை யெனது தணிகையிற் கண்டு - பாடல் 2


குளிரிச்சி பொருந்திய எனது கண்ணின் மணியின் ஒளியை எனது மனம்
தணிந்த நிலையில் கண்டு வணங்குவேன்!

என்னுடைய யியுரை யான்பெறும் பேற்றை என்னுடைப்
பொருளினை யெளியேன் என்னுடைய குருவின் வடிவினை
யென்கண் மணியினை - பாடல் 3

என்னுடைய உயிராக இருப்பவனும் நான் பெறும் பெரும்
பேறானவனும் என்னுடைய மெய்ப்பொருளாக விளங்குபவனும்
என் குருவாக வந்து வழிகாட்டுபவனுமான என் கண்மணி ஒளியே!

அழகனை செந்திலப்பனை மலைதோறாடல் வாழ்
அண்ணலை - பிணிக்கோர் காலனை - பாடல் 8


அழகான கண்ணே, சிவந்த கண்களில் இருக்கும் - துலங்கும்
அப்பன் - என் தந்தையே - செந்திலப்பன்! மலை தோறாடல் வாழ்
அண்ணலை. எங்கெலாம் மலை இருக்கிறதோ அதிலெல்லாம்
முருகன் இருப்பான். நம் கண்மலையே முருகன் வாழும் இடம்.
எல்லோர் கண்களிலும் முருகன் தோன்றுவான்! பிணிக்கோர்
காலண் - நம் பிறவிப்பிணியை ஒழிக்கும் எமன் நம் கண்மணி
ஒளியான முருகனே!


முத்திக் கொருவித்தை துரியனை துரியமும் கடந்த சத்தனை - பாடல் 9
நாம் முத்தியடைய வித்தாக இருப்பது நம் கண்மணி ஒளியே. அது துரிய
நிலையில் கைகூடும். துரியாதீத நிலையில் தசவித நாதமும் கேட்கும்.

வினையை தள்ளவந்தருள் செய்திடுந்தயாநிதி - பாடல் 10
நம் இருவினைகளை நீக்கி நம்மை தூய்மையாக்கி முக்தி தந்தருளும்
தயாநிதி சண்முகக் கடவுளே நமகண்மணி ஒளியே!

Wednesday 7 December 2016

37 கூடல் விழைதல்



சகமா றுடையார் அடையார் நெறியார்
சடையார் விடையார் தனியானார்
உகமா றுடையார் உமையோர் புடையார்
உதவும் உரிமைத் திருமகனார்
முகமா றுடையார் முகமா றுடையார்
எனவே என் முன் வந்தார்
அகமா ருடையேன் பதியா தென்றேன்
அலைவாய் என்றார் அஃதென்ன


நல்ல நெறியோடு வாழாமல் உலகில் துன்மார்க்கர் மாறுபட்டு
வாழ்பவர் நந்தியில் அமர்ந்த தனித்தன்மை வாய்ந்த சிவத்தை
அடைய முடியாது! எல்லா யூகங்களிலும் என்றும் அழியா ஒரே
அருட்பெருஞ்சோதி ஆண்டவர் சக்தியை இடப்பாகம் கொண்டு
அதால் உலக மக்களுக்கு உதவும் படியாக சண்முகக்கடவுளை
பெற்றவர். சண்முகம் - ஆறுமுகப்பெருமான். முகம் மாறி நம்
இரு கண்களாக நம் முன்  வருவார்! மனம் பேதலித்து நீ யார்
என கேட்டேன் எங்கிருக்கிறாய் என கேட்டேன். அலைவாய் என்றார்
ஆறுமுகப் பெருமான். நம் மனம் அலைபாய்கின்ற வாய் - வாசல்
அதாவது மனம் இருக்கும் மனம் இருக்கும் கண்மணி மத்திய பகுதி
உள் ஒளி.

இறைவன் நம்முள் எப்படி இருக்கிறார் என்பதை ஒவ்வொரு பாடலிலும்
வள்ளல் பெருமான் விதம் விதமாக கூறி அருளியுள்ளார்கள். அருட்பா
முழுவதும் அருள் ஞானமே!

அன்பிற் பேதுறல்



மூடர்கள் தமக்குள் முற்படுங் கொடிய
முறியனேன் தனக்குநின் அடியாம்
ஏடவிழ் கமலத் திருநற வருந்த
என்று கொல் அருள்புரிந் திடுவாய்
ஆடர வணிந்தே அம்பலத் தாடும்
ஐயருக் கொருந்தவப் பேறே
கோடணி தருக்கள் குலவும்நற் றணிகை
குன்றமர்ந் திடுகுணக் குன்றே

இறைவா உன் தாமரை திருவடியில் தோன்றும் அமுதம்
அருந்த அருள் புரிவாயே! அறிவில்லா எனக்கு, பாம்பு மாலை
சூடிய சிவமைந்தன் சிவ சண்முகன் அமர்ந்த தணிகை - கண்மணியை
சார்ந்து இருக்க அருள்புரிவாயே!

கமலம் -தாமரை - தாள் + மறை இறைவன் தாள் ஆகிய திருவடி 
மறைந்து இருக்கிறது அதனால் தான் தாமரை என்றனர்.

Tuesday 6 December 2016

35 நாவளம் படாமை வேண்டல்

குன்றமொத் திலங்கு பணைமுலை நெடுங்கண்
கோதையர் பால்விரைந் தோடிக்
சென்றவிப் புலையேன் மனதினை மீட்டுன்
திருவடிக் காக்கு நாள் உளதோ
என்றனி யுயிரே யென்னுடைப்பொருளே
என்னுளத் தினிதெழும் இன்பே
மன்றலம் பொழில்சூழ் தணிகையாம் பொருப்பில்
வந்தமர்ந் தருள் செயு மணியே

நம் மனமானது இருவினைகளை நிற்கின்றதால் காமம் மோகம்
முதலியவைகளால் எளிதில் கவரப்பட்டு இறைவனை உணர
விடாமல் அலைகழிக்கும். உடல் மீது இச்சை கொண்டு
அலைபவனே புலையன்! புலையன் என்று ஒரு ஜாதி இல்லை!
என் உயிராக என்கண்மணி உள் இருக்கும் ஒளியே !
என்தீய மனத்தை மீட்டு உன் மெய்ப்பொருளில் நிலை நிற்கச்
செய்வாயாக!


மறைக்குளே மறைந்தம் மறைக்கரியதாய
வள்ளலே யுள்ளகப் பொருளே - பாடல் 3

நான்கு வேதங்களிலும் பரிபாசையாக சொல்லப்பட்டது நம் உள்
அகப்பொருள் - ஒளி கண்மணி உள் உள்ள ஒளி!  மறைத்து
சொல்லப்பட்டதால் மெய்ப்பொருளை - இறைவனை மறைத்து
சொல்லப்பட்டதால் வேதங்களை மறை - நான் மறை என்றனர்.
வேதங்களில் சொல்லப்பட்டதாயினும் வேதங்களை ஓதுபவர்
அறியமாட்டார்கள். ஏனெனில் வெளிப்படையாக சொல்லாதது தான்
காரணம்! எப்படி எனில் கண்தானே பார்த்து படிக்கிறது! கண்ணில்தான்,
கண்மணியில் தான், கண்மணியின் உள் உள்ள ஒளிதான் நம்மை
காக்கும் இறைவன் நம் உயிராக துலங்கும் இறைவன் என்பது
தெரியாதல்லவா ?!  அதுபோலத்தான்! இதை அறிந்தவன்
சொன்னால்தான் அறியமுடியும்! அப்படித்தான், அறிந்தவன்
மூலம் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்
பரிபாசையாக சொன்னார்கள் ஞானிகள்! அறிந்து சொல்பவன் குரு!
தெரிந்து கொள்ள வருபவன் சீடன்! கண்ணால் எல்லாம் பார்க்கிறோம்.
கண்ணை பார்க்க முடியுமா? தவத்தில் தான் நம் கண்ணை நம் கண்மணி
ஒளியை நம் உயிரான இறைவனை காண முடியும்! கண்ணை திறந்தால்
தான் உன் உள் ஒளியை காணலாம்! திறப்பவர் தான் குரு! தகுந்த ஆச்சாரியன்
மூலம் தங்கள் நடுக்கண்ணை திறக்கப்பெற்று கொள்வது நலம்" என வள்ளல் பெருமான் vஉபதேசித்துள்ளார்!

Friday 11 November 2016

34 அடியார் பணி அருள வேண்டல்

 எப்பா லவரும் இறைஞ்சும் தணிகை இருந்தருள் என்
அப்பாஉன்  பொன்னடிக் கென் நெஞ் சகம்இட மாக்கிமிக்க
வெப்பான நஞ்சன வஞ்சகர் பாற்செலும் வெந்துயர்நீத்து 
இப்பாரில் நின்னடி யார்க்கேவல் செய்ய வெனக்கருளே


எவ்வுலகில் உள்ள எவரும் வணங்கும் தனிகையான கண்மணி
ஒளியான என் அப்பா! உன் பொன்னடிக்கு என் நெஞ்சத்தில் இடங்கொடுத்து
அருள்புரிவாயாக! தீயவர்கள் பக்கம் நான் போகாமல் தடுத்து காத்து என்
வினையகற்றி உன் மெய்யடியார்க்கு தொண்டு செய்ய அருள் புரிவாயாக!

எய்யா தருள் தணிகாசலம் மேவிய என்னருமை ஐயா - பாடல் 2

நாம் தவம் - கண்மணி ஒளியை எண்ணி எண்ணி தவம் செய்யச் செய்ய
நம் உள்ளிருந்து நம் வினைகள் ஒவ்வொன்றாக நீங்கள் செய்து நம்மை
மேன்மையடைய செய்வான் நம் கண்மணி ஒளியானவான் ! அவன்
அருள் புரிவது கூட நாம் அறியமாட்டோம்.


ஞானசற்குரு சிவசெல்வராஜ்
திருவருட்பாமாலை

---தொடரும்  

33 கையடை முட்டற்க்கு இரங்கல்


 கார்பூத்த கண்டத் தொடுமேவு  முக்கட் கனி கனிந்து 
சீர்பூத் தொழுதுசெந் தேனே தணிகையில் தெள்ளமுதே 
பேர்பூத்த ஒற்றியில் நின்முன்ன ரேற்றிடப் பேதையேனேன் 
ஏர்பூத்த வோண்பளி தம்காண் கிலனதற் கென்செய்வேன்

கார்பூத்த கண்டத்தொரு மேவு முக்கட் கனி - கரிய நிற கண்மணி
மத்தியில் உள்ளே உள்ள மூன்று கண்கனிந்த ! சீர் பூத்து ஒழுகும்
செந்தேனே - பூ பூத்தால் அதில் தேன் இருப்பது போல இறைவன்
நமக்கு அருளிய சீர் - பூ - கண்மலரில் உள்ள ஒளி தவத்தால் இனிமையான
பேரானந்தத்தை கொடுப்பது! தணிகையின் தெள்ளமுதே கண்மணியின் உள்
ஒளியே அமுதமே! பேர் பூத்த ஒற்றியில் உன்முன்ஏற்றிட கற்பூரம்
கிடைக்கவில்லையே என்கிறார். ஒற்றி - திரு ஒற்றியூர்  வெண்பளிதம்
- கற்பூரம் திருவொற்றியூரில் கற்பூரம் கிடைக்கவில்லை என
திருதணிகையில் முறையிட்டரா? வள்ளலார்.  திருதணிகையும் ஊரல்ல!?
திருவெற்றியூரும் ஊரல்ல?! மனம் தணிந்த நிலையே தணிகின்ற கையே
கண்மணி. கண்மணியில் தானே நம் மனம் தணிந்து ஒடுங்கும்! திருவாகிய
இறைவன் ஒற்றியிருக்கும் இடம் நம் கண்மணி உள்ளேதான்- கண்மணி தான்
ஒற்றியூர் எனப்பட்டது!!  இவையெலாம்சங்கேதமொழி. ஞான நிலையை
கூறும் பரிபாசையாகும். ஏர்பூத்த வொண்பளிபாதம் காணவில்லையே
என வள்ளலார் கூறியது கண்மணி உள் ஒளியை - வெள்ளொளியை
- தூய ஒளியை - புகையில்லா ஒளியைத்தான் கிடைக்க வில்லையே
என வருந்தினார். அதாவது சாதனை செய்து செய்து பலகால்
ஆயிற்றே இன்னும் ஒளி தியானம் கிட்ட வில்லையே என அந்த ஒளியாகிய
இறைவனிடமே முறையிடுகிறார்.



கருமருந்தாய மணிகண்ட நாயகன் கண்மணியாம் 
அருமருந்தே தணிகாசலம் மேவுமென் ஆருயிரே - பாடல் 2

கருவிழியுனுள் கண்மணியினுள் நாயகன் ஒளி, இதுவே கருமருந்தாய
மணிகண்ட நாயகன் - கண்மணி இதுவே அருமையான மருந்து. நம் பிறவி
பிணி தீர்க்கும் மருந்து, அந்த மருந்தான ஒளி இருப்பது தணிகாசலத்தில் - என்
கண்மணியில் அதுவே என் ஆருயிர். இறைவன் எனக்கு கொடுத்த சீர் - என்
கண்மணி ஒளி, மாமருந்து





காலெடுத் தம்பலதாடும் பிரான் திருக்கண்மணியே - பாடல் 3 

அம்பலம் என்றால் எல்லோருக்கும் தெரிந்து விட்டது எனப்பொருள்.
சிவன் எல்லோருக்கும் தெரிந்த கண்மணி உள்ளில் ஆடிக்கொண்திருக்கிறான்.
ஒளியே சிவம் அவன் ஆடுவது கண்மணியே.



கண்ணப்பன்  என்னும் திருப்பெயரால் உலகம் புகழும் 
திண்ணப்பன் ஏத்தும் சிவனார் மகன் - பாடல்௪

கண்ணப்பன் - கண்ணை அப்பிய நாயனார் - கண்ணிலே அப்பி வைத்தது
போல் இருப்பவன் உள்ளே இருப்பவன் சிவன். அவன் சிவன் இருப்பது திண்ணமாக! உறுதியாக உள்ளே அப்பியிருக்கிறான். அதனால் சிவனே
நம் திண்ணப்பன். அதாவது நம்மில் இருக்கும் உயிர்  - ஆத்மா ஒவ்வொரு
ஆத்மாவும் திண்ணப்பன் , நாம் வணங்கும் இறைவன் அருட்பெருஞ்ஜோதியின் மகன் முருகன் நம் கண்மணியிலிருந்து வெளிப்படும் ஆறுமுகமான பொருள்! நம் கண்மணி!

ஞானசற்குரு சிவசெல்வராஜ்
திருவருட்பாமாலை

---தொடரும்  

Thursday 3 November 2016

32 எண்ண தேங்கல்


போதுகொண் டவனும் மாலும்நின் றேத்தும்
புண்ணிய நின்திரு அடிக்கே
யாது கொண் டடைகேன் யாதுமேற் செய்கேன்
யாது நின் திருவுளம் அறியேன்
தீது கொண் டவன்என் றெனக்கருள் சிறிதும்
செய்திடா திருப்பையோ சிறியோன்
ஏதிலன் செயலொன் ரிலையெனக் கருதி
ஈவவையோ தணிகை வாழ் இறையே

நான்முகனும்  திருமாலும் போற்றும் புண்ணியமே
இறைவா சுயம் ஜோதியே உன் திருவடிக்கே - என்
கண்மணியில் ஒளிர்பவனே உன்னை அடைய நான் என்ன
செய்வேன்? எதை தருவேன்? உன் திருவுளம் அறியேனே!
பாவிப் பிறவி என என்னை அருளாது விடிடாதே!
தகுதியில்லதவன் என்று என்னை தள்ளி விடாதே! இறைவா
என்ப்போற்றுகிறார் கதறுகிறார் வள்ளல் பெருமான்!

தணிகை வேற்பினுள் ஒளிரருள் விளக்கே - பாடல் 2

நம் மனம் தணியும் கண்மணி குகையுள் ஒளிர்ந்து அருள்புரியும்
விளக்கே அருட்பெருஞ்சோதி அற்புத கடவுளே என்கிறார்
வள்ளலார்!

உன் பொன்னான திருவடி நிழல் கிடைத்தாலே வாழ்வேன்!



ஞானசற்குரு சிவசெல்வராஜ்
திருவருட்பாமாலை

---தொடரும்  

31 உறுதி யுணர்த்தல்


மஞ்சேர் பிணிமிடி யாதியை நோக்கி வருந்துருமென்
னெஞ்சே  தணிகைய னாறெழுத் துண்டுவெண்  ணீறுண்டுநீ
எஞ்சே விரவும் பகலும் துதி செய் திடுதி கண்டால்
அஞ்சே லிதுசத் தியாமமென சொல்லை அறிந்துகொண்டே

தனிகையான ஆறேழுத்து உண்டு! வெண்ணீறு உண்டு! நீ இரவும்
பகலும் துதி செய் என்கிறார் வள்ளல் பெருமான். தணிகையான
கண்!  ஆறேழுத்தை சொல்லச்சொல்ல வில்லை ! உண்ணச் சொல்கிறார்!
ஆறேழுத்தகிய சரவணபவ - வில் உள்ள 'அ' வாகிய வலது கண் ஒளியை
சாப்பிட வேண்டும். எப்படி? சாப்பிட்டால் உள்ளே தானே போகும்!
கண் ஒளி உள்ளே போக வேண்டும் அதைதான் வள்ளலார் உண்ணவேண்டும்
என்றார்.  அதுபோலவே கண்மணி ஒளியை எண்ணி தவம் செய்யும்
போது ஊற்றெடுக்கும் நீர் தான் வெண்ணீறு என்பதாகும். ஒளி அதிகமாக
அதிகமாக அந்த நீரும் உள் ஒளியால் உறிஞ்சப்படும் அதுவே உண்ணுதல்!
இரவு பகலாக தவம் செய்தால் கண் ஒளி பெருகும். முதலில் முருகனும்
பின்னர் சிவனும் காட்சி தருவர் நம் வினையாவும் தீரும்.


ஞானசற்குரு சிவசெல்வராஜ்
திருவருட்பாமாலை

---தொடரும் 

Tuesday 1 November 2016

30 புண்ணிய நீற்று மான்மியம்


திவசங்கள் தொறும்கொண்டிரு தீமைப் பிணிதீரும்
பவசங்கடம் அறுமில்விக பரமும் புகழ்பரவும்
கவசங்கள் எனச்சூழ்ந்துறு கண்ணேறது தவிரும்
சிவசண்முக எனவே அருள் திருநீறணிந் திடிலே


நாம் நம் கண்மணி உள் ஒளியை - சிவ சண்முகனை நினைந்து தியானம் செய்தால் திருவிலிருந்து கண்மணி மத்தியிலிருந்து நீர் அருவியென கொட்டும்! அந்த திருநீர் எப்போதும் இருந்தால் நாள் தோறும் வரும் தீமைகள் ஆகாமியம் வராது. முற்பிறவி துன்பங்கள் பிராரப்தகர்மம், சஞ்சிதகர்மமும் அற்றுப்போகும். இப்படி கண்மணி ஒளியை பெருக்கி கர்மவினை அற்றுப்போகுமானால் உலகமெலாம் நம் புகழ் பரவும். நம்கண்மணி
ஒளி நம் உடலைச்சுற்றி பரவி நமக்கு கவசம் போல் நிற்கும். கண் - திரை - கண்ணில் ஏறி நிற்கும் திரைகள் தவிரும். நலம் பெறலாம். மேலும் கண்மணியில் இருந்து அருவியென பாயும்..திருநீர் அணிந்தவர்க்கு இவ்வுலகில் முக்தியின்பமும் எல்லா பெரும்பேரும் கிட்டும். எல்லா
துன்பமும் அகலும்.

பவணன் புனல் கனல் மண் வெளிபலவாகி 
பொருளாம் சிவசண்முக - பாடல் 3
நிலம் நீர் நெருப்பு  காற்று ஆகாயம் என்ற பஞ்சபூதங்களும் சேர்ந்த பொருளே
- நம் மெய்பொருள் -கண்மணி - அதுவே - சிவமாகிய பரஞ்சோதியின்
சண்முக - ஆறுமுக ஜோதி.  கண்மணி ஒளியே எல்லாமானது

குயிலேறிய பொழில் சூழ் திருக்குன்றேறி 
நடக்கும் மயிலேறிய மணியே - பாடல் 4

கண்மணி ஒளியை எண்ணி தவம்செய்யும் போது, திருக்குன்று
என்பது திரு-மலை திருவாகிய இறைவன் - ஒளி தாங்கியமலை
நம் கண்தான்!  அதன் ஒளிதான் மயில் போல பலவர்ண ஒளிக்கட்சியும்
குயில் போன்ற தசவித நாதமும் கேட்க ஒளியாகிய ஆறுமுகம்
காட்சிதரும்!

Sunday 30 October 2016

29. திருவருள் விழைதல்


தாணு ஈன்றருள் செல்வமே தணிகையில்
சாமியே நினையேத்திக்
காணு வேனிலை அருளிவன் புன்மையில்
காலங்கள் கழிக்கிறேன்
மாணு மன்பர்கள் என்சொலார் ஐயநீ
வந்தெனக் கருள்வாயேல்
நாணு வேன் அலன் நடுங்கலன் ஒடுங்கலன்
நாயினும் கடையேனே

தாணு = தான் + உ தான் ஆகிய இறைவன் நிற்கும் உ ஆகிய
இடது கண் சந்திரன். சாதனையால் கண் மணியிலிருந்து வெளிப்படும்
ஜோதியே! நம் மனம் தணிந்தால் உதிக்கும் சாமியே! உனையே நினைந்து வாழ வேண்டும்! உனையே நினைந்து வாழ வேண்டும்! உன் அருள் கிட்டினால் நடுங்கவோ ஒடுங்கவோ மாட்டேன். உன் அருள் பெற்ற அன்பர்கள் வாழ்த்துவர்.

தேவரே முதல் உலகங்கள் யாவையும் சிருட்டி ஆதிய செய்யும்
மூவரே எதிர்வரினும் - பாடல் 3

முத்தொழில் செய்யும் மும்முர்த்திகளும் மற்றும் எல்லா தேவர்களும் வந்தாலும் சரி எனக்கு பெரிதல்ல! என் கண்மணி ஒளியாக விளங்கும் நீ அருள் பாலிக்காவிட்டால் யாவரையும் அறியா மூடனாவேன்!
அதாவது என்னை யான் அறியாவிட்டால் - உணராமல் மூவர் தேவர் யாரையும் அறியமுடியாது !



ஞானசற்குரு சிவசெல்வராஜ்
திருவருட்பாமாலை

---தொடரும் 

ஆற்றா புலம்பல்


அண்ணாவே என் அருமை அய்யாவே பன்னிரண்டு
கண்ணாவோ வேல் பிடித்த கையாவோ செம்பவள
வண்ணாவோ நற்றணிகை மன்னவோ என்றென்றே
என்னவோ துன்பத் திருங்கடற்குள் மன்னினனே

அண்ணாவோ - அண்ணாவுக்கு மேல் ஒளிரும் ஒளியே! என்னை
காக்கும் ஐயாவே! பன்னிரண்டு கலையுடைய சூரியகலை
- வலதுகண்ணே! வலது கண் இடது கண் அக்னி என மூன்று கண்
சேர்ந்த நிலையே வேல், சிவந்த ஜோதியே தணிகையாகிய என் கண்மணியே
என இப்படியெல்லாம் எண்ணி உனை அடையாமல் உலக வாழக்கையில்
சிக்கி தவிக்கிறேனே காத்தருள்வாய்!

அருணகிரி தன்னப்பா நற்றணிகை தன்னில்
அமர்ந்தருளும் என்னப்பா - பாடல் 2

அருணகிரிக்கு தந்தையே கண்மணியில் அமர்ந்து அருள்புரியும் என் அப்பா என்கிறார்  வள்ளலார். கண்மணி ஒளியே அருணகிரிக்கு வள்ளலாருக்கு தந்தையாகும் உலக உயிர்களனைத்திற்கும் அப்பா ஒளியேயாகும்.

ஞானசற்குரு சிவசெல்வராஜ்
திருவருட்பாமாலை

---தொடரும் 

நெஞ்சவலம் கூறல்



இழுதை நெஞ்சினேன் என் செய்வான் பிறந்தேன்
ஏழை மார்முலைகே கேவிளைந் துழன்றேன்
பழுதை பாம்பென மயங்கினன் கொடியேன்
பாவி யேன் எந்தப் பரிசுகொண்ட டைவேன்
அழுது கண்கள் நீர் ஆர்ந்திடும் அடியர்
அகத்துள் ஊறியே ஆனந்த அமுதே
தொழுது மால்புகழ் தணிகை யென்னரசே
தோன்ற லே பரஞ்சுடர் தரும் ஒளியே



அமுது அமுது கண்ணீர் ஊற்றென பொங்கி வழியும் கண்மணி உள் ஓங்கி
வளர்ந்திடும் ஒளியே! - அமுதமே ! கண்ணனும் வணங்கி  புகழும் கண்மணி
ஒளியே அரசே ! பரஞ்சுடரால்  விளைந்த சுடரே !சஞ்சல மனத்தால் பெண்ணாசையி ல் சிக்கி தவிக்கும் தடுமாறும் நான் பிறந்தேனே !படரும் கொடியை பார்த்து பாம்பென மயங்கி நின்ற அறியாபாவி என்னை காத்தருள்வாயே!




ஞானசற்குரு சிவசெல்வராஜ்
திருவருட்பாமாலை

---தொடரும்

முறையிட்ட பத்து


பொன்னைப் பொருளா நினைப்போர்பால்
போந்து மிடியால் இரந்தலுத் தேன்
நின்னைப் பொருளென் றுணராத
நீசன் இனியோர் நிலைகாணேன்
மின்னைப் பொருவும் சடைபவள
வெற்பில் விளைந்த வியன்கரும்பே
முன்னைப் பொருளே தணிகையனே
முறையோ முறையோ முறையேயோ


இறைவா நீதான் மெய்ப்பொருள் என்று உணராமல் பொன்னை
பொருளாக எண்ணி அதை பெறுவதற்காக பலரிடமும் சென்று
முயன்று மனம் வெறுத்தேன்!  மின்னலைப்போன்ற சடையுடைய
செம்மையான சிவ ஒளியில் தோன்றிய இனிய ஒளியே! முதல் பொருளே
என்கண்மணியே காத்தருள்!

முக்கட் கரும்பின் முழு முத்தே - பாடல் 2

நமது வலது கண் இடது கண்  இரண்டும் உள்ளே சேரும் மூன்றாவது கண்
மூன்றும் சேர்ந்தால் தோன்றும் முத்தே - வெள்ளொளியே !

முன்பின் நடுவாய் முளைத்தோனே - பாடல் 3

நாம் தவம் செய்யும் போது கண்மணி ஒளியை தியானம் செய்யும் போது
முதலில் நமக்கு முன் தோன்றும் ஒளி. தவம் தொடரும் போது நம் சிரசின்
பின் தோன்றும்  ஒளிவட்டம். மேலும் தவம் தொடர தொடர சூரிய சந்திர அக்னி கலை சேர்ந்து மேலும்பும் சிர நடு மேல் எழும்பும் நடுவான ஜோதி! அனுபவம் கூறும் உண்மை!


மோனத்தவர்தம் அகவிளக்கே  - பாடல் 7

இறைவனை அடைய ஒரே வழி மோன நிலையே. 'மோனமென்பது ஞான வரம்பு ' என ஒளவையார் கூறியுள்ளதை காண்க .நம் கண்மணியில் உள்ளே அகத்தில் ஒளிரும் விளக்கை நினைந்து உணர்ந்து சும்மா இருந்தால் மோனமாக - மெளனமாக இருந்தால் கிட்டும் ஞானம். தொடர்ந்தால் கிட்டும் முக்தி.


மூவேதனையை அறுத்தருள் வோய் - பாடல் 8

நம் கண்மணி ஒளியை எண்ணி எண்ணி தவம்  செய்வோமானால் ஆணவம் கன்மம் மாயை ஆகிய மும்மலங்கள் நம் உள் ஒளியால் அறுந்து போகும். நம் கண்மணி மத்தியிலுள்ள துவாரத்தை மறைத்து கொண்டிருக்கும் திரையே மும்மலங்கள்.உள் ஒளியை நாம் பெருக்க பெருக்க திரை உஷ்ணத்தால் அறுந்து போகும். ஞானம் கிட்டும்.


ஞானசற்குரு சிவசெல்வராஜ்
திருவருட்பாமாலை

---தொடரும்

Sunday 23 October 2016

குறை நேர்ந்த பத்து


வான்பிறந்தார் புகழ் தணிகை மலையைக் கண்டு
வள்ளலே  நின்புகழை மகிழ்ந்து கூறேன்
தேன்பிறந்த மலர்குழலார்க் காளா வாளா
திரிகிறேன் புரிகின்றேன் தீமை நாளும்
ஊன் பிறந்த உடலோம்பி அவமே வாழ்நாள்
ஒழிக்கின்றேன் பழிக்காளாய் உற்றேன் அந்தோ
ஏன் பிறந்தேன் ஏன் பிறந்தேன் பாவி யேன் யான்
என்குறையை எவர்க்கெடுத்திங் கியம்பு கேனே


வானாகி நின்ற ஒளியில் பிறந்த நம் கண்மணி ஒளி கண்டு
இறைவனை பற்றி யார்க்கும் கூறாமல் இருப்பது மாபெரும் குற்றம்
இறைவனைக் பற்றி கூறாமல் பெண்ணாசை கொண்டு திரிகின்றோம்
அதனால் பற்பல துன்பத்திற்கு ஆளாகிறோம். இந்த உடலை வளர்க்க
பலபாவமும் செய்து வாழ்கிறோம். இப்படி உடல்பசி உள்ளப்பசி
கொண்டு உள்ளம் தடுமாறி அலையும் மனிதா! நான் ஏன் பிறந்தேன்
என்று சிந்திப்பாயாக!

மேருவில்லான் தன் செல்வமே தணிகை மேவும் மெய்ஞ்ஞான ஒளியே - பாடல் 4


சிவன் மேருமலையை வில்லாக கொண்ட வனல்லவா  அவன் மகன் முருகன் தான் தணிகை மேவும் மெய்ஞ்ஞான ஒளி, அதாவது நம் கண்மணியிலுள்ள - நம் உடலிலுள்ள நமக்கு ஞானம் தரக்கூடிய ஒளி.


பாவியேன் உடற்சுமையை பலரும் கூடி இடுகாட்டில்
வைக்குங்கால் என்செய்வேன் - பாடல் 6

நாம் தணிகை மலையான நம் கண்மணி ஒளியை உணர்ந்து தவம் செய்தால்
மரணம் இல்லை. இல்லையேல் உயிர் பிரியும். ஊரெலாங்கூடி பிணமென்று
பெயரிட்டு சுடுகாட்டிலோ இடுகாட்டிலோ கொண்டு சேர்ப்பார். இது தேவையா?
இதற்கா பிறந்தோம்? பிறந்தது சாகவா? சிந்தியுங்கள். சாகாதிருக்க வழி
தணிகை மலையை சார்வதே!


ஞானசற்குரு சிவசெல்வராஜ்
திருவருட்பாமாலை

---தொடரும்


Saturday 22 October 2016

பணித்திறம் சாலாமை


வஞ்சகப் பேதையர் மயக்கி லாழ்ந்துழல்
நெஞ்சகப் பாவியேன் நினைந்தி லேனையோ
வெஞ்சகப் போரினை விட்டு ளோர்புகழ்
தஞ்சகத் தணிகை வாழ் தரும வானையே

துன்பத்தை தரும் உலக வாழ்வை துட்சமென கருதி, நம் கண்மணியில்
ஒளியாக துலங்கும் தரும துரையை தஞ்சம் அடைந்தால் உய்யலாம்.
அதை விடுத்து வஞ்சக குணம் கொண்டவர் மயக்கத்தில் ஆழ்ந்து நெஞ்சம்
கெட்டு பாவியாகி கெட நேரிடும். தணிகை மலை ஐயனை - நம் கண்மணி
ஒளியை தேனிருந்தொழுகிய செங்கரும்பே , கண்ணை நாடியே மெய்யன்பர்
வாழ்வே என்றும், கண்மணி ஒளியை எண்ணி வழிபடும் அன்பர் வறுமை
நீங்கும் என்றும் , எல்லாம்  தரும் கற்பக விருட்ஷம் என்றும் போற்றிப்பாடுகிறார் வள்ளல் பெருமான்.

ஞானசற்குரு சிவசெல்வராஜ்
திருவருட்பாமாலை

---தொடரும்

காணாப் பத்து


வரங்கொ ளடியார் மனமலரில்
மகிழ்வுற் றமர்ந்த மாமணியே
திறங்கொள் தணிகை மலைவாழும்
செல்வப் பெருக்கே சிற்பரமே
தரங்கொ ளுலக  மயல கலத்
தாழ்ந்துள் ளுறுக அழுதழுது
கரங்கொள் சிரத்தோ டியானுன்னைக்
கண்க ளராக் கண்டிலனே

புண்ணிய பயனால் தம் மனம் அமையப்பெற்ற கண்மலரில்
மகிழ்வுடனமர்ந்த மாமணியே! மனமலர் - நம்கண்மலரின்
முன் உள்ள திரைதான் - நம் வினைத்தொகுதி.  அதில்தான்
மனம் உள்ளது. அதைத்தான் வள்ளல்பெருமான் மனமலர் 
என்றார். மனம் உள்ள மலர்! உலகமயல் அகல - உலகத்தின்
மீது உள்ள ஆசை அகல, தாழ்மையுடன், பணிவுடன் நம் உள்ளம் உருக,
அழுது அழுது செய்யும் தவம் மூலமாகத்தான் இறைவனை காணலாம்.
நாம் உருப்பெற,அழுதால் அழுதால் பெறலாம் அவன் அருளை! கண்ணார
காணலாம், தயவு செய்து ஒளிமிகுமல்லவா! உஷ்ணம் பெருகுமல்லவா!
சூடு தணிய வேண்டுமே - சூடு ஆரவேண்டும் -கண்ணார வேண்டுமாயின்
தவம் தொடர்ந்து செய்ய வேண்டும். முதலில் உஷ்ணம் ஏறும் பின்
குளிர்ச்சி பெறும். இதுவே தியான அனுபவம். வள்ளலார் இதைத்தான்
கூறுகிறார்.



Thursday 20 October 2016

பணித்திறஞசாலாப் பாடிழிவு - திருவருட்பா


அடுத்திலேன் நின்னடியார் அவைக்குட் சற்றும்
அன்பிலேன் நின்தொழும்பன் ஆகேன் வஞ்சம்
தடுத்திலேன் தணிகைதனில் சென்று நின்னைத்
தரிசனம் செய் தேமதுரத் தமிழ்சொல் மாலை
தொடுத்திலேன் அழுதுநின தருளை வேண்டித்
தொழுதுதொழு தானந்தத் தூநீர் ஆடேன்
எடுத்திலேன் நல்லனெனும் பெயரை அந்தோ
ஏன் பிறந்தேன் புவிச்சுமையா இருக்கி றேனே


நல்லவர்களோடு இறையடியார்களோடு சேர்ந்து வாழ வேண்டும்.
எல்லோரிடமும் அன்புடையவனாக இருக்க வேண்டும். இறைவன்
அடியாராக இருக்க வேண்டும். நம்மிடம் உள்ள வஞ்சம் உட்பட
எல்லா துர்குணங்களை விட்டொழிக்கணும். தணிகையான - எல்லா
துர்குணங்களையும் தணித்து நம்மை தூயவனாக்கும் கண்மணி
ஒளியை கண்டு தவம் செய்ய வேண்டும். தேமதூரத்தமிழ்ச்
சொல்மாலை இறைவனுக்கு சூட்டி மகிழ வேண்டும். எல்லோரும்
பாட முடியுமா? முடியும்!

இறைவனை    சரணடைபவன் தன்னாலே பாட ஆரம்பித்து விடுவான்.
ஆன்மீகவாதியின் ஒரு தகுதி பாடுவது. பாட்டுவிப்பவன் உள்ஒளி . பாடுவோம்
நாம்! கண்மணி ஒளியை நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ நெகிழ கண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து கொட்டும். இவ்வண்ணம் தவம் செய்து இறைவனை நமகண்மணி ஒளியை பெருக்கி ஞானம் பெறலாம்! இதில்லாதவன் பிறந்தது பூமிக்கு பாரமே!

சிவதருமம் செய்வோர் நல்லோர் - பாடல் 6
எவ்வளவோ பொருட்கள் தான தருமம் செய்வதை கேள்விப்பட்டிருக்கிறோம்.
'சிவதருமம்' என்ன? இந்த உலகத்தையே வேண்டுமானாலும் தானம் செய்து
விடமுடியும். சிவதருமம் செய்ய முடியுமா? அப்படி செய்பவரே நல்லோர்!
சிவதருமம் என்றால் ஒளியை தருமம் செய்வது! எப்படி செய்வது யார் செய்வது? எல்லாராலும் முடியாது! கண்மணி ஒளியை தருமம் செய்பவரே சிவ தருமம் செய்பவர். அடியேன் சிவ தருமம் செய்து வருகிறேன்! சற்குரு திருவருட் பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் அருளாசியால் சிவதருமம் செய்து வருகிறேன்.

தன் உள் ஒளியை பெருக்கி கொண்டவன் ஞானி ஒருவரின் பரிபூரண அருள்
பெற்றவனே சிவதருமம் செய்ய முடியும்! சிவதருமம் செய்பவன் 'குரு' அவனை நல்லோர் என வள்ளலார் கூறுகிறார்.

நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லோருக்கும் பெய்யும் மழை

சிவ தருமம் செய்யும் குரு லட்சத்தில் ஒருவரே! லட்சியம் உள்ள குருவே
இறைவனை சுட்டி கட்ட முடியும்! ஞானம் பெற்றவனாவான்!

அகமலர முக மலர்வோ டருள்செய்யுன்றன்
செம்பாத மலர் - பாடல் 9

நம் அகம் - உள்ளம் மலர்ச்சியடைய வேண்டும். முகமலர் - நம் முகத்தில்
உள்ள மலர் கண். செம்பாதமலர் - தவம் செய்து செம்மையேறிய திருவடியாகிய கண்மலர் நமக்கு அருள் செய்யும் இறைவன் இருப்பிடம்.

ஞானசற்குரு சிவசெல்வராஜ்
திருவருட்பாமாலை

---தொடரும்

ஏழ்மையின் இரங்கல் - திருவருட்பா


தேனே உளங்கொள் தெளிவே அகண்ட
சீதம்மேவி நின்ற சிவமே
கோனே கனிந்த சிவபோத ஞான
குருவே விளங்கு குகனே
தானே தனக்கு நிகராய் விளங்கு
தணிகா சலத்தெம்  அரசே
நான் ஏழை இங்கு மனம் நொந்து நொந்து
நலிகின்ற செய்கை நலமே

தேன்போல் தித்திப்பவனே! உனை உணர்ந்தால் உள்ளத்தெளிவே!
எங்குமாய் பரந்து நின்ற ஒளியே! தலைவா! கண்மணி ஒளி ஏறி ஏறி
கனிந்து அதனால் வெளிப்படும் ஞான குருவே! என்கண்மணி ஒளியாக
விளங்கும் கண்மணி குகைக்குள் இருக்கும் ஒளியே குகனே!
உனக்கு நிகர் நீதான்! கண்மணி ஒளியே என் அரசே அறியாமையில்
உழலும் என்னை ஏழையை அறிவு தந்து ஞானம் தந்து ஞான செல்வந்தனாக்குக! என வள்ளல் பெருமான் வேண்டுகிறார்.

என்னை யான் அறிந்து உன் அடிசேர - பாடல் 8
என்னை நான் அறியவேண்டும்! நான் யார் என அறிய வேண்டும்!
அறிய ஒரே வழி இறைவன் திருவடியை சேர வேண்டும். இறைவன் திருவடியை சேர வேண்டும். இறைவன் திருவடியை நம் சிரசில் கண்மணியில் பதித்துள்ளான்! கண்டுகொள்வீர்! விரைந்து சேர்வீர் உன் கண்மணியில் ஒளியில் அதுவே திருவடி! மலர் பாதம்! இறைவன் திருவடியில் சரணடைந்தால் நாம் யார் என்று அறியலாம்.




ஞானசற்குரு சிவசெல்வராஜ்
திருவருட்பாமாலை

---தொடரும்

Tuesday 4 October 2016

ஆற்றா விரகம்


தணிகை மலையைச் சாரேனோ
சாமி யழகைப் பாரேனோ
பிணிகை யரையைப் பேரேனோ
பேரா அன்பு கூரேனோ
அணிசெய் அருள்நீர் ஆரேனோ
ஆறாத் தாகம் தீரேனோ
பணிசெய் தொழும்பில் சேரேனோ
பார்மீ திரங்கும்  நீரேனோ


தணிகை மலையான என் கண்மணியை சார்ந்தால் - சேர்ந்தால்
சாமி அழகு - ஒளி அழகை கண்டு களிக்கலாம் . என்னுடைய எல்லா
பிணிகளும் போய்விடும். மிகப்பெரிய பிணியாகிய பிறவிப்பிணியே
போய்விடும். இறையன்பு பெற்று அடியாராகலாம். ஒளி தரிசனம் பெற்று
அடியாராகலாம். ஒளி தரிசனம் பெற்று உள் புகுந்து தவம் தொடரும்
காலையில் உள்ளிருந்து அமுதம் கிடைக்கும்.  நம் தாகம் பசி எல்லாம்
போய்விடும். இறைவனுக்கு தொண்டு செய்யும் அடியார்களோடு
சத்சங்கம் கொண்டு தவம் செய்வார்க்கு இது கிட்டும்!

புவிமீது இருகால் மாடேனே - பாடல் 3

நான்கு கால் மாடு வண்டி இழுக்கவும் வயலில் உழவும் உதவும்.
தணிகை மலையை - தன் கண்மணியை ஒளியை அறியாதவன்
உலகில் உள்ள இரு கால்மாடு ஆகும். மனிதன் யார் என்றால் மனதை
இதம் பண்ண தெரிந்தவன். பக்குவமாக, தவம் செய்து இறைவனை
அடைபவன் மனிதன். மனம் போன போக்கிலே போகிறவன் மிருகம்.
"மனம் போன போக்கெல்லாம் போகவேண்டாம் " என ஒன்றாம்
வகுப்பில் படித்ததில் ஞாபகத்தில் கொள்க.


காட்டும் அவன் தாள் கண்ணேனோ - பாடல் 5
இறைவனை காட்டும் அவன்தாள் - திருவடி அது நம் கண்ணேயாகும்.
அதை அடைய மாட்டேனோ எனப்படுகிறார் வள்ளல் பெருமான்.
அதுமட்டுமா அவன் தாளாகிய - திருவடியாகிய கண்ணே நம்மையும்
காட்டும்! நாம் யார்?  என நமக்கு காட்டித்தரும்!
வள்ளலார்

காவி மலைக்கண் வாதியேனோ
கண்ணுள் மணியை துதியேனோ - பாடல் 7

காவிமலைக்கண் - நாம் தியானம் செய்யும் போது நம் கண் சிவந்து
காவிக்கண்ணாகி விடும். சந்நியாசி காவி கட்ட வேண்டும் என்பர்.
காவித்துணியை உடலில் சுற்றிக் கொள்பவன் சந்நியாசி இல்லை!
கண் வெள்ளை விழி சிவப்பாகி காவியாக எப்போதும் இருப்பவனே
- அதாவது சதா காலமும் தவத்தில் ஆழ்ந்திருப்பவனே உண்மையான
சந்நியாசி. நாம் அந்தகாவி மாலைகண்ணிலேயே வசிக்க வேண்டும்
என்கிறார் வள்ளல் பெருமான்.  கண்ணுள் மணியை நினைந்து உணர்ந்து
துதித்தலே தவம் செய்தலே காவி மலைகண் பெற வழியாகும் .

திருத்தணிகை தேவர் எவர்க்கும் முன்னாரே - பாடல் 8
திருத்தணிகைத்தேவர் - நம் கண்மணி ஒளி எவர்க்கும் முன்னரே
- தியானம் செய்யும் எவர்க்கும் முன்னால் தோன்றுபவர். நம் கண்மணி
ஒளியை தியானம் செய்தால் நம் கண்கள் நமக்கு முன் தோன்றும்.
கண்ணாரக் காணலாம் நம் கண்களையே!

என்தாய் தனக்குத் தாயாரோ - பாடல் 10
இறைவன், எனக்கும் என் தாய்க்கும் தாய்! எல்லாம் வல்ல,
எல்லா உயிர்களையும் படைத்த அந்த இறைவனே எல்லோருக்கும்
உயிர் கொடுத்த தாய்.

Thursday 29 September 2016

திருவடி சூட விழைதல்


தேனார் அலங்கல் குழல்மடவார்
திறத்தின் மயங்காத் திறல் அடைதற்க்
கானார் கொடியெம் பெருமான்தன்
அருட்கண் மணியே அற்புதமே
கானார் பொழில்சூழ் திருத்தணிகைக்
கரும்பே கருணைப் பெருங்கடலே
வானார் அமுதே நின்திருத்தாள்
அடியேன் முடிமேல் வைப்பாயே


பெண்ணாசையில் மயங்காது காத்து, சிவனாரின் அருட்கண்மணியே ,
அற்புதமே, திருத்தணிகை மலை என விளங்கும் என் கண்மணியே
கரும்பே, கருணைக்கடலே,,வானமுதே ,உன் திருவடியை அடியேன்
முடிமேல் வைப்பாயே!

பரதம் மயில் மேல் செயும் தணிகைப்பரனே - பாடல் 5

முருகப்பெருமான் மயில்மீது வருவான். முருகனான கண்மணி ஒளி
பலவர்ண ஒளிக்கு மேலான காட்சி தரும். மெய்யடியார் அனுபவம் இது
மயில்மீது பரதநாட்டியம் ஆடவா முடியும்?

குயில்மேல் குலவும் திருத்தணிகைக்
குணப்பொற்குன்றே கொள் கலப
மயில்மேல் மணியே - பாடல் 6


நம் கண்மணி ஒளியை தியானம் செய்யும் போது பலவர்ணங்கள்
ஒளியும் அதன்மேல் தூய ஒளியும் காட்சி கிட்டும். அப்போது
குயில் - பாடுவது என்பது பலவித ஓசை கேட்கும். தசவித நாதம் கேட்கும்.
பலவர்ண ஒளியின் மேல் ஜோதி முருகன் காட்சியும் தசவித நாதமும்
சாதனை செய்யும் அடியார்கள் பார்ப்பர்! கேட்பர்!

கடமும் திகழ் தணிகை மலையின் மருந்தே
வாக்கினோடு மனமும் கடந்தோய்  - பாடல் 7

கடம் - உடல், நம் உடலில் திகழும் தணிகைமலை கண்.
அதுவே நம் பிறவிப்பிணிக்கும் மருந்து. அந்த ஒப்பற்ற இறைவன்
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவன் மனோ வாக்கு காயத்திற்கு
அப்பார்பட்டவன்! நம் உடலில் கண்மணியாக ஒளியாக இருந்தாலும்
உடலைதொடாமல் இருக்கிறான்! நம் மனதிற்கு அப்பாற்பட்டவன் !
நம் வாக்கு அவனிடம் செல்லாது! மவுனமே இறை மொழி!
மனம் இல்லாதவனே அருட்பெருஞ்ஜோதியை அடையமுடியும்,


திருத்தணிகை அரசே ஞான அமுதளிக்கும் வள்ளல்பெருமான் - பாடல் 9

திருத்தணிகை அரசன் - நம் கண்மணி . நம் கண் ஒளியே நமக்கு
ஞானத்தையும் அமுதத்தையும் தரும் வள்ளல் பெருமான். நம் திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் இறைவன்தான் வள்ளல் பெருமான் என்கிறார். நமக்கு இறைவனை சுட்டி இராமலிங்க சுவாமிகளே வள்ளல் பெருமான்!

தெய்வச் சூளாமணியே - பாடல் 10


நவரத்தினங்கள் மாணிக்க மணி மாலைகள் எல்லாம் எல்லோரும் கழுத்திலும்
பெண்கள் தலையிலும் அலங்கரித்து கொள்வது. சூடிக்கொள்வது இறைவன்
நமக்கு அருளிய மணி நம் கண்மணியாகும்! யாரும் சூட முடியாத மணி
சூளாமணியாகும். எனவே நம் கண்மணியை சூளா மணி என்றனர் ஞானிகள்
பரிபாசையாக! இதுபோலவே சிந்தாமணி என்பதும். உலகில் உள்ள எல்லா
மணி மாலைகளும் கீழே சிந்திவிடும் சிதறி விடும். ஆனால் இறைவன் நமக்கு
அருளிய மணி நம் கண்மணி சிந்தாது சிதறாது. பத்திரமாக உள்ளது. எனவே தான் கண்மணியை  சிந்தாமணி என்றனர் ஞானிகள் பரிபாசையாக!

Sunday 25 September 2016

புன்மை நினைந்து இரங்கல்


மஞ்சட் பூச்சின் மினுக்கி  னிளைஞர்கள்
மயங்க வேசெயும் வாள்விழி மாதர்பால்
கொஞ்சிக் கொஞ்சி நிறையழிந் துன்னருட்
கிச்சை நீத்துக் கிடந்தன னாயினேன்
மஞ்சுற் றோங்கும் பொழிற்றணி காசல
வள்ள லென்வினை மாற்றுத னீதியே
தஞ்ச மென்று வந்தடைந்திடு மன்பர்கள்
தன்மை காக்கும் தனியருட் குன்றமே

இளைஞர்களே தன் அழகை காட்டி மயக்கும் மாதர் பின்னால்
போய் கெட்டு விடாதீர்கள். நம் உடலிலே - கண்மணியிலே ஒளியாக
துலங்கும் இறைவனை அறிந்து உணர்ந்து தஞ்சம் அடைவோமானால்
எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவன் நம்முள் உள்ள
ஜோதி நம்மை காக்கும். வருக உன் உள்ள கமலத்தில் ஒளிரும் சுடர் மணியை
சரணடைக!

புரத்தைக் காட்டும் நகையினெரித்த தோர்
புண்ணியற்க்கு புகல் குருநாதனே - பாடல் 5

சிவபெருமான் முப்புரத்தையும் புன்னைகையால் எரித்தார் என சிவபுராணம்
கூறும், சிவனுக்கு பிரணவ உபதேசம் செய்தான் முருகன் அதனால் சிவகுருநாதன் ஆனான்!

"அப்பணி செஞ்சடை ஆதிபுராதானன் முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்கள். முப்புரமாவது மும்மல காரியம்" - திருமந்திரம். திருமூலர்

கதைசொல்பவர்களை மூடர்கள் என்கிறார்! இதன் உண்மைப்பொருள் என்னவென்றால் அதை வள்ளல் பெருமானும் குறிப்பிடுகிறார். சிவம் ஆகிய ஒளி நம் கண்மணி உள்ளே இருக்கிறது.கண்மணி மத்தியில் உள்ள துவாரம் அடைபட்டுள்ளது. நாம் தியானம் கண்ணை திறந்து நினைவை கண்மணி ஒளியில் வைத்து செய்யும்போது ஒளி பெருகி கண்மணி துவாரம் அடைபட்ட ஜவ்வு லேசாக விலகும். நம் வாய் உதடுகள் லேசாக பிரிவது தானே புன்னகை. கண்மணி ஜவ்வு லேசாக பிரிவதே உள் உள்ள சிவம் புன்னகைத்தார் என்பது, ஒளி லேசாக பிரிவதே உள் உள்ள சிவம் புன்னைகைத்தார் என்பது , ஒளி லேசாக தெரிந்தது எனப்பொருள். முப்புரம்  - மும்மலம். நம் மும்மலமும்
தான் ஜவ்வாக சிவத்தை மறைந்துள்ளது. ஜவ்வு விலகிற்று என்றால் முப்புரம் - மும்மலம் நீங்கியது என்றுதானே பொருள். சிவம் ஓங்கி வளர வளர ஒளி பெருகிவளரும் போது அந்த நெருப்பிலே ஜவ்வு மறைப்பு எரிந்துவிடும். இதுவே ஞான அனுபவ ஞானம்.  ஒளி பெருகி மலம் அற்று போனது. அந்த சிவனுக்கே குருவாக இருந்து உபதேசம் செய்தவன் முருகன் - ஆறுமுகன். எல்லோருக்குமே குரு சண்முக கடவுளான நம் கண்களே !

நெஞ்சோடு புலத்தல்


வா வா என்ன அருள்தணிகை
மருந்தை யென்கண் மாமணியைப்
பூவாய் நறவை மறந்தவநாள்
போக்கின் றதுவும் போதாமல்
மூவா முதலில் அருட்கேலா
மூட நினைவும் இன்றெண்ணி
ஆவா நெஞ்சே எனக் கெடுத்தாய்
அந்தோ நீதான் ஆவாயோ

வா வா என அனைவரையும் கூப்பிட்டு தன்னை காட்டும்
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவன் தணிகை மருந்தானவன் என்
கண்மணி ஒளியே! பூவிலுள்ள தேனை அறியாதவன். இறைவனை
அறியாமல் வீண் நாள் கழிப்பவன் மூட நினைவுள்ளவன் எப்படி
என்றும் இளமையான கண் மணியை உணர்வான்! அறிவான்!

தன்னால் உலகை நடத்தும் அருட்சாமி - பாடல் 6
யாருடைய துணையுமின்றி தன்னால் உலகை நடத்துகிறான் நம்
கண்மணியுள் ஒளியான அருள்சாமி. அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.

நெஞ்சே யுகந்துணை யெனக்கு
நீயென்றறிந்தே நேசித்தேன் - பாடல் 9

நெஞ்சே எனக்கு யுகந்த துணை உற்றதுணை உனையன்றி யாருமில்லை
என அறிந்தேன், நேசித்தேன் அன்பு வைத்தேன். நெஞ்சே என்றால் இரு கண்மணி ஒளியே
எனப்படும்.

திருந்தாய் நெஞ்சே நின் செயலை செப்ப - பாடல் 11
நம்நெஞ்சமானது வினைகளுக்கேற்ப நம்மை பல்வாராக அலைகழிக்கின்றது. உண்மை அறிந்தும் போகவிடாமல் தடுக்கும். தீயவழியில் தள்ளிவிடும். நரகம் போக தேவையான எல்லாம் செய்யும். மனிதா நீ அதிலிருந்து தப்ப வேண்டும். இறைவன் திருவடி மலரை  பற்றினால் பிழைத்தாய்! இல்லையேல் துன்பம்தான்! ஆகையால் மனிதா நீ திருந்துவாயாக!
மனந்திருந்து! நம் கண்மணி ஒளியை நம் குருவை பணிவாயாக!

குருவினடி  பணிந்து கூடுவதல்லார்க்கு
அருவமாய் நிற்கும் சிவம்

Saturday 24 September 2016

பணித்திறம் வேட்டல்


நண்ணேனோ மகிழ்வினொடும் திருத்தணிகை மலையதனை
நனை யென்றன்
கண்ணே நீ யமர்ந்தவெழில் கண்குளிர காணேனோ கண்டுவாரி
உண்ணேனோ வானந்தக் கண்ணீர்கொண் டாடியுனக் குகப்பாத் தொண்டு
பண்ணேனோ நின்புகழைப் பாடேனோ  வாயாரப் பாவி யேனே

என் குறையலாம் தணிந்த - தணிவிக்கும் என் கண்மணி ஒளி
மலையை நாடுவேனோ! நாடி என் கண்ணில் இறைவா நீ
அமர்ந்த எழிலை - அழகை கண்குளிர காண வேண்டும்.கண்டு
அந்த ஆனந்த அனுபவத்தில் திழைக்க வேண்டும். கண்ணீர் அருவியென கொட்டும். உன் திருப்புகழை பாடி ஆட வேண்டும். உனக்கு தொண்டு செய்ய வேண்டும் என்கிறார் வள்ளலார்.


என் கண்மணியை நின்று பாரேனோ
சாரேனோ நின்னடியர் சமுகமதை - பாடல் 3

கண்மணியை - அதிலுள்ள ஒளியை ஊன்றி நின்று பார்க்க வேண்டும்.
இறையடியார்கள் கூடி சத்சங்கம் நடத்த வேண்டும்.

உலகத்தொடர்பை யெல்லாம் தள்ளேனோ - பாடல் 4
இறைவன் மீது தீராக் காதல் கொண்டவர்கள்  உலகில் உள்ள தொடர்பு
எதையும் வைத்துக் கொள்ளமாட்டார்கள்! காரணம் பேரின்ப பெருவாழ்வில்
திழைக்கும் போது மாயை உலகை விட்டு விலகி வாழவே விருப்பம் அவர்
உள்ளம். சதா சர்வ காலமும் இறையின்பத்தில் துய்ப்பர்.

எனது இருகண் ஆய செவ்வேளை  - பாடல் 6
எனது இரு கண்ணில் துலங்கும் ஒளியை தியானிக்க தியானிக்க கண்
சிவப்பாகும். அதுதான் முருகன் செவ்வேள் எனப்பட்டார். சதா சர்வ
காலமும் தியானத்தில் ஆழ்ந்திருக்கும் ஞானியார் கண்கள் சிவந்திருக்கும்.


கோவே என்குகனே எம் குருவே - பாடல்  10
எமக்கு தலைவன் எவ்வுயிர்க்கும் தலைவன் என் குகனே - என் கண்மணி குகையில்  இருப்பவன் அதனால் குகன்.  எம் குருவே - கண்மணி ஒளியே நம் ஆத்ம ஜோதி முன்னுதித்தவன் முருகன் அவனே நமக்கு வழிகாட்டி குரு. நம் உள் ஒளியே நம் உண்மை குரு.

ஞானசற்குரு சிவசெல்வராஜ்
திருவருட்பாமாலை

---தொடரும்

போக்குரையீடு



கற்கி லெனுள தருட்பெய ராம்குக
கந்தாஎன் பவைநாளும்
நிற்கி லேனுன தாகம நெறிதனில்
நீசனேன் உய்வேனோ
சொற்கி லேசமி லடியவர் அன்பினுள்
தோய்தரு பசுந்தேனே
அற்கி லேர்தருந் தணிகையா ரமுதே
ஆனந்த அருட்குன்றே


தணிகை மலை அமுதமே - கண்மணி ஒளியே ஆனந்தம் தரும்
அமுதே - அருள் பொழியும் இறைவா உன் நாமம் சொல்லாத என்வாழ்வு
என்னாகுமோ, உன் ஆகம நெறிவாழாத என் நிலை என்னாகுமோ
அப்பழுக்கில்லாத அடியார் அன்பில் தோய்ந்த இனிமையானவனே
காப்பாய்.

ஆவியே அருளமுதே - பாடல் 3
என் ஆவியாக இருக்கும் இறைவா! குறையாத அருள் மழை பொழியும்
அமுதமே.

பொன் செய்க்குன்றமே பூரண ஞானமே
புராதன பொருள் வைப்பே
மன்செய் மாணிக்க விளக்கமே - பாடல் 5

தகதகக்கும் தங்க ஜோதிமாலையே! பூரண ஞானம் தரும் கண்மணி ஒளியே !
புராதன பொருள் - மிக மிக பழமையான தோற்றம் அறிய முடியாத  காலத்திற்
முற்பட்ட ஒளியை வைத்துள்ள  கண்மணியே! ஒளி விட்டு பிரகாசிக்கும்
மாணிக்கமே கண் மணி ஒளி  - அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.

கண்ணி னண்ணருங் காட்சியே நின் திருக்
கடைக் காணோக் கருணோக்கி
எண்ணி எண்ணி நெஞ்சழிந்து  கண்ணீர் கொளும் - பாடல் 6

கண்ணினால் காண்பதற்கு அருமையான காட்சியே!
அருட்பெருஞ்சோதி ஆண்டவரே உன் திருகடை கண்ணால் அடியேனை
கண்டு அருள் பாலிக்க கூடாதா? என்றும் எண்ணி எண்ணி நெஞ்சம் உருகி
கண்ணீர் பெருக்கெடுத்து வழிய தவம் செயும் எனக்கு அருளிசெய்!

ஆறெழுத் துண்மை - திருவருட்பா


பெருமை நிதியே மால்விடை கொள்
பெம்மான் வருந்திப் பெறும் பேறே
அருமை மணியே தணிகை மலை
அமுதே யுன்ற னாறெழுத்தை
ஒருமை மனத்தி னுச்சரித்திங்
குயர்ந்த திருவெண் ணீறிட்டால்
இருமை வளனு மெய்துமிடர்
என்ப தொன்று மேய்தாதே

பெருமை தரக்கூடிய நிதியே கண்மணி ஒளி1 மாலும் சிவனும்
கூட தவம் செய்து பெறும் பெரும்பேறே கண்மணி ஒளியே! எனது
அருமையான கண்மணியே! என் குற்றம் நீங்கப் பெற்ற தணிகை
மலையான கண்மணி அமுதே உன் ஆரெழுத்தை 'சரவணபவ'
உணர்த்தும் 'அ'  ஆறு  'அ' இரு கண் ஆறுமுகம் மனதில் எண்ணி
உணர்ந்து தவம் செய்தால் - தவம் செய்யும்போது கண்ணீர் ஊறி
பெருகி வழிந்தோடும் திருவாகிய ஒளியை நினைந்து அதனால்
வரும் நீர் - திருவெண்ணீர் . இப்படி வரும் திருநீறு - திருநீர் வரப்
பெற்றவர் இம்மை மறுமை இரண்டிலும் வளம் பெறுவர் மரணமெனும்
இடர் வராது.

எய்தற்கரிய வருட்சுடரே
எல்லாம் வல்ல இறையோனே - பாடல் 2

கிட்டுவதற்கு மிகவும் அரிதான அருட்சுடரே என் கண்மணிச்சுடரே
நீயே எல்லாம் வல்ல இறைவனின் ஒளித்துகள்

துன்னும் மறையின் முடியிலொளிர்
தூய விளக்கே சுகபெருக்கே  - பாடல் 5

வேதங்கள் எல்லாம் முடிவாக சொல்கின்ற - வேதங்களின் சுருதி வாக்கியம்
உணர்த்துவது நம் மெய்ப்பொருளே, அது தூய விளக்கு கண்மணி ஒளி, அதை நாம் நாடினால் நமக்கு கிடைப்பது சுகம் சுகம் பேரின்பம்.

சேரும் முக்கண்  கனிகனிந்த தேனே ஞான்ச் செழுமணியே - பாடல் 6

நம் தவத்தால் முக்கண்ணையும் ஒன்று சேர்க்க வேண்டும். வலது கண் இடது கண் இரு கண்ணும் உள்ளே ஒன்று சேரும் மூன்றாவது கண். இந்த மூன்று கண்ணும் சேர்ந்தால் சூரியன் சந்திரன் அக்னி என்ற மூன்று ஒளியும் சேர்ந்தால் கனிந்து விடுவோம் நாம். கனிந்தால் சுவைதானே! தேன் என தித்திக்கும். அது ஞானந்தரும் செழுமையான ஒளிமிகுந்த மணியாகும்.

அழியாய் பொருளே யென்னுயிரே - பாடல் 8

கண்மணியிலுள்ள ஒளியே - பரம்பொருளின் - அருட்பெருஞ்ஜோதியின் அம்சமே என்னுயிர். அது  அழியாது.

தோன்றா ஞான சின்மயமே
தூய சுகமே சுயஞ்சுடரே - பாடல் 10


வெளியே தோன்றாமல் கண்மணி உள்ளே ஒளியாயிருப்பவனே!  ஞான மருள்பவனே! சின்மயம் என்றால் கண்ணில் இருப்பவன்! அதை அடைந்தால் கிட்டுவது தூய சுகம் -உலகத்திலே கிட்டும் சுகம் துன்பமும் சேர்ந்தது.  ஞானத்திலே கிட்டும் சுகம் பேரின்பம். இன்பம் மட்டுமே அந்த ஜோதி சுயமானது. சுயம் ஜோதி.


ஞானசற்குரு சிவசெல்வராஜ்
திருவருட்பாமாலை

---தொடரும்

Friday 23 September 2016

வேட்கை விண்ணப்பம்


மன்னே யென்ற னுயிர்க்குயிரே
மணியே  தணிகை மலைமருந்தே
அன்னே என்னை யாட்கொண்ட
அரசே தணிகை யையாவே
பொன்னே ஞானப் பொங்கொளியே
புனித வருளே புராணமே
என்னே யேளியேன் துயருழத்தல்
எண்ணி யிரங்கா திருப்பதுவே

மன்னவனே என் உயிர்க்கு உயிரான மணியே தணிகை மலையான
கண்மணி ஒளியாகிய மருந்தே என்னை ஆட்கொண்ட இறைவா
ஞானம் தரும் ஒளியே அருள் பூரணமே காத்தருள்.

உருவாய் வந்து தருவாயோ தணிகாசலத்துள் அமர்ந்த ஒருவா - பாடல் 3
தணிகாசலத்துள் - என் கண்மணிக்குள் அமர்ந்த ஒளியான இறைவா -
உருவமாக வந்து எனக்கு அருள் தருக. இறைவன் நம்  இரு கண்ணாகவே
நமக்கு முன் காட்சி தருவான் ஒளிர்வான்.

ஒளியே னெந்தா யென்னுள்ளத்  தொளித்தே யெவையுமுணர்கின்றாய் - பாடல் 10
ஒளியே - என்தாயே - என்னுள்ளத்தில் ஒளித்தே உள்ளம் - கண்மணியின் உள்ளே மறைந்திருக்கின்ற ஒளி . உள் அகம் தான் உள்ளம். கண்மணி நம் கண்மணி உள்  உள்ள ஒளி எல்லாவற்றையும் உணர்கிறது. இறைவன் நம்முள் மறைந்திருக்கின்றான்.அவனை நாம் தியானம் செய்து விடாமுயற்சி செய்து வெளிப்பட வைக்க வேண்டும். அருள்புரிவான் அவனே

பொறுக்காப் பத்து


மெய்ய ருள்ளகத்தில் விளங்குநின் பதமாம்
விரைமலர்த் துணைத்தமை விரும்பாப்
பொய்யர் தம்மிடத்தில் அடியனேன் புகுதல்
பொறுக்கிலேன் பொறுக்கிலேன் கண்டாய்
ஐயரும் இடப்பால் அம்மையும் வருந்தி
அளித்திடும் தெள்ளிய வமுதே
தையலர் மயக்கற் றவர்க்கருள் பொருளே
தணிகை வாழ்சரவண பவனே


சத்தியமாக, நெறியோடுவாழும் அன்பர் உள்ளத்தில், உள்
-அகத்தில் - கண்மணி உள்ளே - நம் மெய் - உடல் உள்ளே
விளங்கும் இறைவா உன் திருவடியாகிய இரு கண்மணி ஒளியே!
மலர்துணை - இருமலரடி. ஐயரும் இடப்பால் அம்மையும். நம் வலது கண்
சிவம் இடது கண் சக்தி. சிவமும் சக்தியும் சேர்ந்தால் பிறப்பான் ஆறுமுகன்.
 வருத்தி அளித்திடும் தெள்ளியயமுதே - நாம் தவம் செய்து செய்து
நினைந்து உணர்ந்து நெகிழ்ந்து என்றே நிலையே இங்கு வருந்தி
என்கிறார் வள்ளலார்.  அப்படி தவம் செய்கையில் அமுதமான ஆறுமுக
ஒளி கிட்டும். அது பெண்மோகம் கொண்டவர்க்கு கிட்டாது அப்பொருளே
தணிகை வாழ் சரவணபவன் மெய்ப்பொருள்.

தன்மயக்கற்றோர்க் கருள் தரும் பொருளே - பாடல் 2
தன்மயக்கம் - நான் என்ற மயக்கம் - மும்மலம் உடையவர்களுக்கு கிட்டாது
அது இல்லாதவர்க்கு அருள்தரும் மெய்ப்பொருள்.

சக்தி செங்கரத்தில் தரித்திடும் அமுதே - பாடல் 7
சக்தியாகிய இடது கண் சிவப்பாகி - விடாது கண்மணி ஒளியை
தியானிக்கும் போது கண்கள் சிவந்து கோவை பழம் போலாகும்.
இதை செங்கரத்தில் - செந்தாமரை செங்கமலம் என குறிப்பிட்டனர்
சித்தர்கள்.

அருள் செயு நினது பாததாமரை - பாடல் 9
இறைவா உனது பாததாமரை அருள்செயும். அது என் மெய்யிலிருக்கும்
கண்மணி ஒளியே. இறைவன் திருவடி தாமரை போன்றது நம் கண்கள்.

Sunday 18 September 2016

மருண்மாலை விண்ணப்பம்



சொல்லும் பொருளுமாய் நிறைந்த
சுகமே யன்பர் துதி துணையே
புல்லும் புகழ்சேர் நற்றணிகைப்
பொறுப்பின் மருந்தே பூரணமே
அல்லும் பகலு நின்னாமம்
அந்தோ நினைந்துன்  னாளாகேன் 
கல்லும் பொருவா வன்மத்தாற்
கலங்கா நின்றேன் கடையேன்


சொல்லும் பொருளுமாய் நிறைந்த சுகமே இறைவன் நம் மெய்யிலே
உள்ள பொருளாக விளங்குகிறான். மெய்ப்பொருள் அது நம் கண்மணி ஒளியே.
எந்த சொல்லை சொன்னாலும் அது அந்த பரம்பொருளையே குறிக்கும்.
ஓசை ஒளியானவன் அவனல்லவா? "சொற்கள் அனைத்தும் பொருள்
உடைத்தனவே " என்பது தொல்காப்பிய சூத்திரம். "ஓர் உருவம் ஒருநாமம்
இல்லார்க்கு ஆயிரம் திரு நாமம் பாடி தெள்ளேணம் கொட்டோமே" என
மணிவாசக பெருந்தகை திருவாசம் கூறுகிறது. எந்த சொல்லையும்
பகுத்து பார்த்தால் அது பொருளையே - மெய்ப்பொருளையே இறைவனையே
குறிக்கும்.

எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் - அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு


வள்ளுவ பெருந்தகை கூறியதும் இதுதானே, இதைத்தானே வள்ளலாரும் சொல்லும் பொருளுமாய் நிறைந்த சுகமே என்றார். நிறைந்த - ஒளி நிறைந்த. அது தானே சுகம் அல்லது பகலும் நின் நாமம் நினைந்து இரவு பகலாக எப்போதும் நின் நாமம் - இறைவா உன்னை - நினைந்து உருக வேண்டும்
என வேண்டுகிறார் வள்ளலார்.

மணியே யடியேன் கண்மணியே
மருந்தே யன்பர் மகிழ்ந் தணியும்
அணியே தணிகை யரசே தெள்
ளமுதே யென்ற னாருயிரே - பாடல் 3

மணியே என்றன் கண்மணியே அதுவே என் பிறவிப்பிணிக்கு மருந்தே அன்பர்கள்  மகிழ்ந்து அணியும் அணியே கண்மணி மாலையே! தணிகை அரசே- என் குறை தவிர்ந்த நிலையில் என் கண்மணியில் உள்ள ஒளியே - அரசே! எனக்கு பேரின்பம் தரும் தெள்ளமுதே திகட்டாதே அமுதே நீயே என் ஆருயிர் ஆக விளங்குகிறோய்.

மணியே மணியின் ஒளியே, ஒளிரும் மணி புனைந்த அணியே, அணியும் அணிக்கழகே அணுகாதவருக்கு பிணியே,பிணிக்கு மருந்தே அமரர் பெரு விருந்தே
என அபிராமி பட்டர் கூறுகிறார்.

என் கண்ணே தணிகைக் கற்பகமே - பாடல் 6

நம் கண்ணே - தணிகைமலை ஆண்டவன் இருப்பிடம். ஒளியின் உறைவிடம்
அதை அடைந்தால் கற்பக விருட்சம் போல் நமக்கு வேண்டியது எல்லாம் தரும்.

கருணைமாலை


சங்க பாணியைச் சது முகத்தனை
செங்க ணாயிரத் தேவர் நாதனை
மங்கலம் பெற வைத்த வள்ளலே
தங்கருள் திருத் தணிகை  யையனே

திருமாலும் பிரம்மனும் இந்திரனும் மேன்மை பெற வைத்தது
தணிகை ஐயனின் கருணையே.

தணிகை நாயகன் வால நற்பத வைப்பென் நெஞ்சமே - பாடல் 3
தணிகை நாயகன் - இறைவன் ஒளியின் இருப்பிடம் என் நெஞ்சமே என்
இரு கண்ணே, வால நற்பதம் - இறைவன் திருவடி - பதம் நல்ல பதம்
அது வால நற்பதம்.

கற்றதனாலாய பயனென் கொல் - வாலறிவன்
நற்றாள் தொழ ரெனின் - திருக்குறள்

வாலறிவன்  - இறைவன், இங்கே வள்ளலார் வால நற்பதம் என்கிறார்.
திருவள்ளுவரும் திருஅருட்பா பாடிய இராமலிங்கரும் வால் என
ஏன் சொன்னார்கள்? வால் போல் நீண்டு செல்லும்  ஒளி நிலை இறை நிலை
அனுபவம். நம் கண்மணி உள் ஒளி வால் போல் பின்னே - உள்ளே நீண்டு
செல்வதால் அதனால் நமக்கு பேரறிவு ஞானம் கிடைப்பதால் இறைவனை
உணர்வதால், வாலறிவன் என்று வள்ளுவரும் வாலநற்பதம் என வள்ளலாரும்
கூறினார்.

ஆறு மாமுகத் தழகை மொண்டு கொண்டூறில்
கண்களால் உண்ண எண்ணினேன் - பாடல்
12
ஆறுமா முகத் தழகை - நம் இரு கண்களையம் நாம் எப்படி காண முடியும்?
கண்ணால் எல்லாவற்றையும் காணலாம்? கண்ணை பார்ப்பது எங்கனம்?
கண்ணாடியில் காண்பதல்ல. தவத்தால் நம் இரு கண்களையும் நம் முன்னே
நாமே காணலாம்! கண்களால் உண்ண எண்ணினேன் என வள்ளல் பெருமான்
கூறுகிறார். கண்களை காண்பதற்கு தான் பரிபாசையாக கூறியது இது!

இன்சோலாலிவண் இருத்தி  என்றனன்  - பாடல் 18
தணிகை வேலவன் - கண்மணி ஜோதியில் விடாது தவம் செய்து வருபவரை
அங்கேயே இருக்க அந்த ஜோதி அருள் புரியும். வள்ளலாரை தணிகை வேலவன் அவ்வாறு இருக்க பணித்தான்.

வேதமாமுடி விளங்கு நின்றிருப்பதாம்
சாதல் போக்கு நற்றணிகை நேயனே

இறைவா தணிகை மலையான என் இரு கண்மணியுள் ஜோதியானவனே
வேதங்கள் எலாம் முடிவாக சொல்லும் உன்திருப்பாதம் தான் என் உடலுள்
- கண்மணியுள் நின்றொளிரும் ஜோதி! உன்  திருப்பதமே , என் கண்மணி ஒளியே சாவை போக்கும். மரணத்தை மாற்றும், மரணமிலா பெருவாழ்வு கிட்டும்.

Saturday 17 September 2016

இரந்த விண்ணப்பம் - 2

விடையி லேறிய சிவ பரஞ் சுடருளே
விளங்கிய வொளிக் குன்றே - பாடல் 2

விடையிலேறிய சிவபரஞ்சுடர் - விடை - நந்தி நம் தீ - ஆத்ம ஜோதி
அதன் மேல் இருப்பதே அருட்பெருஞ்ஜோதியாகிய சிவம் - ஒளி - பேரொளி.
அந்த சிவஜோதிக்குள் உள்ள ஒளி மலையே தணிகை மலை - நம் கண்மலை
கண்மணி ஒளி.

ஊழும் நீக்குறும் தணிகையெம் மண்ணலே
உயர் திருவருட் டேனே - பாடல் 6

ஊழும் நீங்கும் - நாம் செய்த ஊழ் வினையாவும்
நம் தணிகையான கண்மணியுள் ஒளிரும் உயர்வான பெருஞ்சோதியின்
வடிவமே தேன் போன்று இன்பம் தரும் முத்தியின்பம் தரும் தெய்வமே
- உன்னை பற்றிட நீங்குமே!

நன்று நின்றிருச் சித்தமென் பாக்கியம்
நற்றிணிகை யிற் தேவே - பாடல் 8

தெய்வமே என் நல்ல தணிகையான கண்மணியில் துலங்கும்
ஜோதியே! எல்லாம் நல்லதாக நடக்கும் எப்படி? திருவடியே
சரணம் என்றிருந்தால்! இறை சித்தம் - இறைவன் ஆக்கினைப்படி
எல்லாம் சிறப்பாக நடக்கும் அதுவே நாம் செய்த பெரும் பாக்கியம்
திருவடியே கதி என இருப்பதே பெருநிலை.

தணிகையங் கடவுளே சரவணபவ கோவே - பாடல் 9
நம் குற்றங்கள் வினைகள் யாவும் தணியும் இடம் இல்லாதது ஆகும் இடம்
நம் கண்மணி! அங்குள்ளே ஒளிர்விட்டு பிரகாசிப்பவன் முருகன். அவன் தான்
சரவண பவ தெய்வம்.

ச் + அ = ச
ர் + அ =ர 
வ் + அ = வ
ண் + அ = ண
ப் + அ = ப
வ் + அ = வ

சரவண பவ ஆறு எழுத்திலும் மறைந்து நிற்பது 'அ' என்பதே.
இந்த அ  தான் கண்ணினுள் மணிஒளி. எட்டு என்றதமிழ் எண்.
வலது கண் சரவண பவ தெய்வம் - அ. தெய்வம் , ஆறு - அ .
தெய்வம். ஆறுமுகம். ஒரு கண்  3 வட்டம்  2 கண் 6 வட்டம்.
இருகண்ணும் தான் ஆறுமுகம் எனப்பட்டது. இரு கண்ணும் காணும்
- ஆறுமுகங்காணும். சிவ ஜோதியின் முன் வருவது இந்த அகர ஜோதி
தவம் செய்வார்  காணும் முதல் அனுபவம்.


ஞானசற்குரு சிவசெல்வராஜ்
திருவருட்பாமாலை

---தொடரும்

இரந்த விண்ணப்பம் - 1


நாளை யேகியே வணங்குவது மெனத்தினம்
நாளையே கழிக்கின்றோம்
ஊளை நெஞ்சமே என்னையோ என்னையோ
உயர்திருத் தணிகேசன்
தாளை யுன்னியே வாழ்ந்திலம் உயிருடல்
தணந்திடல் தனையிந்த
வேளை யென்றறி வுற்றிலம் என் செய்வோம்
விளம்பரும் விடையோமே

ஒவ்வொரு நாளும் நாளைக்கு போய் இறைவனை வணங்கலாம்
என்று கூறியே நாள் பலவாக கழிக்கின்றோம்!  இந்த உயிர் தாங்கிய உடல்
சில்லென குளிர்ந்து போகும் காலம் என்று?  என யாரும் யாரும் அறிய
மாட்டோமே!

ஊளை நெஞ்சமே - ஊழ் - நாம் செய்த பற்பல பிறவிகளிலும்
செய்த கர்மவினையே ஊழ்வினை!

அது எங்கே இருக்கிறது? ஊளை  நெஞ்சமே - நெஞ்சத்தில் இருக்கிறது.  நெஞ்சுதான் அஞ்சும் சேர்ந்த கண்! கண்மணி மத்தியினுள் ஒளி உள்ளது. உள் உள்ள ஜோதியை மறைத்து கொண்டு இருக்கும் மெல்லிய மறைப்பே - ஜவ்வே - திரையே - ஊழ்!

ஊழ் அகல வேண்டுமாயின் உள்ஜோதி சுடர்விட்டு பிரகாசிக்க வேண்டும்.
தணிகை ஈசன் - கண் மணி திருவடியை பற்றினால் - உள் உள்ள தீ பற்றி
எரிந்தால் ஊழ் இல்லாது மறைந்து விடும். தவம் செய்தால் கிட்டும் பலன்
இது!

ஞானசற்குரு சிவசெல்வராஜ்
திருவருட்பாமாலை

---தொடரும்

Tuesday 13 September 2016

ஆற்றா முறை


விண்ணறாது வாழ் வேந்த னாதியர்
வேண்டி யேங்கவும் விட்டென்  னெஞ்சகக் 
கண்ணறாது நீ கலந்து நிற்பதைக்
கள்ள நாயினேன் கண்டு கொண்டிலேன்
எண்ணறாத்  துயர்க் கடலுண் மூழ்கியே
இயங்கி மாழ்குவேன் யாது சேகுவேன்
தண்ணறாப் பொழில் குலவும் போரிவாழ்
சாமியே திருத்தணிகை நாதனே


விண்ணக வேந்தன் இந்திரன் மற்றும் தேவர்களும் வேண்டி
நிற்கும் தணிகை நாதனே குளிர்ச்சி பொருந்திய சோலை
சூழ் ஊரில் வாழும் சாமியே என்னுள் நீ இருப்பதை
அறியாமல் வினையால் துன்பத்தில் மூழ்கினேன் என் செய்வேன்!

இறைவன், என் நெஞ்சகக் கண்ணறாது கலந்து நிற்கிறான் என வள்ளலார்
கூறுகிறார். ஒளியாக இறைவன் நம் இரு கண்மணி உள்ளில் கலந்து
நிற்கிறான். நெஞ்சகக்கண் என்கிறார் வள்ளல் பெருமான். நெஞ்சு என்றால்
மார்பு என்று பொருள். இங்கே அதுவல்ல - நெஞ்சகக் கண் - நெஞ்சு + அகம் + கண். நெஞ்சு என்றால் அஞ்சும் சேர்ந்தது. பஞ்சபூதம் ஐந்தும் ஒன்று சேர்ந்து இருக்கும் இடைமே நெஞ்சு. நமது கண்ணில் தான் 5 பூதங்களின் அம்சமும் உள்ளது. கண் தான் நெஞ்சு!அதன் அகத்திலே இருக்கும் ஒளியே பரவெளியில் துலங்கும் பரவொளி அம்சம். இறைவா என் கண்ணில் நீ கலந்து நிற்கிறாய்!

கண்ணினுள் மணியாக நின்றனை - பாடல் 3

இறைவன் - அருட்பெருஞ்ஜோதி ஆண்டவன் கண்ணினுள் மணியாக நிற்கிறான்.

இன்பவான் சோதியே யருள் தோற்றமே
சுக சொருப வள்ளலே  - பாடல் 6


நம் கண்மணியின் மத்தியுனுள் உள்ள ஒளி நமக்கு பேரின்பம் நல்கக்கூடிய
வான்சோதி , விண்ணுள் நிறைந்த அருட்பெருஞ்ஜோதியே! சாட்சாத் இறைவனின் அருள் தோற்றமே நம் கண்மணி ஒளி. அதுவே நாடுபவர்க்கு சுகத்தை தரும் உருவான ஜோதி. ஜோதி தங்கிய வள்ளலாகிய இறைவனின் சொரூபம். கண்மணியே இறைவனின் உருவம்.

நீயும் நானுமோர் பாலு நீருமாய் நிற்க - பாடல் 8

இறைவன் நம் உடலிலே கண்ணில் மணியில் ஒளியாக இருக்கிறான், நாம் அந்த ஒளியோடு ஐக்கியமாக வேண்டும். எப்படி? பாலும் நீரும் போல இரண்டற காலத்தல் வேண்டும். அதுவே உத்தம தவசீலர் இயல்பு.

மெய்யருளுள்ளே விளங்கும் சோதியே
வித்தில்லா வான் விளைந்த வின்பமே - பாடல் 9

மெய்யருள் உள்ளே - மெய் அருள் - உள்ளே தான் உள்ளது .
நாம் பெற வேண்டிய உண்மையான இறையருள் நம் உள்ளே -
கண்மணி உள்ளே தான் உள்ளது .நாம் பெற வேண்டிய உண்மையான
இறை அருள் நம் உள்ளே - கண்மணி உள்ளே தான் உள்ளது. அங்கே
சோதியாக விளங்குகிறான், அந்த பேரின்பம் நல்கும் சோதி புதிதாக
முளைத்த ஒன்றல்ல! வான்வெளியிலே ஆகாயத்திலே பேரொளியானா
அருட்பெருஞ்ஜோதியின் அம்சமே.

பாலீரென நின்னடி க்கணே  பற்றி
வாழ்ந்திடபி பண்ணுவாய் - பாடல் 10.

பாலில் கலந்த நீர் போல உன் திருவடியாக என் கண்ணை பற்றி
வாழ்ந்திட  அருள் செய்வாய்.

ஞானசற்குரு சிவசெல்வராஜ்
திருவருட்பாமாலை

---தொடரும்

Monday 12 September 2016

சீவ சாட்சி மாலை - 3



எண்ணிலாளப்பரிய பெரிய மோன இன்பமே
அன்பர் தம் இதயத்தோங்கும் தண்ணினால் பொழில் - பாடல் 10


எண்ணி அறிய முடியாத பெரிய, அளவிட முடியாத, எங்கும் நிறைந்த ஒளியை
அருட்பெருஞ்ஜோதியை மோன நிலையிலிருந்தே அதாவது மௌனமான சும்மா இருந்தே அறிய முடியும் அதையும் தூய்மையான அன்பர்கள் தம் இதயத்தில் தான் உணர்வர் . குளிர்ச்சி பொருந்திய நீர் நிறைந்த நம் கண்கள் தாம் இதயம் - இருதயம். இரு உதயம் - வலது கண்ணில் சூரியன் உதயம், இடது கண்ணில் சந்திரன் உதயம். இரு கண்ணுமே இருதயம் என்றனர் ஆன்றோர்.இரு கண் ஒளியை பற்றினவரே இறைவனை காண்பர். அடைவர் -  .

முக்கட்ஜோதி மணியினிருந்தொளி ரொளியே  பாடல் 16

முக்கண் - சூரியன் சந்திரன் அக்னி. வலது கண் இடது கண் உள் உள்ள மூன்றாவது கண். இம்மூன்று கண்ணினுள்ளும் இருக்கும் ஒளியின் உள் ஒளியே, ஜோதியுட் ஜோதியே

சென்னிமிசை கங்கை வைத்தோ னரிதிற் பெற்ற
செல்வமே யென்புருக்கும் தேனே - பாடல் 20

சென்னிமிசை கங்கை வைத்தோன் - தலையில் கங்கையை சூடிய சிவன் - சென்னி எனத்தான் சொன்னார். தலை என சொல்ல வில்லை சென்னி என்றால் கன்னம். கன்னத்தின் மேல் கண் இருக்கிறது அல்லவா. நம் கண்மணி இருக்கிறது அல்லவா அதில் நீர் இருக்கிறது அல்லவா? நம் கண்மணி ஒளியில் - ஒளிக்குள் ஒளியான சிவம் இருக்கிறது.கண்ணில் உள்ள நீர் தான் கங்கை வற்றாத கங்கை. ஞானிகள் பரிபாசையாக சொன்னது இது. கண்ணில் உள்ளது தான் கங்கை கண்ணினுள் இருப்பவர் சிவம்.

கங்காஸ்நானம் ஆயிற்றா என தீபாவளிக்கு கேட்பார்கள்! புறத்தே காசியில் ஓடும் கங்கை நதியில் குளிப்பது அகத்தே நம் கண்மணியே நினைத்து உணர்ந்து தவம் செய்து ஊற்றெடுக்கும் கண்ணீரில் உடல் நனைவது தான் உண்மையான கங்கா ஸ்நானம்.

கங்கை எங்கு என்று கேட்பாயேல் கேசரியாம் கோசாரத்தின் புருவமையம். அங்கையடா அஷ்டகங்கை என்றனர் சித்தர்கள்.

அதாவது கங்கை தலையில் புருவ மையத்தில்  உள்ளது. புருவ மத்தி எதென்றாக்கால் பரப்பிரம்மான தொரு அண்டவுச்சி. அண்டம் போல் அழகியதாம் கண் மூன்று டையதாம் ஒற்றி கடலேருகே நிற்கும் கரும்பு. புருவமத்தி தான் அண்டவுச்சி. அண்டம் போல் அழகிய வட்டம் 3 வட்டம் கொண்ட கண்ணின் உச்சி என்றால் கண்ணின் மையம் -
மத்திய பகுதி - அது கரும் - பூ - கரும்பு அல்ல.அதாவது கருப்பு பூ அது கண்மலர் தானே புருவ மத்தி என்றாலும் அண்டவுச்சி என்றாலும் கருப்பு என்றாலும் கண் தான்.

ஒவ்வொரு சித்தரும் ஒரு பூட்டை போட்டுள்ளனர். ஒரு சித்தர் பாடிய பரிபாஷை அறிய இன்னொரு சித்தர் பாடல் உதவும் ஞான நூற்கள் பலவும் பயில வேண்டும். அப்போதுதான் உண்மை விளக்கம் ஞான பரிபாசை விளக்கம் அறியலாம்.

வள்ளல் பெருமான் சொன்ன சென்னிமிசை கங்கை வைத்தோன் அரிதிற் பெற்ற செல்வம் என்னவென்றால் நாம் நம் இரு கண்மணி ஒளியை தியானித்தால் நமக்கு முன் முருகன் ஆறுமுக ஜோதி நம் இரு கண் காட்சி கிட்டும். இது ஞான அனுபவம். ஆத்ம அனுபவம்.
கதைக்குப்போய் விடாதீர் அது குழந்தைகளுக்கு கருத்தை கொள்பவனே அறிவுள்ளவன். ஞானம் பெறுவான்.

யென்பெருக்கும் தேனே - நாம் தவம் செய்து நம் கண் ஒளி பெருகி உடல் முழுவதும் எழுபத்தீராயிரம் நாடி நரம்பில் ஒளி ஊடுருவி பரவும். எலும்பும் உருக்கும் தேன் என வள்ளல் பெருமான் அந்த ஆனந்த அனுபவத்தை அனுபவித்து பாடியுள்ளார். வள்ளலார் பாடல் ஒவ்வொன்றும் ஞான
அனுபூதியை. இதை எழுதுவதற்கு அறிவு தந்த வள்ளல் பெருமானுக்கு அடியேன் கடமை பட்டுள்ளேன். ஈடில்லா மாபெரும் ஞானி திருவருட்பிரகாச வள்ளலார்  இராமலிங்க சுவாமிகள்.

ஞானசற்குரு சிவசெல்வராஜ்
திருவருட்பாமாலை

---தொடரும்

சீவ சாட்சி மாலை - 2

கரும்பினிழிந் தொழுகு மருட்சுவையே முக்கண்
கனிகனிந்த தேனே என் கண்ணே ஞானம் தரும்
புனிதர் புகழ் தணிகை மணியே சீவ சாட்சியே  - பாடல் 4

இனிய நல் கரும்பு சாற்றை விட சுவையான கண்மணி ஒளி
அனுபவமே! முக்கண் கனி கனிந்த தேனே - வலது கண் இடதுகண்
உள்ளே உள்ள அக்னிகலை மூன்றாவது கண். மூன்றும் சேர்ந்து
ஒளிர்ந்தால் மூன்று தீயும் சேர்ந்தால் முத்தி முக்தியின்பம் பேரின்பம்
எல்லாமே என் கண்ணே, ஞானம் தருவது தணிகை மணியே
சீவசாட்சியான கண்மணி ஒளியே.

அன்னை முதலாம் பந்தத் தழுந்தி நாளும் வியிற்றோம்பி
மனமயர்ந்து நாயேன் முன்னைவினையால் படும்பாடெல்லாம் - பாடல் 6

அன்னை முதல் பற்பல உறவுகள் நம்மை சம்சார சாகரத்துள் தள்ளி விடுவர்.
அதனால் உறங்கி களித்தலே வாழ்வு என்றாகி மனம் வெதும்பி துன்பத்தின்
எல்லைக்கே போய் விடுவோம். இவ்வாறு எல்லோரும் அவரவர் செய்த
முன்வினை பயனால் தீராத துன்பம் அடைவர். அதிலிருந்து விடுபட
சீவ சாட்சியாக விளங்கும் தணிகை மணியை, நம் கண்மணியை சார்ந்திருந்தாலே
சிறந்த உபாயம்.

உபாயம் இதுவே மதியாகும் அல்லாதவெலாம் விதியே மதியாய் முடிந்து விடும். தன்னை உணரும் கண்மணி ஒளி தவம் செய்தால் முன்னை வினையை  தீர்க்கலாம். நம் உள்ஒளி வழிகாட்டும் ஒளியூட்டும்.

தன்னார்வத்தமர் தணிகை மணியே   - பாடல் 10

நம் கண்மணி ஒளியே - சீவ சாட்சியாக விளங்கும் தணிகை மணியை நாம்
பெறவேண்டுமாயின் நமக்கு ஆர்வம் விருப்பு - வைராக்கியம் வேண்டும்.
அவரவர் தன்னார்வத்துடன் உழைப்பது தான் தவம். கடும் முயற்சி வேண்டும்.
தீவிர முயற்சி வேண்டும். அப்படி பட்டவர்க்கே தணிகை மணி கைவல்யப்படும்.

ஞானசற்குரு சிவசெல்வராஜ்
திருவருட்பாமாலை

---தொடரும்

Saturday 10 September 2016

சீவ சாட்சி மாலை -1


பண்ணேறு மொழி யடியார் பரவி வாழ்த்தும்
பாதமல ரழகின் யிப்பாவி பார்க்கின்
கண்ணேறு படுமென்றோ கனவி லேனும்
காட்டென்றாற் காட்டுகிலாய் கருணை யீதோ
விண்ணேறு மரிமுதலோர்க் கரிய ஞான
விளக்கே யென்கண்ணே மெய் வீட்டின் வித்தே
தண்ணேறு பொழிற் றணிகை மணியே சீவ
சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே

இறைவா உன் அடியாரெல்லாம் உன் பாத மலர் அழகினை - தன் கண்மலர்
அழகை பலவாராக போற்றி பாமாலை புனைந்துள்ளனரே! யாவர்க்கும் அரிய
ஞான விளக்கே என் கண்ணே மெய் வீட்டின் வித்தே - என் கண்மணி ஒளியே
சீவ சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே - என் சீவனாகி என்னுள் இருந்து
அருளும் தணிகை மணியே உன்னை சகச நிலையே  அடையும் வழி! என்று
உருகுகிறார் வள்ளல் பெருமான்.

இறைவனை அடைய, சகஜ நிலையே வேண்டும். எப்போதும் சதா சர்வ காலமும்  நம் கண்மணி ஒளியை நினைந்து  நினைந்து உணர்ந்து உணர்ந்து இருத்தலே சாகச நிலை. எத்தொழிலை செய்தாலும் ஏதாவஸ்தை பட்டாலும் முத்தர் மனம் இருக்கும் மோனத்தே.


பிறவிநோய்க்கு மருந்தாய நின்னடியை - பாடல் 3

நாம் எத்தனை பிறவி எடுத்தோமோ தெரியாது. மிகப்பெரிய நோய்
பிறந்து இறந்து பிறந்து இறந்து போவதுதான். இந்த  பிறவிநோயை
விலக்க ஒரே மருந்து நின் திருவடியே இறைவா நீயே உன் திருவடியை
என்னிரு கண்மணியில் ஒளியாக பதித்துள்ளாய் இது தான் பிறவி
பிணிக்கு மருந்து.


ஞானசற்குரு சிவசெல்வராஜ்
திருவருட்பாமாலை

---தொடரும்

Wednesday 7 September 2016

குறையிரந்த பத்து


சீர் பூத்த வருட்கடலே கரும்பே தேனே
செம்பாகே எனது குலத் தெய்வமேநல்
கூர்பூத்த வேல் மலர்க்கை யரசே சாந்த
குணக்குன்றே தணிகைமலைக் கோவே ஞானக்
பேர்பூத்த நின்புகழைக் கருதி யேழை
பிழைக்கவருள் செய்வாயா பிழையை நோக்கிக்
பார்பூத்த பாவத்திலுற விடிலென் செய்கேன்
பாவியே னந்தோ வன்பயந் தீரேனே



சீர் பூத்த அருட்கடலே - இறைவன் நமக்கு கொடுக்க சீர் - ஒளி
-பூத்த - எதுபூக்கும்  மலர்தானே - கன்மலர் தான்.கண்மலரின்
ஒளியான இறைவன் அருளை வாரி வழங்குவதில் வற்றாத
கடல் கரும்பு தேன்  மற்றும் இனிமையானவன். எனது கண்ணில்
ஒளியான இறைவனே எனது குல தெய்வம். கூரான வேலை
முச்சுடரும் சேர்ந்த நிலையை சேர்ந்த நிலையை உடைய கண்மலர்
கையுடைய அரசே அன்பும் அமைதியும் சாந்த குணமும் கொண்ட
என் கண்ணே உபசந்தபதமே. தணிகை மலை தலைவனே
ஞானம் தரும் உன் பெருமையை பேசி வாழ அருள் செய். என்
வினை வழி துன்பத்திலாழ்ந்து மீண்டும் பிறவி கடலுள் புகாது
என்னை காத்தருள் என் கண்மணியே ஒளியே என்கிறார்.

தணிகை வரையமுதே ஆதிதெய்வமே - பாடல் 2
தணிகையான என் கண் ஒளி அமுதே நீயே ஆதிதெய்வம் அதாவது
நாம் தவம் செய்தால் முதலில் காணும் தெய்வம் நம் கண் ஒளி.

கையாத அன்புடையார் அங்கை மேவும் கனியே யென்னுயிரே
யென் கண்ணே யென்றும் பொய்யாத பூரணமே தணிகை ஞானப்பொருளே
- பாடல் 5

தூய அன்புடையவர்களுக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போல் விளங்கும்
இறைவா! என் உயிராக இருக்கும் இறைவா! என் கண்ணே - கண்மணியுள்
ஒளியே இறைவா! சாத்தியமான வஸ்துவே! குறைவேயில்லாத
பரிபூரணமே தணிகையை நான் அடைந்தால் என் ஞானப் பொருளே நீ தான்.

துய்க்குமர குருவே தென்தணிகைமேவும் சோதியே பாடல் 6
தூய்மையான - நம் உடலில் தூய்மையானது கண்மணி மட்டுமே
குமரகுருவே - குமரன் என்றால் இளைஞன் - இளமை -நம் கணிமணி
மட்டுமே பிறந்ததிலிருந்து வளர்ச்சி யடையாமல் என்றும் இளைமையாக
இருப்பது அதில் உள்ள ஒளியே - நம் உயிரே நமக்கு குருவாகும். அதாவது
அவரவர்க்கு அவரவர் ஆன்மாவே குரு. அதை அடைய உணர வழிகாட்ட
வெளியே ஒரு நல்ல குருவை பெற்றுக்கொள்ளுங்கள். தணிகை மேவும்
சோதியே  - நம் குறை தணிந்து வரும்போது மனம் அடங்கும் போது
அதில் - கண்மணியில் உள்ள சோதி வெளிப்படும், காணலாம். தணிகை
சோதியே என வள்ளலார் உரைத்தது இதுவே.

ஞானக்குல மணியே குகனே சற்குருவே யார்க்கு தேவே
நின்னிரண்டு திருத்தாள் சீரே   -- பாடல் 10

என் மணியே - கண்மணியே எனக்கு ஞானத்தை தரும் என் குல
தெய்வம். கண்மணி குகையினுள் இருக்கும் ஒளியான குகனானவனே
எனக்கு சற்குரு. உலகில் உள்ள யார்க்கும் தெய்வம்
கண்மணி ஒளியே. இறைவா உடல் இரு தாமரை திருவடிகளே
அதிலுள்ள ஒளியே நீ எனக்கு வழங்கிய சீர்.



ஞானசற்குரு சிவசெல்வராஜ்
திருவருபாமாலை

---தொடரும்

Monday 5 September 2016

செழுஞ்சுடர்மாலை


ஊணே உடையே பொருளே
என் றுருகி மனது தடுமாறி
வீணே துயரத் தழுந்துகின்றேன்
வேறோர் துணைநின் அடிஅன்றிக்
காணேன் அமுதே பெருங்கருணைக்
கடலே கனியே கரும்பேநல்
சேணேர் தணிகை மலைமருந்தே
தேனே ஞானச் செழுஞ்சுடரே.

ஒப்பற்ற தணிகையில் - என் கண்களில் விளங்கும் செழுமையான
சுடரே - ஜோதியே பெருங்கருணை கடலே, கனியே, கரும்பே தேனே
என் வினைகளை போக்கும் மருந்தே அடியேன் வீணாக உணவுக்கும்
உடைக்கும்  உலக பொருள்களுக்குமாக வீணாக அலைந்து உழல்கிறான்,
மனம் தடுமாறுகிறேன், தணிகை வாழ்வதே உன்னையன்றி என்னை
ஆட்கொள்வார் யார்?

உன் திருவடியே என்னை காக்கும் தாயும் தந்தையும்  நீ - பாடல் 2
என் கண்களில் துலங்கும் ஒளியே இறைவா நீயே என் தாயும் தந்தையும்
என்பதை உணர்ந்து கொண்டேன். உடல் கொடுத்தவள் - உலகத்தாய்.
உயிர் கொடுத்தது - தாயும் தந்தையுமான இறைவன்  இறைவனே
எல்லாவுயிர்க்கும் அம்மையப்பன்.

பொருளே யென் கண்ணே நின்னை கருதாத - பாடல் 3
பொருளே - மெய்ப்பொருளே - என் கண்ணே என் கண்ணுள் நின்றலங்கும்
ஜோதியே இறைவா உன்னை கருதாதவன் - அறியாதவன் முக்தியடைய மாட்டான்.

எந்தாயே  வினைதேனொழுகும் மலர் தருவே விண்ணே விழிக்கு
விருந்தே - பாடல் 5

எனது தாயே, நன்கு விளைந்து தேன் ஒழுகும் மலர் கொண்ட மரம் போன்று என்  கண்மணி தவத்தால் விளைந்து முற்றி - நெத்துக்காயாகி நெத்துக்கனியாகி -நெற்றிக்கண்ணாகும். தவம் செய்யச் செய்ய கண்ணொளி பெருகப் பெருக மணி - கண்மணி நன்கு விளைந்த கனியாகும். பேராற்றல் பெறும். விண்ணே - என் விழிகளுக்கு நல்விருந்தே தவம் தான் - அதில் கிடைக்கும் காட்சி தான்  அனுபவம் தான் விண்ணில் - வெளியில் நம்முன் நாம் காணும்காட்சிதான் நல்விருந்து.

எண்ணப்பத்து


அணிகொள் வேலுடை யண்ணலே நின்றிரு
வடிகளை யன்போடும்
பணிகிலே னகமுருகி நின் றாடிலேன்
பாடிலேன் மனமாயை
தனிக்கிலேன் றிருத் தணிகையை நினைக்கிலென்
சாமிநின்  வழிபோகத்
துணிகிலே னிருந்தென் செய்தேன் பாவியேன்
துன்பமும் எஞ்சேனே

திருவாகிய இறைவன் ஒளியானவன் இருக்கும் தணிகையை -
குற்றம் தணியும் கை இரு கண்ணை நினைக்கவில்லையே!
வேல் கொண்ட முச்சுடர் ஒன்றான உன் திருவடிகளை அன்போடு
பணியவில்லையே! மனமுருகி மனம் இருக்கும் இடம் கண் -
கண்ணீர் பெருக்கி உருகி பாடி ஆடவில்லையே! மனமானது
மாயையால் அலை கழிக்கப்படுவதிலிருந்து மீண்டும் தணியும் கையை
மாயையால் அலைக்கழிக்கப் படுவதிலிருந்து மீண்டும் தணியும்
கையை தணிகையை பற்றவில்லையே! சாமி - ஒளியே - அருட்பெருஞ்ஜோதியே உன்வழியே - விழிவழியே உள் உள் போக துணியவில்லையே! என் செய்வேன்
எத்துன்பம் எங்கனம் தீரும்!

நின் காலை பிடிக்கவும் கருணை நீ செய்யவும் கண்டு
கண் கழிப்பேனோ - பாடல் 2


இறைவா உன் கால் - திருவடி - என்இருகண் நான் பிடித்தால் நீ
கருணை செய்வாயே, என் கண் ஒளியை நான் பற்றற்ற நீ என்னை
பற்றிக் கொள்வாயே! அதை - உன் ஒளி அழகை நான் கண்ணார கண்டு களிப்பேனே!

மயிலின் மீது வந்தருள்தரும் நின் திருவரவு கயிலை
நேர் திருத்தணிகையம்பதி  - பாடல் 4

நான் கண் மணியில் - திருவடியில் - நினைவை நிலை நிறுத்தும் போது முருகன் - அழகான பலவர்ண ஒளியாக காட்சி தருவான்.

திருத்தணிகை மலை கயிலை மலையே திருவாகிய சிவம் நம் குற்றம்
தணிகையில் வெளிப்படும். சிவம் இருக்கும் மலை தானே கயிலை -
திருக்கை லாயம்.

குளங்கொள் கண்ணனும் கண்ணனும் பிரமனும்
குறிக்கரும் பெருவாழ்வே
தணிகையம் பதியில் வாழ்தேவே  பாடல் -8

என் குற்றம் தணிந்த என் இரு கண்ணில் வாழும் ஒளி தெய்வமே
நீயே கண்ணனும் முக்கண்ணனான சிவன் - கண்ணனும் கிருஷ்ணமணியான
திருமால் - பிரமனும் வினைகளை உருவாக்கும் படைத்தோன் ஆகவும்
விளங்குகிறாய். நம் கண்மணியே சிவன் விஷ்னு பிரம்மாவாகியே
சிவலிங்கம். கண்ணே - கட்டி முடிக்காத சிவலிங்கம்.

Sunday 4 September 2016

திருத்தணிகை பிரார்த்தனை மாலை - 3

கருப்பாழ்செயும் உன் கழலடிக்கே -  பாடல் 19
இறைவனுடைய ஒளி பொருந்திய திருவடிகளே நாம் மீண்டும்
கருப்பையில் புகாமல் காத்து அருள் செய்யும்.

யென் கண்மணியே
என் சிரம் செருங்கொலோ நின் துணையடியே  - பாடல் 20

என்கண்மணியே என் சிரத்தில் - தலையில் பாதிக்கப்பெற்ற
இறைவனுடைய துணையடி இரு திருடியாகும்.

அருணகிரிபாடும் நின்னருள் தோய்ப்புகழை  - பாடல் 21
அருணகிரி நாதர் பாடிய திருப்புகழ் முருகன் அருளால் பாடியதாகும் ,
ஞானபாக்கள் .

மனோலயம் வாய்ந்திலேனேல் சனன மரணமெனும்
கடற் கென் செய்வேன்  - பாடல் 22

மனம் லயம் ஆகாவிட்டால் பிறப்பு இறப்பு எனும் கடலில்
ஆழ வேண்டியது தான்,

மனம் லயமாகும் இடம் ஆலயம், அது தணிகை மலை. நம்
அனைத்து  துர்குணங்களும் தணிந்தால் - தணியும் இடமே ஆலயம்
- தணிகாசலம். குணம் - மனதின் வெளிப்பாடு தானே. குறை தணியும் இடம்
மனம் லயமாகும் இடம் அ  லயமாகும். இடம் கண் . அ - சூரிய கலை வலது கண். அ -லயமானால் மனம் லயமானால் ஒளி - இறைவன்
- ஆத்மாவை காணலாம். கண்டால் பிறப்பு இறப்பு இல்லை. மனம் அ - வில் வலது கண்ணில்  லயமாகுமானால் மனம் இருப்பது கண்தானே!

மண் நீர் அனல்  வளிவானாகி  நின்றருள் வத்து - பாடல் 25
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என ஐந்து பூதங்களும் சேர்ந்த
ஒரு பொருள்தான் நம் மெய்ப்பொருள் கண் - ஒளி.

அணி ஆதவன் முதலா மட்டமூர்த்தம் அடைந்தவனே - பாடல் 26
தணிகாசலமான - நம் குற்றங்கள் தணியும் இடமான அணி கண்ணே!
சூரியன் சந்திரன் துலங்கும்  8 ஆனவன், எட்டில் மூர்த்தியாக இருப்பவன்.
8 வலது கண் 2 இடது கண்.

கண்ணவனே தணிகாசலனே - பாடல் 28
நம் குற்றங்கள் தணியும் இடமான கண்ணே - தணிகாசமூர்த்தி -
இருக்குமிடம்.


ஞான சற்குரு சிவசெல்வராஜ்
திருவருட்பா மாலை

- தொடரும்

திருத்தணிகை பிரார்த்தனை மாலை - 2




கண் மூன்றுறு செங்கரும்பின் முத்தே
பதம் கண்டிவான்  - பாடல் 2

கண் மூன்றில் - உறும். 1 கண் மூன்று வட்டம். வெள்ளை விழி - கருவிழி
- கண்மணி இதுவே கண் மூன்று என்றதாகும். அதில் உறுவது ஒளி. அது
செங்-கரும்-பூ தியானம் செய்ய செய்ய கண் சிவப்பாகும்.

கண்தான் கரும்-பூ என்பது கரும்பு அல்ல. கரும் பூவாகிய கண்ணில் முத்து
போன்ற வெள்ளொளி தோன்றும் அப்போது கண்வெள்விழி சிவப்பாகும்.
அதுதான் அனுபவம். இந்தபடியே காண்பவன் தான் பதம் இருகண்களாகிய
இறைவனின் ஒளி பொருந்திய பாதம் - திருவடி காண்பான்!

மாணித்த ஞான மருந்தே என் கண்ணினுள்
மாமணியே  - பாடல் 3

என்றும் உள்ள நித்தியானந்தம் தரக்கூடிய ஞான மருந்தானே என்
கண்ணுள் இலங்கும் மாமணியே. கண்மணியில் உள்ள ஜோதியே ஞான மருந்து.

தணிகாசலத்திற் பரனே குமார பரமகுருவே குகா
எனக்கூவி நிற்பேன் - பாடல் 7.

தியானம் செய்து செய்து நம் துர்குணங்கள் எல்லாம் தணிந்த நிலையிலே தான் - நாம் தான் தணிகாசலம். அப்போது நம் உள்ளொளி தோன்றும். அது குமரன் இளமையானது. பரம  குரு. நமக்கு நம் உயிரான ஒளி தான் குருவாக இருந்து நம்மை வழி நடத்தி சிவமாகிய பேரொளியிடன் சேர்ப்பிக்கும் குமரனே குமரனே பரமகுரு அவன் இருப்பிடம் நம் இருதய குகை, இரு உதய குகை. இரு கண்மணி உள்ளகும் கையில் இருப்பதால் குகா இதை எல்லோரும் அறிய கூவுவேன்.

தெய்வ மணிச்சுடரே
தணிகை சிவ குருவே  - பாடல் 14

தெய்வம் சுடராக நம் மணியில் கண்மணியில் இருக்கிறது.
தியானம் செய்யச் செய்ய நம் குறையெலாம் தணிந்தாலே
குருவாக நம் உள்ஒளி - முருகன் - சிவத்துக்கே குருவான
ஞான பண்டிதன் வருவான் சிவகுரு.


ஞான சற்குரு சிவசெல்வராஜ்
திருவருட்பா மாலை

- தொடரும்

திருத்தணிகை பிரார்த்தனை மாலை - 1


சீர்கொண்ட தெய்வ வதனங்க ளாறும் திகழ்கடப்பந்
தார்கொண்ட பன்னிரு தோள்களும் தாமரைத் தாள்களுமோர்
கூர்கொண்ட வேலும் மயிலும்நற் கோழிக் கொடியுமருட்
கார்கண்ட வன்மைத் தணிகாசலமு மென் கண்ணுற்றதே

Image result for vallalar muruga
இராமலிங்க சுவாமிகள் 9 வயது பாலகனாக இருந்த போது
தன் வீட்டில் ஒரு கண்ணாடியும் அதன் முன் விளக்கும் ஏற்றி
வைத்து அதன் முன் அமர்ந்து கண் திறந்து பார்த்திருந்து
பார்த்திருந்து தியானம் செய்தபோது கிடைத்த அனுபவமே
இப்பாடல். யார் தியானம் செய்தாலும் கிடைக்கும் முதல் அனுபவம்
இதுதான். கண்ணாடியில் நம் உருவம் தெரியும். நம் கண்ணில் விளக்கின்
ஜோதி பிரதிபலிக்கும். இப்படியே பார்த்து பார்த்து இருக்க இருக்க
நம் உருவம் கொஞ்சம் கொஞ்சமாக மறையும்! நம் இரு கண்மட்டும்
தெரியும். கண்மணி ஒளி தெரியும். இதை விவரித்துத்தான் வள்ளலார் பாடினார் இப்பட்டை! சீர்கொண்ட தெய்வ வதனங்கள் ஆறு- சீர் இறைவன் நமக்கு கொடுத்த சீர் ஒளி - உயிர். அந்த ஒளியை கொண்ட இரு மூன்று
வட்டம் கொண்ட இரு கண்களே ஆறுமுகம் என்றார். முகத்து முகம் கண்!

பண்ணிரு தோள் - பன்னிரு கலையுடைய வலக்கண் தாமரைதான் - தாமரை
போன்ற திருவடி - இருகண். வேல் மூன்று ஜோதி சேர்ந்த நிலை. மயில் பலவர்ண ஒளி.

கோழி - ஒலியை குறிக்கும். கார் கொண்ட - மழை போல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் நிலையில், தணிகாசலம் - நம்
காமகுரோதாதிகள் எல்லாம் தணிந்தபோது, முருகன் - ஒளி என் கண்ணுற்றதே -
என் கண்ணில் தெரிகிறது. பாலகனாயிருந்த போதே வள்ளலார் மாபெரும் ஞான அனுபவ நிலை எய்தினார்.


ஞான சற்குரு சிவசெல்வராஜ்
திருவருட்பா மாலை

- தொடரும்

Saturday 3 September 2016

கந்தர் சரணப்பத்து


அழகா அமலா சரணம் சரணம்
பொருளா எனைஆள் புனிதா சரணம்
பொன்னே மணியே சரணம் சரணம்
மருள்வார்க் கரியாய் சரணம் சரணம்
மயில்வா கனனே சரணம் சரணம்
கருணா லயனே சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம் 


கந்த பெருமானை பாடினார் வள்ளலார். கந்தன் - ஒளியானவன்.
சிவத்தின் 6 கண்களிலிருந்து 6 நெருப்பாக உருவானாவனல்லவா ?
சிவமாகிய பேரொளியிலிருந்து தோன்றிய ஒளியே கந்தன். அந்த
கந்தனே - ஒளியே அருள் தரவல்லது . அமுதம் தரவல்லது.

அந்த ஒளி பொருந்திய பொருள் தான் - கண். அதுதான் மெய்ப்பொருள்.
நமை  ஆண்டு கொண்டிருப்பது  அவ்வொளியே, அந்த ஒளி பொன் போல்
அந்திமாலை சூரியன் போல் தக தக என ஜொலிக்கும் ஜோதி. அது
இருப்பது கண்மணியில், மாயை மயக்கம் உள்ளவர் அறிய முடியாதது.
மயிலின்தோகை பலவர்ணமுடையது போல பல வர்ண ஒளி காட்சி
தருவது. கருணையே வடிவான கடவுள் ஒளியான கந்தன் அவன்
திருவடிகளே நம் இரு கண்கள் அதுவே நான் சரண் புகும் இடம். அந்த
திருவடிகளிலே அடைக்கலம் என்கிறார்.

பண்ணோர் மறையின் பயனே
விண்ணே ரொளியே
உணர் வே
கண்ணே மணியே சரணம்  - பாடல் 2

ஓசை நயம் மிகுந்த இசைப்பதற்கு சிறந்த வேதங்களின் பயனான
- அதிலிருந்து அறிந்து கொள்ளும் சுருதியான ஒளியே! விண்ணில்
நிறைந்த ஒளியே! என் உணர்வாயிருக்கும் ஒளியே! என் கண்ணே
கண்மணியே நீயே சரணம்.

முடிய முதலே
வடிவே லரசே
அடியார்க் கெளியாய் - பாடல் 3

முடிவே இல்லாத முதற் பொருளே  ஜோதி, வடிவேல் அரசே
சூலாயுதம் தாங்கிய சக்தி கொடுத்தாள் ஞானவேல், சூரிய
சந்திர அக்னியாக முகூறாக இருக்கும் நம் முச்சுடரை
சக்தியாகிய இடக்கலை துணை கொண்டு சிவமாகிய வலக்கலையை
சேர்ந்தால் சக்தியும் சிவனும் சேர்ந்து அக்னியை தோற்றுவிக்கும்.
முருகன் - சண்முகன் பிறப்பான், அந்த சண்முகன் பிறப்பை - நாம்
அக்னி கலை அனுபவம் பெறுவதே - முக்கூறாய் உள்ள ஜோதியை
இணைத்தால் அது வேலாகும் - ஞான வேலாகும் . நாம் ஒளியை
பெற்றால் ஞானம் கிட்டும்.

பூவே மணமே
கோவே குகனே
குருவே திருவே
சிவ சண்முகன்  - பாடல் 4

பூவே  - கண்மலரல்லவா? மணமே - பூ மணப்பது போல்
ஒளிக்கும் மனம் உண்டு.கண்மலரில் உள்ள ஒளி மணமிகுந்தது.
கோவே என்றால் தலைவனே, குகனே - குகையில் இருப்பவன்.
கண்மணி மத்தியில் உள்ள சிறு துவாரத்தின் உள் குகை போன்ற
இடத்தில இருப்பவன் குகன். நாம் தியானம் செய்ய முதலில்
வெளியே ஒரு குரு மூலமாக தீட்சை பெறுவது அவசியம்.  வெளியே
உள்ள காரண குருவை பெற்று சாதனை செய்து வந்தால்  உள்ளே
குகனே காரிய குருவாக வந்து அமைவான்.

அவன் - குகன் யார்? அவன்தான் திருவாகிய அந்த இறைவன். நம்முள்
இருக்கும் இடம் உயிர் ஆத்ம ஜோதி அவன் சிவம் - ஒளி ஆறுமுகங்கொண்ட
அருட்பெருஞ்சோதி.

கடவுள் மணியே சரணம். - பாடல் 5
கட - உன்  - மணியே - உன் கண்மணிக்குள் கடந்து போவாயாக! அங்கே இருக்கும்  ஒளியே - கந்தன் அவன் பாதமே சரணம் அடைக்கலம்.

நடுவாகிய நல்லொளியே சரணம். - பாடல் 6

நம் தலையின் மத்தியில் - நடுவில் இருக்கும் ஒளியே - அக்னிகலையே  சரணம்.

"உச்சிக்கு கீழடியோ அண்ணாவுக்கு மேல்வைத்த விளக்கு நித்தம்
எரியுதடி வாலைப்பெண்ணே" -
என்ற சித்தர் பாடல் பாருங்கள்.

ஒளியுள்     ஒளியே சரணம்  - பாடல் 8

ஒளிக்குள் ஒளியாக துளங்குபவன் சிவம் - சுப்பிரமணியம் ஆனது. சுப்பிரமணியத்துக்குள் இருப்பது சிவந்தானே . ஒளியான காந்தனுக்குள் ஒளியாக விளங்கும் சிவமே ஒளியே அடைக்கலம்.

அறுமா முகனே சரணம் - பாடல் 9


அறு - மாமுகனே - என்வினைகளை அறுத்து காப்பாய்! மாமுகன் பெரிய ஜோதியானவனே அடைக்கலம்.

வேதப்பொருளே
நாதாத்தொலியே  - பாடல் 10

நான்கு வேதங்களும் உரைப்பது 'பொருள்' ஆன உன்னைப் பற்றியே 'பொருள்''  என்றால் மெய்ப்பொருள்.  நம் மெய்யாகியே உடம்பில் உள்ள பொருள் கண். கண்ணில் உள்ள  ஒளியாக இறைவன் இருப்பதையே எல்லா வேதமும் கூறுகிறது. ஒளி இருக்குமானால் ஒலி இருக்கும்! ஒலியும் ஒளியும்  சக்தியும் சிவமும் போல் இணை புரியாதது. சேர்ந்தே இருக்கும்.நாத விந்து கலாதி நமோ நம என்பது ஒலியாக ஒளியாக உள்ள இறைவனே
வணக்கம் என்பதுதான்.


ஞான சற்குரு சிவசெல்வராஜ்
திருவருட்பா மாலை

- தொடரும்

தெய்வமணிமாலை


திருவோங்கு புண்ணியச் செயலோங்கி யன்பருள்
          திறலோங்கு செல்வ மோங்கச்
          செறிவோங்க வறிவோங்கி நிறைவான வின்பந்
          திகழ்ந் தோங்க அருள் கொடுத்து
     மருவோங்கு செங்கமல மலரோங்கு வணமோங்க
          வளர்கருணை மயமோங்கி யோர்
          வரமோங்கு தெள்ளமுத வயமோங்கி யானந்த
          வடிவாகி யோங்கி ஞான
     உருவோங்கு முணர்வினிறை யொளியோங்கி யோங்குமயில்
          ஊர்ந்தோங்கி யெவ்வுயிர்க்கும்
          உறவோங்கு நின்பதமென் னுளமோங்கி வளமோங்க
          உய்கின்ற நாளெந்த நாள்
     தருவோங்கு சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர்
          தலமோங்கு கந்த வேளே
          தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
          சண்முகத் தெய்வ மணியே.


வள்ளல் பெருமான் தெய்வமணிமாலை என்று சென்னை கந்தக்
கோட்டத்தில் அருள் வழங்கும் சண்முக தெய்வத்தை போற்றி
பிராத்தித்து வேண்டிய பாடல்கள்.

புறத்தில் சென்னையில் கந்தகோட்ட முருகனை பாடியது. இதன்
அகப்பொருள் நம் சென்னியில் அமைந்துள்ள கோட்டம் கண்
என்பதாகும். கோட்டம் என்றால் கோயில். தெய்வம் இருப்பது கோயிலிலே
தானே! தெய்வம் சண்முகம்  அதாவது ஆறுமுகம். இருகண்கள் தான் ஆறுமுகம்.

1 கண் 3 வட்டம் 3 முகம் 2 கண்ணும் சேர்ந்து 6 முகம். ஆறுமுகமான
பொருள் - மெய்ப்பொருள் தெய்வமணி - தெய்வம் இருக்கும் மணி கண்மணியே, நீர் கண்ணில் இருப்பதால் தண்முகம். கண்மணியில் உள் ஒளி இருப்பதால் உண்முகம் -உள்முகம் துய்யமணி - கண்மணி தூய்மையானது. திருவாகிய தெய்வம் - ஒளி  முகத்துக்கு முகமாக கண்மணியில் உள்ளே ஒளியாக இருக்கிறது. ஒளி ஓங்கி வருமல்லவா? அதைத்தான் வள்ளலார் ஓங்கி ஓங்கி ஓங்க என்று பலவாறாக பாடியுள்ளார்.

"கண்மணியுள் உள்ள ஒளி ஓங்கி வளர அருள்புரி  இறைவா! "ஒளி ஓங்கி
வளர வளர எல்லாம் கிடைக்கும்!

'ஓங்கு மயில் ஊர்ந் தோங்கி மயில்'  என்றால் ஒளி.பலவர்ண ஒளி, அது
ஊர்ந்து ஊர்ந்து கண்மணி  ஒளியை உள்ளே கொஞ்சங் கொஞ்சமாக கொண்டு சென்று - அக்னிகலையுடன் சேரும். தியான அனுபவ நிலையை கூறுகிறார் வள்ளலார். 9 வயதில் பாடிய பாடல் இது! பிறவி ஞானி வள்ளலார் என்பதற்க்கு இப்பாடல் ஒன்றே சாட்சி.

'செங்கமல மலரோங்கு' நம் கண்மணி தவத்தால் சிவமாக்கும் தாமரை மலர் - கமலம். மலர் என்றால் கண்மலர் சிவந்த கண்ணே செங்கமலமலர்!

கண்ணில் மணியில் உள்ளில் இருக்கும் ஒளியான கந்தனை - சண்முகனை - இரு கண்மணி ஒளியை தியானிக்க அவ்வொளி உள்ளே ஊர்ந்து சென்று அக்னியை 3வது கண்ணை அடையும் இதுவே தியான அனுபவம்.

'துரிசறு சுயஞ்சோதியே ' பாடல் 5

துரிசு என்றால் நம் பாவ புண்ணியமான கர்மவினை. அது நாம்
இறைவனை அடைய தடையாக இருக்கிறது. நாம்  தியானம் செய்து
நம் கண்மணியிலுள்ள சுயம் ஜோதியை ஓங்கி வளர செய்தால் நம்
துரிசு அற்றுப்போகும். வினை இல்லாது போனாலே முக்தி.

'அலையிலா சிவ ஞான வாரியே  - பாடல் 7

வாரி என்றால் கடல். கடலில்  அலை உண்டு அலையில்லா
கடல் சிவம் விளங்கும் ஒளி பொருந்திய  நமது கண்ணே. ஒளி 
மிகுந்தால் ஞானமே

'திருமலரடி ' பாடல்   8

திருவாகிய இறைவன் - ஒளி மலராகிய கண்மலரில் உள்ள அதுவே
அடி - திருவடி - இறைவன் திருவடி எனப்படும்.

'உத்தமர் ' பாடல்  8

உள்+ தமர்  - உத்தமர், கண்மணியின் மத்தியில் உள் உள்ள துவாரம்
தமர் என்றால் ஓட்டை - துவரம். கண்மணியின் மத்தியில் உள்ள
சிறு துவாரம் அடைபட்டு ள்ளது. உள்ளே ஒளி - சிவம் இருக்கிறது.
உள் - தாமரை உள்துவாரத்தை அறிந்தவரே உத்தமர்.

நாம் பிரமம்  - பாடல் 11
நாம் கடவுள் பிரமமே நம்முள்ளும் நம் கண்மணியுள்ளும் ஒளியாக
திகழ்கிறது. பிரம்மத்தின் ஒரு அணு அ ளவு  - பேரொளியின் ஒரு
சிறு ஒளி நம்மில் நம் உயிராக உள்ளது.

பந்தமற நினையெணா - பாடல் 18
நமது  பந்தம் அறவேண்டுமாயின் இறைவனை எண்ண வேண்டும்.
எட்டும் இரண்டும் என்ன வேண்டும். நினைக்க வேண்டும்.நினைந்து
எண்ணி தவம் புரிந்தால் நம் பந்தமாகிய கர்மவினை இல்லாது
போகும்.

'நின்னடிச்சீர் மகிழ்கல்வி  - பாடல் 22
நின்னடி - இறைவன் திருவடி - நம் இரு கண்கள் - சீர் - இறைவன் நமக்கு
கொடுத்த சீர் ஒளி . கண்களில் ஒளி இருப்பதை அறிவது அதை ஒங்க செய்வதாகிய கல்வி - சாகா கல்வியை கற்க வேண்டும் . இதுவே மகிழ்ச்சியை - பேரின்பத்தைதரும் சாகாகலையாகும் .

நம் மனமானது பொன்னாசை , மண்ணாசை , பெண்ணாசை கொண்டு அலைகிறது . அது எப்படி இருக்கிறது என்றால் பேய்பிடித்து கல்குடித்து தடியால் அடிபட்டு பைத்தியம் பிடித்த  குரங்கு போல் என்கிறார் பாடல் 23-ல்

பிரணவா கார சின்மய விமல சொரூபம் - பாடல் 24

பிரணவம் - ஓம் - அ . உ . ம . ஆகும் . அ - வலது கண் உ - இடது கண் . இரண்டு கண்ணும் உள் முகமாக சேரும் இடம் அக்னி  ம . ஆகும் . மூன்றும் சேர்ந்தால் ஓங்கார நாதம் கேட்கும் . சின்மயம் - சின் முத்திரை வைத்தால் அறியலாம் . சின்முத்திரை வைப்பதே கண்ணை குறிப்பால் உணர்த்தத்தான் . ஆள்காட்டிவிரலால் கட்டைவிரலின் மத்தியில் உள்ள கோடை தொட்டு இருப்பதே சின்முத்திரை . கட்டைவிரல் நுனியிலிருந்து
முதல் வரி வரை உள்ள அளவே நம் கண் அளவு . இரு விரலும் தொட்டிருக்கும்போது பார்த்தால் தெரியும் வட்டம் கண்போன்றிருக்கும் . எல்லாமே சூட்சமம் விமலம் என்றால் மலம் இல்லாதது சுத்தம் ஒளி ஒன்றுதான் .

பிரம்மன் இனி என்னை பிறப்பிக்க வல்லனோ - பாடல்  27

நாம் நம் கண்மணி ஒளியை தவம் செய்து ஒங்கச் செய்தால் நம் வினைகள் இல்லாது போகும் . வினைகள் தானே பிறப்புக்கு ஆதாரம் !  வினைகள் இல்லையெனில் பிரம்மன் இனி எப்படி படைக்க முடியும் ?

நின் பதத்தியான முண்டாயில்  பாடல்  28
இறைவா உன் பதம் - பாதம் - திருவடி தியானம் இருக்குமானால் எல்லா செல்வமும் பெற்று இவ்வுலகிலும் வாழ்வாங்கு வாழலாம் .

முத்திக்கு முதலான முதல்வனே மெய்ஞ்ஞான மூர்த்தியே முடிவிலாத முருகனே -பாடல் 30
நாம் முக்தி பெற வேண்டி இரு கண் ஒளியை தியானம் செய்யும்போது முதலில் வருவது முதல்காட்சி  சண்முகம் இரு கண்கள் . நம் இரு கண்களையும் நம்முன் காணலாம் .முருகன்தான் முதலில் காட்சி தருவான் ! முருகு என்றால் அழகு - இளமை அது நம்கண்தானே ! கண்தானே அழகு ! கண் தானே என்றும் இளமையானது !

வள்ளலே என்னிருகண்மணியே ஏன் இன்பமே - பாடல் 31

வள்ளலே - இறைவனே என் இரு கண்மணியே - ஏன் இரு கண்மணியில் ஒளியாக துலங்கும் இறைவனே எனக்கு பேரின்பம் தருபவன் . நம் இரு கண்மணியில் உள்ள ஒளியை ஒங்கச் செய்தாலே பேரின்பம் கிட்டும் .

திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் பாலகனாயிருந்தபோது பாடிய ஒப்பற்ற பாடல்கள் இது !

ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் . திருவருட்பா 6000 பாடல்களும் எப்படியிருக்கும் என்பதற்கு இதுவே உதாரணம் . முழுக்க முழுக்க ஞானம் . பிறவி ஞானி வள்ளலார் .

9 வயது பாலகன் பாடிய பாடல்களா இவை என நம்மை மலைக்க வைக்கிறது ? வள்ளலே -இறைவனே வள்ளலாரானார் ! பரிபூரணமாக அருட்பெருஞ்ஜோதி உறைந்த  உருவமே வள்ளல் இராமலிங்கர் !


ஆன்மீக செம்மல் ஞான சற்குரு
சிவசெல்வராஜ்

நூல்:  திருவருட்பாமாலை

- தொடரும்

Friday 2 September 2016

திருவருட்பாமாலை 3

திருவருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம் வடலூரில் தர்மச்சாலை சத்திய ஞான சபை நிர்வாகத்தை நடத்திவருவதோடு வள்ளல் பெருமானின் பாடல்கள் 2 தொகுதி உரைநடை 1 தொகுதி என் 3-ம் சேர்த்து
மலிவு விலையில் மக்களுக்கு வழங்கி வருகிறார்கள்.

உலகத்து ஞானம் வழங்கும் புண்ணிய பூமி இந்தியாவில் ஞான ஆரண்யமாம்
தமிழகத்தில் வந்துதித்த திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள்
கருணையால் வாழந்துவரும் அடியேனை ஒரு பொருட்டாக கருதி , தொடர்ந்து  தாராளமாக காணிக்கை தந்து சபை வீடு கட்டி தந்து எம்மை ஆதரிக்கும் நெய்வேலி தாய் ஜோதி ஸ்ரீ நிர்மலா தேவி அவர்கள் அன்பால் இந்நூல் வெளியாகிறது . ஞானம் இங்கே பரசியமாகிறது!

திருவருட் பிரகாச வள்ளல் பெருமான் உள்ளத்தில் இருந்து உவகையுடன் உரைப்பார்  எனக்கருதி அடியேன் மெய்ஞ்ஞான உரை எழுத சம்மதித்தேன். அடியேனை குருவாக்கி  மெய்ப்பொருள் விளக்கம் கொடுத்து ஞான சரியையில் கூறிய படி திருவடி தீட்சை கொடுத்து நாடி வரும் எல்லோரையும் மரணமிலா பெருவாழ்வு பெற அழைத்து செல்கிறார்
வள்ளலார்!

1980 - லிருந்து 28 வருடமாக அடியேனை வழி நடத்தி வாழ்விக்கும் வள்ளல் இராமலிங்கரை பணிவதே தவிர எமக்கு வேறு வேலையில்லை! அவர் இட்ட பணியை செய்வதே எம் கடன்.

யாதும் ஊரே யாவரும் கேளீர்

மரணமிலா பெருவாழ்வு பெற முதலில் உபதேசம்! அடுத்து தவம் செய்யும் முறை உணர்த்தி திருவடி தீட்சை! மெய்ப்பொருளை அறிந்து உணர்ந்து எல்லோரும் இன்புற்று வாழ வழி காட்டுகிறார் வள்ளலார். அடியேன் ஒரு கருவியாக செயல்படுகிறேன்.

" ஆட்டுவிக்கிறார் ஆடுகிறேன்"
அருட்பா படித்தால் அறிவில் தெளிவு !
அருட்பா படித்தால் அறியலாம் ஆண்டவனை!
அருட்பா படித்தால் அமைதி கிட்டும்!
அருட்பா படித்தால் ஆனந்தம் பெறலாம்!
அருட்பா படித்தால் ஆறறிவு துலங்கும்!
அருட்பா படித்து உணர்ந்தால் ஞானி!
படியுங்கள் - உணருங்கள் - தவம் செய்யுங்கள்!
கிட்டும் மரணமிலா பெருவாழ்வு!

என்றும் உண்மையுள்ள
சிவசெல்வராஜ்

திருவருட் பாமாலை - 2

எத்தனையோ மகான்களின் எத்தனையோ ஞான நூல்கள் இருப்பினும்
அத்தனையும் தன்னகத்தே கொண்டு எல்லாவற்றிலும் சிறந்து விளங்குகிறது
திருவருட்பா!

வள்ளல் பெருமான், பொய்புகலேன் புனைந்துரையேன் சத்தியம் சொல்கிறேன் என்று உலகருக்கு தயவுடன் அன்புடன் பண்புரைக்கின்றார். அது மட்டுமா? "நான் உரைக்கும் வார்த்தை எல்லாம் நாயகன் தன் வார்த்தையன்றோ!" என்றல்லவா பறைசாற்றுகின்றார்.

திருவருட்பா பாடினால் கிட்டும் பேரறிவு! உணர்ந்தால் மட்டும் கிட்டும் ஞானம்! எத்தனை முறை படித்தாலும் தெவிட்டாத தெள்ளமுது திருவருட்பா!
"பாட்டுவித்தால் பாடுகின்றேன் "என இறைவன் தன்னை பாட பணித்ததால் வள்ளல்பெருமானால் இறைவனுக்கு சூட்டப்பட்ட பாமாலைகளே திருவருட்பா!

திருவருட்பா முழுமையும் கடினமுயற்ச்சி செய்து சென்னை ஆ பாலகிருஷ்ணன் பிள்ளை அவர்கள் 12 தொகுதிகளாக வெளியிட்டார். சன்மார்க்க அன்பர்கள் அகமிக மகிழ்ந்து திருவருட்பா
பாதிப்புச் செம்மல் என்று அழைத்து பெருமைப்படுத்தினார்.

சென்னை அருட்பெருஞ்ஜோதி அச்சகத்தார் முதல் 5  திருமுறை ஒரு தொகுதியாகவும் 6- ஆம் திருமுறை ஒரு தொகுதியாகவும் அழகாக நேர்த்தியாக வெளியிட்டு சன்மார்க்க சங்கத்தவர்களை
மகிழ்வித்தனர்.

சன்மார்க்க தேசிகன் தவத்திரு ஊரன் அடிகளார்  சன்மார்க்கத்துக்கே தன்னை அர்ப்பணித்து கொண்ட பெரியவர்.வள்ளல் பெருமான் வாழ்க்கை வரலாற்றை மிக சிறப்பாக நேர்த்தியாக தெளிவாக எழுதி வெளியிட்டு சன்மார்க்க உலகிற்கு பெருந்தொண்டாற்றியுள்ளார்.வள்ளல் பெருமான் அருட்பாக்களை
கால முறைப்படி அழகாக தொகுத்து ஆறு திருமுறைகளாக பகுத்து சிறந்த உயர்ந்த பதிப்பாக இரு பகுதியாக வெளியிட்டு மாபெரும் சேவை செய்துள்ளார். நன்கு ஆராய்ந்து பதிப்பித்த அவரின்
தொண்டு திருவருட்பா வரலாற்றில் சன்மார்க்க வரலாற்றில் பொன்னெழுத்தால் பொறிக்கத்தக்கது!

சன்மார்க்க உலகமே சன்மார்க்க தேசிகன் தவத்திரு ஊரன் அடிகளாருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளது.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகம் ஒளவை துரைசாமி பிள்ளை அவர்களை கொண்டு திருவருட்பா முழுமைக்கும் உரை எழுத வைத்து 10 பாகமாக வெளியிட்டுள்ளார்கள்.

--- தொடரும்


திருவருட் பாமாலை - 1

திருவருட்பா - மாலை !
திருவருள் - பாமாலை!

உள்புகு முன்!

"திருவருட்பா " எனும் அதி உன்னதமான , ஞான களஞ்சியமான
இந்நூலை இயற்றியவர் திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க
சுவாமிகள் ஆவார்கள்.

வள்ளலாரின் சீடர் இறுக்கம் இரத்தின முதலியார் அவர்களின் வற்புறுத்தலின்
காரணமாக வள்ளல் பெருமான் திருவருட்பா நூலை வெளியிட இசைந்தார்.
வள்ளல்பெருமானின் சீடர் தொழுவூ வேலாயுத முதலியார் பெருமானின்
பாடல்களை ஆறு பகுதிகளாக பிரித்து ஆறு திருமுறைகளாக திருஅருட்பா என வெளியிட்டார்.

முதல் நான்கு திருமுறைகள் வள்ளல் பெருமான் காலத்திலேயே 1867 பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. பெருமானும் கண்ணுற்றார்.

ஐந்தாம் திருமுறை வள்ளல் பெருமான் ஜோதியாகி ஆறுவருடம் கழித்து  1880 இல் வெளியிடப்பட்டது.

வள்ளல் பெருமான் அருளிய ஏனைய பாடல்கள் அனைத்தும் ஆறாம் திருமுறையாக தொகுக்கப்பட்டு சோடாவாதனம் சுப்பராய செட்டியார் அவர்களால் 1885 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

திருஅருட்பா ஆறுதிருமுறைகளையும் ஒரே நூலாக பொன்னேரி சுந்தரம் அவர்கள் 1892 ஆம் ஆண்டு வெளியிட்டார்கள்.

வள்ளல் பெருமான் இதயத்தில் தங்கிய அன்பர்கள் பலரும் சிறியதும் பெரியதுமாக திருவருட்பா பாடல்களை வெளியிட்டனர். 19-ம் நூற்றாண்டிலும் 20- நூற்றாண்டிலும் திருவருட்பா நூல்கள் ஏராளமாக வெளிவந்தது.

தமிழக மக்களை வெகுவாக கவர்ந்த பாடல்கள் நிரம்ப பெற்றது திருவருட் பிரகாச வள்ளல் இராமலிங்க சுவாமிகள் அருளிய திருவருட்பாவே!

அருட்பா பாடல்களை பாடியே பேர் பெற்றவர்கள் ஏராளம்! தேனினும் இனிய
தீந்தமிழ் பாக்களாலான திருவருட்பா சிறியோர் முதல் பெரியோர் வரை ,
சமாசாரிகள் முதல் சந்நியாசிவரை எல்லோரையும் கவர்ந்தது. பாடி மகிழ்ந்தனர் பலர்! ஆடி மகிழ்ந்தனர் பலர்!

திருவருட்பா எல்லோராலும் போற்ற பட காரணம், மிக மிக எளிமையாக மிக மிக இனிமையாக ஒவ்வொரு பாடலும் அமைந்தது மட்டுமல்ல ! கருத்தாழம் மிக்க சொல்லோவியமாகமும் திகழ்ந்தது திருவருட்பா!

--தொடரும்